Tuesday, 11 August 2009

சோ அவர்களின் ஆணாதிக்கம்.

சமீபத்தில் சோவின் பேட்டி ஒன்றில் அவரது ஆணாதிக்க போக்கை உணர முடிந்தது. 33% இட ஒதுக்கீடு பற்றி ஒரு கேள்விக்கு அவர் என்ன சொல்கிறாரென்றால் பெண்கள் எல்லோரும் குடும்பம் கணவன் பிள்ளைகள் என மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு இட ஒதுக்கீட்டிலோ அரசியலிலோ ஈடுபாடு இல்லை. ஆனால் பெண்ணிய தலைவிகள் தான் இதை வலியுறுத்தி வருகிறார்கள். எனவே இட ஒதுக்கீடு அவசியமற்றது என்கிறார்.

சோவின் பயம் எனக்கு புரிகிறது. ஆண்களையும் பெண்களையும் சமமான ஒரு தளத்தில் முன்னேற விட்டால் பெண்கள் தங்கள் அறிவிலாலும் அழகாலும் திறமையாலும் ஆண்களை விட பன் மடங்கு முன்னேறி விடுவார்கள். அப்படி ஒரு காலம் வந்தால் எங்கே ஆண்கள் தங்களின் உண்மையான தாழ்ந்த நிலைக்கு போய்விட நேருமோ என்ற பயம் தான் அவரை இப்படி எல்லாம் பேச வைக்கிறது. அவருக்கு பெண்கள் எப்போதும் குடும்ப வரை முறையில் இருக்க வேண்Dஉம். தண்ணி கொண்டா டீ.....என்றால் பயபக்தியுடன் தண்ணி சொம்புடன் முன்னால் வந்து நிற்க வேண்டும். வீட்டு வேலைகள் செய்ய வேண்டும். தனக்கு செக்ஸ் இலவசமாக தன் விருப்பத்துக்கு தக்கபடி கொடுக்க வேண்டும். இது எல்லாம் பெண்கள் முன்னேறிவிட்டால் நடக்காது. எங்கே ஆண்களுக்கு பெண்கள் அவிழ்த்து எறியும் அழுக்கு ஆடைகளை துவைத்து போடும் நிலை வந்துவிடுமோ என்ற பதட்டத்தில் நம்மை எல்லாம் ஒரு போலி பிம்பம் வரைந்து அதை நம்ப சொல்கிறார். அந்த பிம்பத்தில் பெண் வீட்டை பார்த்துக்கொள்பவள். ஆண்கள் தெரு பொறுக்க தயாராக இருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்கிறார்.


என்னது நாங்க தம் அடிக்க கூடாது தண்ணி அடிக்க கூடாதா. அதை சொல்ல நீ யாரடா டுபுக்கு.நிச்சயமாக அந்த காலம் வரும். அப்போது நாங்கள் வீசி எறியும் அழுக்கு ஆடைகளை நீங்கள் துவைத்து போட வேண்டி வரும். வேலை வாய்ப்பிலும் படிப்பிலும் நீங்கள் பின் தள்ளப்படுவீர்கள். எங்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டி வரும். எங்கள் முன் கை கட்டி நின்று சம்பளம் வாங்கும் நிலை வரும். பேருந்துகளில் ஆண்கள் எல்லாம் தரையில் அமர்த்தப்படுவீர்கள். பெண்களை மதித்து அவர்களின் உயர்வை விரும்பும் ஆண்கள் மட்டுமே சமுதாயத்தில் மதிக்கப்படுவீர்கள். அந்த காலம் விரைவில் வரும். இப்படி நான் எழுதினால் என்னை தூஷிப்பார்கள்.

பெண் அடிமை தனத்தை களைந்து ஆண்களையும் பெண்களையும் சம வெளியில் வளர விடுங்கள். அப்போது பாருங்கள் உங்கள் அகங்கார போக்குகள் தகர்த்தெறியப்படும். இவர்கள் நமக்கு செய்த கொடுமைகள் எத்தனை எத்தனை.

