Tuesday 27 October 2009

ஆண்களின் இயலாமையே பெண்ணடிமைத்தனத்தின் துவக்கம்.

என்னை தொடர்ந்து ஊக்குவித்து வரும் அனைவருக்கும் நன்றி. என் கருத்துக்களுக்கு எதிராக பின்னூட்டம் இடுபவர்கள் ஆனாலும் என் பதிவை படிக்கும் ஒவ்வொருவருக்கும் என் நன்றி. என் கருத்துக்களுக்கு எதிராக பின்னூட்டமிட்டால் அவை பிரசுரிக்கப்படுவதில்லை என்கிறார்கள். கீழ்த்தரமான வார்த்தைகள் இல்லாத எந்த பின்னூட்டமும் பிரசுரிக்கப்படும்.

பல நேரங்களில் என்னுடைய கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்படும் வாய்ப்பு வருகிறது. நான் வலியுறுத்துவது எல்லாம் ஆணும் பெண்ணும் சமம் என்னும் கோட்பாட்டை அல்ல. ஆணை விட பெண் மேலானவள் என்பதே. பெண் வணக்கத்துக்குரியவள் என்பதே. ஆண் என்பவன் பெண்ணை மதித்து அவளின் அன்பிலும் அரவணைப்பிலும் அதிகாரத்திலும் வாழ பழகிக்கொள்ளவேண்டும் என்பதே. நீங்கள் ஒரு மேலோட்டமான கணக்கீடு எடுத்து பாருங்கள். எந்தெந்த குடும்பங்களில் ஆண் அதிகாரம் செய்திக்கொண்டும் போலி முதன்மை நிலையை பிரகடனப்படுத்திக்கொண்டும் பெண்ணை அடிமை போல் நடத்தி தன் ஆணாதிக்க போக்கில் குடும்பம் நடக்கிறதோ அங்கெல்லாம் முன்னேற்றம் தடைப்பட்டிருக்கும். பெண் விடுதலையும் பெண் முன்னேற்றமும் பெண் ஆளுமையும் தான் குடும்பத்தையும் நாட்டையும் முன்னுக்கு கொண்டு செல்லும் என்பது என் கருத்து.





இப்படி ஒரு அழகான பெண்ணிடம் குத்து வாங்குவதும் சுகம் தான் இல்லையா?



சிலர் இப்படி சொல்வார்கள். பெண்களை காமப்பொருளாய் பார்க்கக்கூடாதென்று. அதற்கும் நான் எதிரானவள். செக்ஸ் அடிமைகளாய் பார்க்காதீர்கள் என்பது தான் என் கருத்து.

திடமான திரட்ச்சியான ஒரு பெண்ணின் மார்பை பார்க்கிற போது எந்த ஆணுக்கும் உணர்ச்சிகள் உந்தப்படும். அப்படி உந்தப்பட கூடாதென்று நான் சொல்லவில்லை. அப்படி உந்தப்படாதவன் நிச்சயம் சாமியாராகத்தான் இருக்கவேண்டும். சாமியார் என்றும் சொல்ல இயலாது. காரணம் போலி சாமியார்களின அட்டகாசங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஒரு பெண்ணின் அழகில் அறிவில் அன்பில் மயங்காதவன் ஆணாகவே இருக்க முடியாது. எனவே ஒரு பெண்ணின் அழகை கவர்ச்சியை ரசிக்கக்கூடாதென்று நான் சொல்லவில்லை. ரசிக்கவேண்டும். பெண் என்பவள் ஆண்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி போகிறாள்.

அப்படியாக ஆண்களால் தவிர்க்கமுடியாத ஒரு விரும்பு பொருளாக பெண் இருக்கிறாள். பெண் என்பவளின் காதல் அன்பு அழகு அறிவு வசீகரம் எல்லாம் ஆண்களை கட்டிப்போடும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. இத்தனை சக்தி வாய்ந்த ஒரு பெண்ணின் முன்னால் ஆண் மண்டியிட மட்டும் மறுப்பது வியப்பாக இருக்கிறது.

