Tuesday, 15 December 2009

வரதட்சணை - பெண்கள் மாட்டை விட கீழானவர்களா?

இந்தியா உலக நாடுகள் வரிசையில் பின் தங்கியிருக்க முக்கிய காரணம் ஆணாதிக்க கலாசாரமும் முட்டாள்தனமான மத கோட்பாடுகளும் தான். மேலும் எழுதுவதற்கு முன் நான் இரண்டு விஷயங்களை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

1. தண்டோரா என்ற பதிவர் வலைச்சரத்தில் என்னுடைய வலை பக்கத்தை அறிமுகப்படுத்தினார். என்னை ஆப்பரசி என்று வர்ணித்தார். ஆணாதிக்கத்துக்கு ஆப்படிக்கும் ஆப்பரசி. மிக்க மகிழ்ச்சி. பெரும்பாலானவர்கள் என் வலை தளத்துக்கு வரவே அச்சப்படுகிறார்கள். ஆணாதிக்க சிந்தனையுடைய யாரும் என் வலை பக்கத்துக்கு வர அச்சப்படுவார்கள். என் எழுத்துக்களை சரியாக புரிந்துகொள்ள சில பேர் இன்னும் இருக்கிறார்கள் என்று அறிகிற போது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. மீண்டும் நன்றி தண்டோரா.

அடுத்ததாக வருகிறார் ரோஷ்மா. அதாவது பெண் பெயரில் என்னை திட்டி எழுதினால் நான் உடனே ஐயஹோ பெண்களுக்கு என் இனத்துக்கே நான் எழுதுவது பிடிக்கவில்லை என்று மூடிக்கொண்டு போய்விடுவேனா. பெண் வேடமிட்ட ரோஷ்மா ஒரு கருத்தை முன் வைக்கிறார். சரளமான ஆங்கிலத்தில் என் பதிவுகளை திட்டுகிறார். சரி போகட்டும் . பிறகு அவர் சொல்லும் ஒரு விஷயத்தை தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் புரட்சிகரமான கருத்துக்களை எழுத்வேண்டுமென்றால் தமிழச்சி எழுதுவதை போல் எழுதவேண்டுமாம். அவரது வலை தளத்தின் சுட்டியையும் இணைத்துள்ளார். என்னுடைய எழுத்துக்கள் பலரை நோயாளிகள் ஆக்குமாம். ஐயா தமிழச்சியை போல் எழுத நான் பல அடுக்கு புத்தகங்கள் படித்த அறிவாளியோ பெரியாரை கரைத்து குடித்த பெரியார்தாசியோ அல்ல. பிறகு நேர்த்தியான தமிழில் கிரேக்க வரலாற்றில் ஆணாதிக்கம் போர்ச்சுகீசிய ஆண்கள் பெண் உடை உடுத்தினார்கள் என்றெல்லாம் வரலாற்றை மேற்கோள் காட்டி எழுத நான் அதிகம் படிக்கவில்லை ஐயா. என்னுடைய குரல் ஒரு பாரம தமிழச்சியின் குரல். அது தெரு சண்டை போல் கொச்சையா இருக்கலாம். இருக்கும். அப்படித்தான் நான் கத்த விரும்புகிறேன். அன்றாடம் நான் காணும் ஆணாதிக்க போக்கை எனக்கு தெரிந்த மொழியில் கை வந்த வார்த்தைகளை பயன்படுத்தி கொஞ்சம் வன்மையாக எழுதுகிறேன். அவ்வளவு தான். எனக்கு கவிதை எழுதவோ புறநாநூறு படிக்கவோ நேரமில்லை. விபசார விடுதிகளில் அல்லல்படும் ஒரு பெண் டயரி குறிப்பு எழுதினால் ஓத்தா தெவிடியா பையா என்ற இரண்டு வார்த்தைகள் கூட ஒரு கவிதை தான். அதை புரிந்துகொள்ளுங்கள். ஒடுக்கப்பட்டவர்களும் ஏழைகளும் பாமரர்களும் அழகாக தமிழ் கற்றுக்கொண்டு இமேஜ் பாதிக்காமல் எழுதவேண்டுமென்றால் அதற்கு நான் ஆளல்ல. உங்களுக்கு என் வலை மனை பிடிக்கவில்லை என்றால் வரவேண்டாம். யாரையும் வற்புறுத்தி நான் அழைக்கவில்லை. அழைக்க நான் என்ன வேசியா.