சமீபத்தில் ஒரு பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். அதற்கு அவளை எப்படி எல்லாம் கொடுமை படுத்தினார்கள் தெரியுமா. சாஸ்திரம் சம்பிரதாயம் என்று நீங்கள் பெண்களை எப்படி எல்லாம் வதைக்கிறீர்கள். அவளின் வளையல்களை உடைக்கிறீர்கள். பூவை பறிக்கிறீர்கள். வெள்ளை ஆடை உடுத்த செய்கிறீர்கள். தாலியை பறித்து எறிகிறீர்கள். அது தரித்திரம் போகட்டும். மற்றபடி பெண்ணை விதவை என்றும் வப்பாட்டி என்று வாழாவெட்டி என்றும் அழைத்து அவளை ஒரு தாழ்ந்த நிலையிலேயே வைத்து இன்பம் காணும் சாடிஸ்டுகள் நீங்கள். பெண்களே இவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டாமா. கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் உயருங்கள். உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். உங்களை இப்போது கொஞ்சம் தலை எடுக்க விடுகிறார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆண்களை நம் காலடியில் கொண்டு வாருங்கள்.

அஜித் விஜய் என்று சண்டை போட்டுக்கொள்கிறீர்களே. ஒரு நடிகர் ஒரு நடிகையின் தொப்புளின் பம்பரம் விடுகிறார். பிறகு அவர் அரசியலில் புகுந்து சாதிக்கிறார். அந்த நடிகை டி.வி. சீரியல்களிலும் ஷோக்களிலும் வாய்ப்பு கேட்டு அலைய வேண்டிய அவல நிலை இருக்கிறது. நான் அந்த ஒரு நடிகரை மட்டும் சொல்லவில்லை. எல்லோரையும் சேர்த்து தான் சொல்கிறேன். பெண் கதாபாத்திரங்களை பற்றி என்ன வெளிப்பட்டு இந்த சமுதாயத்துக்கு கிடைக்கிறது.

இப்படி பல விதங்களிலும் ஒடுக்கப்பட்டு வரும் நாம் முன்னேற வேண்டும். கழுத்தில் தாலி கட்டி நம்மை அடிமையாய் பார்க்கும் இந்த ஆண் குஞ்சுகளின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும். வாழ்க்கையில் உயருங்கள்.

கர்நாடகாவில் பெண்கள் குடிக்க கூடாதென்று பப்புக்குள் போய் காட்டு மிராண்டித்தனமாக தாக்கினார்கள். அதே ஆண் குஞ்சுகள் பக்கத்து வீட்டு ஆன்டி கொஞ்சம் ஓர பார்வை பார்த்து அழைத்தாள் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு போவார்கள். ஆண்களுக்கு பெண்கள் செக்ஸ் அடிமைகளாய் வேண்டும். அவர்கள் குடிக்க கூடாது. வீட்டு வேலை செய்யவேண்டும். அழைத்தால் வந்து படுக்க வேண்டும். இவர்கள் வந்து ஆட்டிவிட்டு போய்விடுவார்கள். ஆண் வர்க்கமே எப்போது நீ திருந்த போகிறாய்.

ஒரு பின்னூட்டத்தில் ஒருவர் ஒரு கருத்தை சொல்லியிருந்தார். அதாவது பெண்களுக்கு சில வேளைகளில் பெண்களே எதிரிகள் என. நான் அப்படி பட்ட பெண்களையும் சாடுகிறேன். அவ்வாறான பெண்கள் எப்படிப்பட்ட மனநிலையில் அப்படி செய்கிறார்கள் என்று யோசித்து பார்க்க வேண்டும். ஒரு விதவை நல்ல ஆடை உடுத்துவதை ஒரு பெண்ணே கேலி பேசுவதாய் குறிப்பிட்டு இருந்தார் ஒரு நண்பர். கேலி பேசிய அந்த பெண் அடக்கு முறைகளுக்கு தன்னை சமர்பித்திருக்கிறாள். அவள் ஆணாதிக்க சமுதாயத்தின் அடக்குமுறைகளின் வாழ்ந்திருக்கிறாள். அதனால் தன் சக தோழி அந்த அடக்கு முறைகளை தகர்க்கிற பொழுது ஒரு பொறாமை அவளுக்கு ஏற்படுகிறது. அதன் வெளிப்பாடாகவே கேலி பேசுகிறாள். உதாரணத்துக்கு சிறையில் எல்லோரும் கீழ்த்தரமாய் நடத்தப்படுகிற பொழுது ஒருவருக்கு மட்டும் சலுகைகள் அளிக்கிற போது மற்றவர்கள் எரிவார்களே அந்த எரிச்சல் தான் அது. பெண்கள் சமுதாயம் ஒட்டுமொத்தமாய் முன்னேறுகிற போது அது தோன்றாது. இது ஒரு தலைமுறை பிழை. போக போக சரி ஆகிவிடும். ஆனால் பெண் முன்னேற்றத்துக்கு பெண்களே தடையாய் இருக்காதீர்கள். அம்மாக்களே உங்கள் தலைமுறை காணாத சுதந்திரத்தை உங்கள் பெண் குழந்தைகள் அனுபவிப்பதை ஏதோ வெறுப்புடன் பார்க்காதீர்கள்.