இந்தியாவை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பது வரலாறு. அப்படி அடிமைப்படுத்துவதின் நோக்கம் என்ன? இந்தியா போன்றதொரு வளமிக்க நாட்டை அவர்கள் விரும்பினார்கள். இந்தியாவின் வளத்திலும் செல்வ செழிப்பையும் கண்டு அவர்கள் பெருமூச்சு விட்டார்கள். அந்த செல்வ செழிப்பின் மேல் அவர்களுக்கு அசை வருகிறது மோகம் வருகிறது. இப்போது அந்த செல்வ செழிப்பை அனுபவிக்க நினைக்கிறார்கள். ஆனால் இந்தியாவோடு ஒரு நேர்மையான வணிக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இந்தியாவோடு ஒரு நடுநிலை வாணிக தொடர்பு வைத்துக்கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. இந்தனை வளமிக்க இந்தியாவிடம் மண்டியிட அவர்களின் ஈகோ தடை சொல்கிறது.. ஆனால் அவர்களுக்கு இந்தியாவின் வளங்கள் வேண்டும். உடனே என்ன செய்கிறார்கள்? தங்களின் அதிகாரத்தையும் அடக்குமுறைகளையும் பயன்படுத்தி இந்தியாவை அடிமை நாடாக்கினார்கள். இந்தியாவின் வளங்களை அடித்துப்பிடுங்க ஆசைப்பட்டார்கள். இந்தியர்களை தங்கள் ஆதிக்கத்தால் மிரட்டி, இந்தியர்களே பணிந்து ஆங்கிலேயர்களின் காலடியில் இந்தியாவின் வளங்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என விரும்பினார்கள். ஆக இந்தியாவின் வளங்களை ஒரு அதிகார தொணியில் கவர்வதற்கு ம் திருடுவதற்கும் அவர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தினார்கள்.


அதையே தான் ஆண்களும் காலம் காலமாய் மதம் மூட நம்பிக்கை கலாசாரம் பண்பாடு என்ற போர்வையில் பெண்ணுக்கு செய்தார்கள். பெண்கள் இல்லாமல் ஆண்களால் வாழ முடியாது. அதே சமயம் பெண் தங்களை ஆளவும் கூடாது. உடனே எல்லா அரசியல் கலாசார பண்பாட்ட நெறிமுறைகளில் பெண்ணை அடிமைப்படுத்தும் சட்டங்களையும் பழக்கவழக்கங்களையும் உட்புகுத்துகிறார்கள். ஆக காலம் காலமாய் பெண்ணடிமைத்தனம் என்பது ஆண்களின் இயலாமையில் முளைத்ததென்பதே உண்மை.

நம் நாட்டில் மட்டுமல்ல வரலாற்றை புரட்டிப்பார்த்தால் ஆதி காலம் தொட்டு பெரும்பாலான மத கோட்பாடுகள் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாகவே பார்க்கிறது. கிறிஸ்துவமும் மேரி மாதாவின் பெயரால் திருச்சபை அமையக்கூடாதென்று தான் இயேசுவை முன்னிலைப்படுத்தி மதத்தை உருவாக்கினார்கள்.

