1. தண்டோரா என்ற பதிவர் வலைச்சரத்தில் என்னுடைய வலை பக்கத்தை அறிமுகப்படுத்தினார். என்னை ஆப்பரசி என்று வர்ணித்தார். ஆணாதிக்கத்துக்கு ஆப்படிக்கும் ஆப்பரசி. மிக்க மகிழ்ச்சி. பெரும்பாலானவர்கள் என் வலை தளத்துக்கு வரவே அச்சப்படுகிறார்கள். ஆணாதிக்க சிந்தனையுடைய யாரும் என் வலை பக்கத்துக்கு வர அச்சப்படுவார்கள். என் எழுத்துக்களை சரியாக புரிந்துகொள்ள சில பேர் இன்னும் இருக்கிறார்கள் என்று அறிகிற போது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. மீண்டும் நன்றி தண்டோரா.
அடுத்ததாக வருகிறார் ரோஷ்மா. அதாவது பெண் பெயரில் என்னை திட்டி எழுதினால் நான் உடனே ஐயஹோ பெண்களுக்கு என் இனத்துக்கே நான் எழுதுவது பிடிக்கவில்லை என்று மூடிக்கொண்டு போய்விடுவேனா. பெண் வேடமிட்ட ரோஷ்மா ஒரு கருத்தை முன் வைக்கிறார். சரளமான ஆங்கிலத்தில் என் பதிவுகளை திட்டுகிறார். சரி போகட்டும் . பிறகு அவர் சொல்லும் ஒரு விஷயத்தை தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் புரட்சிகரமான கருத்துக்களை எழுத்வேண்டுமென்றால் தமிழச்சி எழுதுவதை போல் எழுதவேண்டுமாம். அவரது வலை தளத்தின் சுட்டியையும் இணைத்துள்ளார். என்னுடைய எழுத்துக்கள் பலரை நோயாளிகள் ஆக்குமாம். ஐயா தமிழச்சியை போல் எழுத நான் பல அடுக்கு புத்தகங்கள் படித்த அறிவாளியோ பெரியாரை கரைத்து குடித்த பெரியார்தாசியோ அல்ல. பிறகு நேர்த்தியான தமிழில் கிரேக்க வரலாற்றில் ஆணாதிக்கம் போர்ச்சுகீசிய ஆண்கள் பெண் உடை உடுத்தினார்கள் என்றெல்லாம் வரலாற்றை மேற்கோள் காட்டி எழுத நான் அதிகம் படிக்கவில்லை ஐயா. என்னுடைய குரல் ஒரு பாரம தமிழச்சியின் குரல். அது தெரு சண்டை போல் கொச்சையா இருக்கலாம். இருக்கும். அப்படித்தான் நான் கத்த விரும்புகிறேன். அன்றாடம் நான் காணும் ஆணாதிக்க போக்கை எனக்கு தெரிந்த மொழியில் கை வந்த வார்த்தைகளை பயன்படுத்தி கொஞ்சம் வன்மையாக எழுதுகிறேன். அவ்வளவு தான். எனக்கு கவிதை எழுதவோ புறநாநூறு படிக்கவோ நேரமில்லை. விபசார விடுதிகளில் அல்லல்படும் ஒரு பெண் டயரி குறிப்பு எழுதினால் ஓத்தா தெவிடியா பையா என்ற இரண்டு வார்த்தைகள் கூட ஒரு கவிதை தான். அதை புரிந்துகொள்ளுங்கள். ஒடுக்கப்பட்டவர்களும் ஏழைகளும் பாமரர்களும் அழகாக தமிழ் கற்றுக்கொண்டு இமேஜ் பாதிக்காமல் எழுதவேண்டுமென்றால் அதற்கு நான் ஆளல்ல. உங்களுக்கு என் வலை மனை பிடிக்கவில்லை என்றால் வரவேண்டாம். யாரையும் வற்புறுத்தி நான் அழைக்கவில்லை. அழைக்க நான் என்ன வேசியா.