14 comments:

Krishnav said...

ஆண்களையும் பெண்களையும் சமமான ஒரு தளத்தில் முன்னேற விட்டால் பெண்கள் தங்கள் அறிவிலாலும் அழகாலும் திறமையாலும் ஆண்களை விட பன் மடங்கு முன்னேறி விடுவார்கள். அப்படி ஒரு காலம் வந்தால் எங்கே ஆண்கள் தங்களின் உண்மையான தாழ்ந்த நிலைக்கு போய்விட நேருமோ என்ற பயம் தான்

ரமேஷ் விஜய் said...

நல்ல பகிர்வு நண்பா

SHELPOUR said...

பெண் அடிமையை விரும்பாத என்னை போன்ற பலர் உங்கள் கருத்தை படிக்க வருகிறோம். ஆனால் நீங்கள் எங்களையும் சேர்த்து அவமானப்படுத்தி விடுகிறீர்கள்.....

SHELPOUR said...

பெண் அடிமையை விரும்பாத என்னை போன்ற பலர் உங்கள் கருத்தை படிக்க வருகிறோம். ஆனால் நீங்கள் எங்களையும் சேர்த்து அவமானப்படுத்தி விடுகிறீர்கள்.....

Anonymous said...

நீ அனுதினமும் எலுமிச்சம் பழத்தைத் தலையில் தேய்த்து குளித்து வந்தால், எங்களுக்கு பிரச்னை தீரும் என நம்புகிறேன்

கிருபாகரன் said...

அனால் உங்களின் blog தலைப்பு தான் கொஞ்சம் இடிக்கிறது ....

சோ said...

நீங்கள் உடனடியாக டாக்டர் ஷாலினி, ருத்ரன் இருவரில் ஒருவரை உடனடியாகச் சந்திப்பது உங்களுக்கு நல்லது

Anonymous said...

வின்சி ..நீங்க எழுதுறதை வைத்து பார்த்தால் நீங்க ஒரு super model மாதிரி அழகா இருப்பீங்கன்னு தோணுது.. உங்க போட்டோவை profile ல சேர்க்கவும். என்னோடு e mail முகவரிக்கு அனுப்புனாலும் சரிதான்..அனுப்புவீங்க தானே.

அருண்
karmoulds@yahoo.com
9382635000

VINCY said...

என்னை ஒரு மன நிலை பாதிக்கப்பட்ட பெண் என கூறும் உங்களின் மன நிலையை உணர முடிகிறது. உங்கள் அறியாமையை நினைத்தால் சிரிப்பு தான் மிஞ்சுகிறது

பின்னோக்கி said...

பெண்கள் முன்னேறி கொண்டுதான் இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான வருட அடிமைதளை உடைய சற்று கால தாமதம் ஆகலாம்.

Anonymous said...

வின்சி...எங்கே போனீர்கள்? ரூம் போட்டு யோசிக்க எங்கேயாவது போய்டீங்களா?

அருண்

raja said...

உங்கள் எழுத்துக்கள் நன்றாக உள்ளது நீங்கள் அடிகடி எழுதவும் .அப்போது தான் நீங்கள் சொல்ல வரும் கருது எல்லோரையும் சென்றடையும் . வாழ்த்துக்கள்

கிரி said...

ரொம்ப கடுப்புல இருக்கீங்க போல..ம்ம்ம்ம்

Anonymous said...

ஆண்களை போல் பெண்கள் ஒருபோதும் ஈடாக முடியாதூ