ஆனால் இனி வரும் நூற்றாண்டுகளில் அது சாத்தியம் இல்லை. இப்போது கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பெண்கள் தாறுமாறாக முன்னேறியிருக்கிறார்கள். அதுவும் இத்தனை குறுகிய காலத்தில். அந்த முன்னேற்றம் இட ஒதுக்கீட்டில் வந்ததல்ல. ஆண்களின் இடத்தை தங்கள் அசாத்திய திறமையால் பெண் ஆக்கிரமிக்க தொடங்கியிருக்கிறாள். இந்த நிலையில் பெண் முன்னேற்றம் இருக்குமானால் ஆண்களை விட பெண்கள் கல்வியிலும் நிறைய சம்பளம் கொளிக்கும் பெரிய உத்தியோககங்களிலும் ஆக்கிரமித்துவிட்டால் ஆண்களின் நிலை என்னவாக இருக்கும்? இன்னும் ஆண்கள் பெண்கள் மீதான ஒரு அச்சத்தினால் தான் இன்னும் பெண்ணை அடிமையாக வைத்திருக்க அல்லது சம அந்தஸ்து கொடுத்து அதே நிலையில் அவர்களை வைத்திருக்க விரும்புகிறான்.

ஆனால் ஒன்று மட்டும் நிதர்சனம்

என்ன தான் பெண்கள் பல துறைகளிலும் முன்னேறியிருந்தால் கூட பெண்களுக்கு காலம் காலமாக வாழ்ந்து வந்த அடிமை வாழ்க்கையின் அழுக்கு இன்னும் அவர்களின் மனதில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதனால் தான் இன்றும் பெண் ஒரு ஆணிடம் ஒப்படைக்கப்பட வேண்டியவள் அவனுக்கு சேவகம் செய்யவேண்டியவள் என்ற மட்டகரமான எண்ணம் இருக்கிறது. பெண்கள் அதிலிருந்து விடுபட வேண்டும். நம்மை அடக்கி ஆண்ட காலம் போய்விட்டதென அவர்கள் உணர வேண்டும். இது நாம் ஆண்களை ஆளும் காலம் என்பதை உணரவ வேண்டும். உங்களின் கல்வியும் அழகும் வசீகரமும் ஆணை கட்டிப்போட வல்லது. ஆனால் ஆண்களால் கட்டுப்பாட்டில் இருக்க முடியாது என்பதால் தான் ஒரு போலி ஆதிக்க நிலையை நிறுவி ஆண்கள் உயர்ந்தவர்கள் என தங்களை காட்டிக்கொண்டு நம்மை அடிமைப்படுத்தி வந்தார்கள்.


நிறைய பேருக்கு என் மேல் கோபம் இருக்கிறது கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்கள். ஏனென்று தான் புரியவில்லை. உண்மையை அப்பட்டமாக எடுத்துரைத்திருப்பதால் அவர்களின் மனம் குறுகுறுக்கிறதென்றே தோன்றுகிறது.

நிறைய வாசகர் கடிதங்கள் வருகின்றன. எல்லாவற்றிற்கும் பதிலளிக்க நேரம் போதவில்லை. ஒரே ஒரு கடிதத்தை இங்கே பிரசுரிக்கிறேன்.

கேள்வி: வின்சி மேடம் அவர்களே வணக்கம். உங்கள் பிளாகை தொடர்ந்து படித்து வருகிறேன். அருமையான ஒரு வலைபக்கம். தமிழில் உங்களை போல் எழுத்தாளர்கள் இல்லை என்ற குறையை போக்கியுள்ளீர்கள். நான் ஆங்கிலத்தில் இது போன்ற நிறைய இலக்கியங்கள் படித்திருக்கிறேன். என்னுடைய கேள்வி இது தான்.

நான் திருமணமானவன். என் மனைவியை கடவுளாக போற்றவில்லை எனினும் அவளை என்னில் பாதியாகவே நினைக்கிறேன். என் மேல் அவள் செலுத்திய காதலும் அன்பும் தான் என்னை ஒரு மனுஷனாக மாற்றியதென்றே சொல்லலாம். அவளின் அரவணைப்பும் சில சமயம் கண்டிப்பும் இல்லையென்றால் எங்கள் குடும்பம் இப்போதிருக்கும் நிலையில் இருந்திருக்காதென்றே தோன்றுகிறது. அவளை நான் முழுவதும் நேசிக்கிறேன். எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அதாவது என் மனைவிக்கு தெரியாமல் அவளுடைய ஆடைகளை முகர்ந்து பார்ப்பது. இதை நான் காமத்தின் தூண்டுதலால் செய்வதாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் உண்மையில் அவளுடைய ஆடைகளை முகர்ந்து பார்க்கிற போது மனம் முழுதும் அவள் நிறைந்து ஒரு தேவதை போல் என் முன்னால் நின்றுகொண்டு என்னை அரவணைப்பது போல் உணர்கிறேன்.