நான் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். பெண்கள் பெரும்பாலானவர்கள் சமையல் குறிப்புகளும் வீட்டை சுத்தமாக வைக்கும் டிப்ஸும் பிறகு ஹார்ப்பிக் வைத்து டாயிலட் கழுவுவதை பற்றி செய்முறை விளக்கங்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பாலோவர்ஸ். அதற்கு பின்னூட்டம் போடும் கூட்டம் ஆண்கள் கூட்டம். ஆக சமையல் குறிப்பும் டாயிலட் கழுவுவதை பற்றி பெண்கள் எழுதினால் அதற்குத்தான் பெண்கள் இருக்கிறார்கள் என்ற ஆணாதிக்க நம்பிக்கை வலுப்பெறுவதனால் ஆண்கள் செய்யும் நன்றிக்கடன் தான் பின்னூட்டமோ என்று தோன்றுகிறது. ஆக சமையல் குறிப்பு எழுதினால் நிறைய பாலோவர்ஸ் கிடைக்கும் போலிருக்கிறது. நானும் எழுதுகிறேன். நிறைய ஆண்களுக்கு பெண்கள் அடுக்களை சம்மந்தமாக எழுதினால் ஒரு திருப்தி.

உடனே பெண் சிகிரெட் புகைக்கும் புகைப்படத்தை ஏன் போடுகிறீர்கள் என்று கேட்பார்கள். உங்களுக்கெல்லாம் குளித்து தலையில் டவல் கட்டிக்கொண்டு புடவை சுற்றியபடி சாமி கும்பிடும் பெண் படம் போட்டால் சூப்பரா இருக்கும் இல்ல....
என் வலைத்தளம் பலருக்கு எரிச்சலூட்டுகிறது. இங்கே வர பல ஆண்கள் அச்சப்படுகிறார்கள். நான் தொடர்ந்து அவர்களின் முகமூடிகளை கிழிப்பதால் அவர்களுக்கு பயம். திருடனை பற்றி செய்தி வந்தால் திருடனோ அல்லது அவனுக்கு ஆதரவு தெரிவிப்பவனோ தானே எரிச்சல் அடைய வேண்டும். ஏன் நீங்கள் பதட்டப்படுகிறீர்கள். காரணம் மறைமுகமாக ஆணாதிக்கம் என்ற மாய வன்மத்தால் விளையும் சுகங்களை உங்களுக்கு தங்கு தடையின்றி அளிக்க பெண்கள் எப்போதும் ஏமாளிகளாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போனால் உங்களுக்கு பொசுக்கென்று கோபம் வந்துவிடுகிறது.
வரதட்சணை புழங்கும் ஒவ்வொரு திருமணமும் மாட்டு வியாபாரமே அல்லது அதை விட கீழ்த்தரமானது. நீங்கள் சந்தையில் ஒரு மாடு வாங்க போகிறீர்கள். எத்தனை லிட்டர் பால் கறக்கும்....அவனுடைய வருமானம் என்ன?.....வயது என்ன வசதிகள் என்னென்ன என்றெல்லாம் பார்த்துவிட்டு மாட்டை வாங்குகிறோம். வாங்கிவிட்டு மாட்டை ஒரு கயிறு கட்டி இழுத்துக்கொண்டு வந்து நம் வீட்டில் கட்டுவோம். ஆனால் திருமணம் என்னும் மாட்டு வியாபாரத்தில் தான் பெண் காசு கொடுத்து ஒரு மாப்பிள்ளையை வாங்கிவிட்டு அந்த மாப்பிள்ளையோடு தங்க போகிறாள். அதாவது மாட்டை வாங்கி சந்தையிலேயே மாட்டோடு படுத்துக்கொள்ள வேண்டும். நாம் வாங்கிய மாடு நம்மோடு வந்து இருக்காது. மாறாக நாம் காசு கொடுத்து மாட்டை வாங்கிவிட்டு அதன் இடத்திற்கு அதன் இஷ்டத்திற்கு நாம் இருக்க வேண்டும். அட கொடுமையே....என்னை பொருத்தவரை வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் ஒவ்வொரு ஆணும் வீட்டோடு மாப்பிள்ளை ஆகிவிடுவது தான் சரி. காரணம் உங்களை காசு கொடுத்து வாங்கியிருக்கும் பெண்ணுக்கு தான் நீங்கள் சொந்தம். அவள் வசிக்கும் இடத்துக்கு நீங்கள் போய் வசிக்கவேண்டுமே தவிர அவளை உங்கள் வசிப்பிடத்துக்கு கொண்டு வருவது சரியா? அப்படி ஒரு நடைமுறை நம் நாட்டில் இருக்கிறதென்றால் பெண்கள் மாட்டை விட கேவலமானவர்கள் என்று தானே அர்த்தம். அப்படி ஒரு அர்த்தம் கற்பித்து ஆணாதிக்க சிந்தனையோடு வாழும் இந்த சமுதாயத்தில் பெண்ணே உனக்கு திருமணம் தேவையா?