ஒரு வகையான தெய்வீக தன்மையை அதில் உணர்கிறேன். அவளுடைய ஆடையை முகர்ந்து பார்ப்பதை கீழ்த்தரமான செக்ஸ் இச்சையாய் நான் கருதவில்லை. நாம் பெரிதும் மதிக்கும் ஒருவர் உபயோகப்படுத்திய பொருட்களை பயபக்தியோடு தொட்டு உணர்த்து துய்ப்போமே அது போல் தான் என் மனைவியின் ஆடைகளை தொட்டு உணர்ந்து முகர்கிற போது உணர்கிறேன். அந்த ஆடைகளின் சுகந்தம் மட்டுமல்ல மென்மை மட்டுமல்ல அந்த ஆடைகளை என் மனைவி உபயோகப்படுத்துகிறாள் என்கிற மரியாதையின் மித்தமாகவே அதை தொட்டு உணர்ந்து முகர்ந்து பார்க்கிறேன்.

ஆனால் என் மனைவி தான் என் ஆடைகளையும் சேர்த்து துவைப்பாள். இப்போதெல்லாம் வீட்டு வேலைகளை பகிர தொடங்கிவிட்டேன். ஆனால் எனக்கு அவளின் ஆடைகளை அதே பயபக்தியோடு அணுகி துவைக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. அதை என் மனைவியிடம் சொல்ல கூச்சமாக உள்ளது என்ன செய்வது?


நீங்கள் மட்டுமல்ல. பெரும்பாலான ஆண்களுக்கு இந்த ஆசைகள் இருக்கும். ஆனால் ஆண் என்ற ஈகோ அவர்களை தடுக்கும். காலம் காலமாக ஆண்களுக்கு கால் அமுக்கி விடவும் அவன் சாப்பிட்ட எச்சில் தட்டில் சோறு தின்னவும் தான் நாம் பெண்களை பழக்கி வைத்திருக்கிறோம். இப்போது ஆண்களின் போலியான அதிக்க தளத்தை விட்டுக்கொடுக்க அவர்களுக்க்கு மனம் வரவில்லை. அதனால் தான் இவ துணியை நான் துவைக்கணுமா?என்று விலகி விடுகிறார்கள். உங்கள் விருப்பங்களை நீங்கள் உயிரோடு இருக்கிற போதே நிறைவேற்றிக்கொள்ளாமல் மரித்துப்போவதில் என்ன பயன். மனைவியின் ஆடைகளை துவைத்துப்போடுவதில் பெருங்குற்றம் இருப்பதாய் எனக்கு தோன்றவில்லை. அவளுடைய ஆடைகளை துவைத்துப்போடுவதால் உங்களின் ஆண் என்ற போலியான கொம்பு முறிந்துவிடும் என்று நினைத்தால் மனைவியிடம் கேட்காதீர்கள். இல்லையென்றால் மனைவிக்கு தெரியாமலையே அவள் ஆடைகளை துவைத்து போடுங்கள் அவள் நிச்சயம் மகிழ்வாள். எந்த மனைவியும் கணவனின் அன்புக்கு எதிரானவள் அல்ல. எனவே மனைவியின் ஆடைகளை துவைத்து உங்கள் அன்பை வெளிப்படுத்துவதை உங்களை மனைவியும் நிச்சயம் விரும்புவாள்.

உங்கள் கேள்விகளையும் ரகசிய சந்தேகங்களையும் வாதங்களையும் இந்த முகவரிக்கு அனுப்புங்கள்.

vincyontop@gmail.com

Sunday 25 October 2009

அம்மன் பெயரில் ஆணாதிக்கம்!!!

அம்மன் பெயரில் ஆணாதிக்கம்.
நம் தேசத்தில் நிறைய பெண் கடவுள்களை நாம் வழிபடுகிறோம் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. ஆனால் பெண்களை கடவுளாக வழிபட நமக்கு மனம் ஒத்துக்கொள்வதில்லை. சரி போகட்டும். பாரத மாதா எனவும் நதிகளுக்கு பெண்களின் பெயரை இட்டும் அழகுபார்த்த நாம் அந்த பெண்கடவுள்களின் வழிபாட்டு முறையின் அடித்தளத்தை ஆணாதிக்கத்தில் உருவாக்கியிருக்கிறோம் என்பது தான் வேதனைக்குரியது.

அம்மனை வழிபடுபவர்கள் பெரும்பாலும் கீழ்தட்டு உழைக்கும் வர்க்கத்தை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். அந்த குடும்பங்களில் அம்மன் கடவுளாகவும் அவர்கள் வீட்டிலிருக்கும் பெண்கள் அடிமைகளாகவும் தான் பார்க்கப்படுகிறார்கள். தாங்கள் வழிபடும் தெய்வம் பெண்ணாக இருக்கும்போதும் அவர்களுக்கு கிடைப்பதென்னவோ சாராய நெடி வீசும் அடியும் உதையும் வன் புணர்வும் தான்.

பெண் கடவுளின் வாயிலாக நாம் வலியுறுத்துவதெல்லாம் பெண் கற்புள்ளவளாக இருக்கவேண்டும் என்பதும் கணவனின் நல்வாழ்வுக்காக மண் சோறு உட்கொள்ளவேண்டும் அங்கபிரதட்சணம் செய்யவேண்டும் நோன்பு இருக்கவேண்டும் தீட்டு என்ற பெயரில் பெண்களிடம் கற்பு கற்பு என்னும் ஆணாதிக்க வலையை விரித்துவிடுகிறார்கள். ஒரு பெண் வேறு ஆணுடன் தொடர்பு வைத்துக்கொண்டால் அவளை ஏதோ தீட்டு பெற்றவள் போலவும் பாவியை போலவும் பாவித்து பல சித்திரவதைகளுக்கும் ஆளாக்கி ஆணாதிக்க வெறியர்கள் மகிழ்கிறார்கள். அந்த சித்திரவதைகளின் நோக்கமெல்லாம் நீ நெறிகெட்டவள் எனவே உன்னை எல்லோரும் அனுபவிக்கலாம் என்கிற மறைமுக வக்கிர எண்ணமே மேலோங்கியிருக்கிறது. ஒருத்தியை நெறிகெட்டவள் ஆக்குவது தங்கள் உடல் சுகத்துக்கு ஒரு பலி ஆட்டை தயார் செய்வதுக்கு ஒப்பாகும்.

நான் இங்கே பெண் ஆணை விட உயர்ந்தவள் என்று சொல்லி எழுதுகிற போது எல்லோரும் கொதித்துப்போகிறார்கள். ஆனால் அபராதம் கட்டினால் கற்பழிப்பு ஒரு குற்றமே இல்லை என்கிற ரீதியில் நம் நாட்டில் ஆண் நாட்டாமைகள் தீர்ப்பு வழங்கி மகிழ்ந்ததை நாம் மறந்துவிடவேண்டாம். அப்படி வக்கிரங்களையும் பெண்ணை ஒரு இன்பத்தின் தூண்டுபொருளாக்கி மகிழ்ந்த இந்த சமுதாய ஆண்கள் இன்று ஏதோ திருந்திவிட்டது போல் பொய் வேடம் போடுகிறார்கள். நம்பவேண்டாம். அவர்கள் என்றும் பெண்களை அடிமைகளாக வைத்திருக்கவே விரும்புகிறார்கள். தெய்வமாக வேண்டுமானல் ஒரு பெண் இருந்துவிட்டு போகட்டும் ஆனால் மனுஷியாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் அடிமையாக இருக்கவேண்டும் என்ற கோட்பாடோடு தான் இந்த அம்மன் வழிபாட்டு முறைகள் உருவாக்கியிருக்கிறார்கள் என்பது என் கருத்து.