தமிழச்சியை போல் என்னால் எழுத முடியாது. என் கோபத்தை பச்சை பச்சையாய் தான் காட்டுவேன்.
சரி நம் விஷயத்துக்கு வருவோம். இந்தியா ஒரு வளமான நாடு. இங்கே நம் முன்னோர்கள் அதாவது ராஜாக்கள் காலத்திலிருந்தே நாம் இரண்டு விஷயங்களுக்கு பேமஸ் ஒன்று குக்கிங் இன்னொன்று பக்கிங். அந்தப்புறம் அமைத்து நம் ராஜாக்கள் கலவி செய்துகொண்டிருந்த போது தான் மேலை நாடுகளிலில் மின்சாரமும் கம்ப்யூட்டரும் செய்துகொண்டிருந்தார்கள். நாம் இங்கே மதம் என்ற பெயரில் இந்திரனையும் சந்திரனையும் வணங்கிக்கொண்டிருந்த போது தான் மேலை நாட்டுக்காரன் நிலாவுக்கு ராக்கெட் செய்துகொண்டிருந்தான். அதாவது இந்தியா உருப்படாமல் போனதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு ஒன்று ஆணாதிக்க கலாசாரம் மற்றொன்று மூட நம்பிக்கைகளால் பொதிந்த மதம்.
உதாரணமாக பெண் கல்வியை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு என்றார்கள். இப்போது நாம் அடுப்பு ஊதாமலே எரிகிறதே என்ற கடுப்பு ஆண்களுக்கு இருக்கிறதோ என்னமோ. பெண் கல்வி எத்தனை ஆண்டுகளாய் இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த காலம் தொட்டு பெண் கல்வியை ஊக்குவித்திருந்தால் நம் நாட்டின் கல்வி அறிவு எவ்வளவு உயர்ந்திருக்கும். ஐம்பது சதவீதம் பெண்கள் என்று தோராயமாக வைத்துக்கொள்வோம். அப்படியானால் ஐம்பது சதவீத ஜனத்தொகை கல்வி அறிவு பெறாமல் அவர்களால் இந்த நாட்டுக்கு எதையும் அளிக்க முடியாமல் போனதே. அதன் பொருட்டு பொருளாதார வளர்ச்சியும் அறிவியல் வளர்ச்சியும் குறைபட்டிருக்கிறது. அதை பற்றி எல்லாம் நமக்கு என்ன கவலை நமக்கு சூடான ஆணாதிக்க எண்ணங்கள் செழித்தால் போதுமே. விதவைகள் வாழாவெட்டி இப்படி எல்லாம் பெண்களை நீங்கள் அடக்கி வைத்த காலத்தில் இந்தியாவின் ஜனத்தொகையில் சரி பாதி 50% இந்திய வளங்கள் முடக்கப்பட்டிருந்தன. பல நூற்றாண்டுகளாய் வெறும் 50% மைலேஜில் தான் இந்தியா முன்னேறிக்கொண்டிருந்திருக்கிறது. இப்படி 50% மைலேஜில் முன்னேறினால் எப்போது நாம் வல்லரசாவது?
இதை பற்றி மேலும் அடுத்த பதிவில் பார்ப்போம்