ஆண்க்ளே உங்கள் சேவையை ஒரு பெண்ணின் பாதங்களிலிருந்து தொடங்குங்கள்


நான் சைக்கோவா?
ஆணும் பெண்ணும் சமம் போன்ற எழுத்துக்கள் ஒரு காலத்தில் அடிமைகளிடம் மட்டுமே அதிகாரம் செலுத்த விரும்பும் ஆண் மன நோயாளிகளுக்கு பெரிய எரிச்சலாக இருந்தது. அவர்கள் அதை பல வழிகளில் எதிர்த்தார்கள். மேலும் அவ்வாறான எழுத்துக்கள் தங்கள் வீட்டு பெண்களிடம் சிக்கிவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். அந்த எழுத்துக்களை படித்து பெரிய எரிச்சல் கொண்டு அதை தங்கள் மனைவியிடம் அடக்குமுறைகளாக வெளிப்படுத்தினார்கள் அந்த மன நோயாளிகள்.

பிறகு காலப்போக்கில் பெண்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்பட்டு ஆண்களுக்கு மேலாக அவர்கள் சாதிக்க தொடங்கிவிட்டார்கள். இப்போது அவர்களின் பயமெல்லாம் ஒரு காலத்தில் நம் காலை வருடிக்கிடந்த பெண்கள் முன்னேறிவிட்டார்கள். முன்பு போல் போலி ஆதிக்கம் செலுத்தி மூட வழக்கங்களை சொல்லி அவர்களை அடிமைப்படுத்தி வைப்பது சாத்தியமில்லை. அவர்களை முன்பு போல் நம் அடிமைகள் என்று நினைக்கும் பட்சத்தில் ஆண்கள் கசக்கி எறியும் காகிதம் போல் வீசப்பட்டுவிடுவார்கள் என்ற பயத்தில் உடனே ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஒத்துக்கொண்டு பம்மிவிட்டார்கள். இப்போதும் ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஏதோ ஆண்கள் தங்களுக்கான ஒரு இடத்தை பெண்களுக்கு ஒதுக்கி கொடுத்துவிட்டதாய் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காலம் காலமாய் அடிமைகளை நடத்தப்பட்டு வந்த பெண்கள் இன்று அவர்களின் மூக்குடைத்துவிட்டார்கள் என்பது தான் உண்மை.



இப்போது நான் ஆண்களை விட பெண் உயர்ந்தவள். பெண் வணக்கத்துக்குரியவள். பெண்களுக்கு சேவகம் செய்ய படைக்கப்பட்டவன் தான் ஆண் என்று சொல்கிறபோதும் அதே வகை கொதிப்பும் மன உளைச்சலும் இந்த மன நோயாளிகளுக்கு ஏற்படுகிறது.

உடனே என்னை சைக்கோ என்றும் நான் திருமண வாழ்வில் துன்பப்பட்டவள் என்பதால் என்னுடைய வலியை இங்கே பதிவு செய்கிறேன் என்றும் உடனே நான் ஒரு மருத்துவரை அணுகவேண்டும் என்றும் பல கீழ்த்தரமான( சகிப்புத்தன்மை கொஞ்சமும் இல்லாத வீரம் இல்லாத ஆண்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்) வார்த்தைகளால் வஞ்சித்து மகிழ்ந்தார்கள். இதனால் அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனக்கும் ஆண்களை பிடிக்கும். அழகான ஆண்கள் மிகவும் பிடிக்கும்.


ஆண்களே ஒரு அழகான பெண்ணை பார்க்கிற பொழுது உங்களுக்கு மனம் படபடக்கிறது அவள் மேல் ஆசை வருகிறது. அவள் பின்னால் அலைவதில் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அப்படி அலைவதும் திரிவதும் அவள் உங்களின் செக்ஸ் தேவைகளுக்கும் சுகங்களுக்கும் ஒத்துழைக்கவேண்டும் என்பதற்குத்தானே. ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் அவளின் உடல் பாகங்களை தீண்டும் எந்த ஆணும் அவளை கற்பழிக்கிறான். ஒரு ஆண் ஒரு பெண்ணின் உடல் பாகங்களை அவள் அனுமதி இல்லாமல் தொடுவதும் உரசுவதும் எதற்கு? அவளின் காம உணர்ச்சிகளை தூண்டி அவளை தங்கள் இச்சைகளை தீர்க்கும் பொருளாக மாற்றும் பொருட்டான நடவடிக்கைகளே தவிர அதில் ஒரு காதலும் கத்திரிக்காயும் இல்லை.




அதாவதுங்க ஆணாதிக்க வெறியர்கள் என்ன கமென்டுவார்கள் என்றால் கெட்ட கெட்ட வார்த்தைகள் அதாவது அந்த வார்த்தைகளை எல்லாம் கேட்டால் நான் பயந்து போய்விடுவேன் என்று கண்ணுகளா என்னிடம் ஆங்கிலத்திலும் தமிழிலும் கெட்ட வார்த்தைக்கென்றே தனி புத்தகம் இருக்கிறது. அப்படிப்பட்ட கோழைகளின் கமென்டுகள் எவ்வாறாக இருக்குமென்றால் மேலே நீங்கள் பார்க்கும் படம் ஆபாசமாக உள்ளதென்பார்கள். அதாவது ஒரு பெண்ணின் பாதத்தை அதன் மென்மையை அதன் பரிசுத்தத்தை ஆராய்ந்து பார்க்கும் ஒரு ஆண் அல்லது அவள் பாதங்களை வணங்கும் ஒரு ஆண் அவளுக்கு சேவகம் செய்யும் ஒரு ஆண் அல்லது அவள் பாதங்களை முத்தம் செய்யும் சுத்தம் செய்யும் ஒரு ஆண் - அது ஆபாசம். தொப்புளை காட்டிக்கொண்டு ஆம்ப்லேட்டுக்கும் பம்பரத்துக்கும் படுத்திருந்தால் ஐயோ அப்படியே வழிஞ்சு ஒழுகும் இல்ல.....ஏன்யா இப்படி இருக்கீங்க???



எனவே பெண்களே உங்கள் உடலை தீண்டி உங்கள் காம இச்சைகளை தூண்டிவிட்டு அதில் குளிர் காய நினைக்கும் ஆண் ஓநாய்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.

பெண்களே நீங்கள் ஆள பிறந்தவர்கள். ஒரு ஆணிடம் உங்கள் உடலை ஒப்படைத்துவிட்டு மல்லாக்க படுத்திருக்கும் அடிமை கோலம் பூண்டு வாழ்வதற்கு அல்ல. அழகும் கல்வியும் உங்களை உயர்த்தும். தொடர்ந்து முன்னேறுவதில் நோக்கமாய் இருங்கள். வீணான உடல் இச்சைகளுக்கு பலியாகவிடாதீர்கள்.


-உங்கள் தோழி வின்சி.
உங்கள் கேள்விகள் சந்தேகங்கள் கோட்பாடுகள் தர்க்கங்கள் நாகரீகமான மொழி பயன்பாட்டில் இருப்பின் என் முகவரிக்கு அனுப்புங்கள். பதில் அளிக்கப்படும்.


vincyontop@gmail.com