நான் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். பெண்கள் பெரும்பாலானவர்கள் சமையல் குறிப்புகளும் வீட்டை சுத்தமாக வைக்கும் டிப்ஸும் பிறகு ஹார்ப்பிக் வைத்து டாயிலட் கழுவுவதை பற்றி செய்முறை விளக்கங்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பாலோவர்ஸ். அதற்கு பின்னூட்டம் போடும் கூட்டம் ஆண்கள் கூட்டம். ஆக சமையல் குறிப்பும் டாயிலட் கழுவுவதை பற்றி பெண்கள் எழுதினால் அதற்குத்தான் பெண்கள் இருக்கிறார்கள் என்ற ஆணாதிக்க நம்பிக்கை வலுப்பெறுவதனால் ஆண்கள் செய்யும் நன்றிக்கடன் தான் பின்னூட்டமோ என்று தோன்றுகிறது. ஆக சமையல் குறிப்பு எழுதினால் நிறைய பாலோவர்ஸ் கிடைக்கும் போலிருக்கிறது. நானும் எழுதுகிறேன். நிறைய ஆண்களுக்கு பெண்கள் அடுக்களை சம்மந்தமாக எழுதினால் ஒரு திருப்தி.உடனே பெண் சிகிரெட் புகைக்கும் புகைப்படத்தை ஏன் போடுகிறீர்கள் என்று கேட்பார்கள். உங்களுக்கெல்லாம் குளித்து தலையில் டவல் கட்டிக்கொண்டு புடவை சுற்றியபடி சாமி கும்பிடும் பெண் படம் போட்டால் சூப்பரா இருக்கும் இல்ல....
என் வலைத்தளம் பலருக்கு எரிச்சலூட்டுகிறது. இங்கே வர பல ஆண்கள் அச்சப்படுகிறார்கள். நான் தொடர்ந்து அவர்களின் முகமூடிகளை கிழிப்பதால் அவர்களுக்கு பயம். திருடனை பற்றி செய்தி வந்தால் திருடனோ அல்லது அவனுக்கு ஆதரவு தெரிவிப்பவனோ தானே எரிச்சல் அடைய வேண்டும். ஏன் நீங்கள் பதட்டப்படுகிறீர்கள். காரணம் மறைமுகமாக ஆணாதிக்கம் என்ற மாய வன்மத்தால் விளையும் சுகங்களை உங்களுக்கு தங்கு தடையின்றி அளிக்க பெண்கள் எப்போதும் ஏமாளிகளாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போனால் உங்களுக்கு பொசுக்கென்று கோபம் வந்துவிடுகிறது.

வரதட்சணை புழங்கும் ஒவ்வொரு திருமணமும் மாட்டு வியாபாரமே அல்லது அதை விட கீழ்த்தரமானது. நீங்கள் சந்தையில் ஒரு மாடு வாங்க போகிறீர்கள். எத்தனை லிட்டர் பால் கறக்கும்....அவனுடைய வருமானம் என்ன?.....வயது என்ன வசதிகள் என்னென்ன என்றெல்லாம் பார்த்துவிட்டு மாட்டை வாங்குகிறோம். வாங்கிவிட்டு மாட்டை ஒரு கயிறு கட்டி இழுத்துக்கொண்டு வந்து நம் வீட்டில் கட்டுவோம். ஆனால் திருமணம் என்னும் மாட்டு வியாபாரத்தில் தான் பெண் காசு கொடுத்து ஒரு மாப்பிள்ளையை வாங்கிவிட்டு அந்த மாப்பிள்ளையோடு தங்க போகிறாள். அதாவது மாட்டை வாங்கி சந்தையிலேயே மாட்டோடு படுத்துக்கொள்ள வேண்டும். நாம் வாங்கிய மாடு நம்மோடு வந்து இருக்காது. மாறாக நாம் காசு கொடுத்து மாட்டை வாங்கிவிட்டு அதன் இடத்திற்கு அதன் இஷ்டத்திற்கு நாம் இருக்க வேண்டும். அட கொடுமையே....என்னை பொருத்தவரை வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் ஒவ்வொரு ஆணும் வீட்டோடு மாப்பிள்ளை ஆகிவிடுவது தான் சரி. காரணம் உங்களை காசு கொடுத்து வாங்கியிருக்கும் பெண்ணுக்கு தான் நீங்கள் சொந்தம். அவள் வசிக்கும் இடத்துக்கு நீங்கள் போய் வசிக்கவேண்டுமே தவிர அவளை உங்கள் வசிப்பிடத்துக்கு கொண்டு வருவது சரியா? அப்படி ஒரு நடைமுறை நம் நாட்டில் இருக்கிறதென்றால் பெண்கள் மாட்டை விட கேவலமானவர்கள் என்று தானே அர்த்தம். அப்படி ஒரு அர்த்தம் கற்பித்து ஆணாதிக்க சிந்தனையோடு வாழும் இந்த சமுதாயத்தில் பெண்ணே உனக்கு திருமணம் தேவையா?

தமிழச்சியை போல் என்னால் எழுத முடியாது. என் கோபத்தை பச்சை பச்சையாய் தான் காட்டுவேன்.

சரி நம் விஷயத்துக்கு வருவோம். இந்தியா ஒரு வளமான நாடு. இங்கே நம் முன்னோர்கள் அதாவது ராஜாக்கள் காலத்திலிருந்தே நாம் இரண்டு விஷயங்களுக்கு பேமஸ் ஒன்று குக்கிங் இன்னொன்று பக்கிங். அந்தப்புறம் அமைத்து நம் ராஜாக்கள் கலவி செய்துகொண்டிருந்த போது தான் மேலை நாடுகளிலில் மின்சாரமும் கம்ப்யூட்டரும் செய்துகொண்டிருந்தார்கள். நாம் இங்கே மதம் என்ற பெயரில் இந்திரனையும் சந்திரனையும் வணங்கிக்கொண்டிருந்த போது தான் மேலை நாட்டுக்காரன் நிலாவுக்கு ராக்கெட் செய்துகொண்டிருந்தான். அதாவது இந்தியா உருப்படாமல் போனதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு ஒன்று ஆணாதிக்க கலாசாரம் மற்றொன்று மூட நம்பிக்கைகளால் பொதிந்த மதம்.

உதாரணமாக பெண் கல்வியை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு என்றார்கள். இப்போது நாம் அடுப்பு ஊதாமலே எரிகிறதே என்ற கடுப்பு ஆண்களுக்கு இருக்கிறதோ என்னமோ. பெண் கல்வி எத்தனை ஆண்டுகளாய் இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த காலம் தொட்டு பெண் கல்வியை ஊக்குவித்திருந்தால் நம் நாட்டின் கல்வி அறிவு எவ்வளவு உயர்ந்திருக்கும். ஐம்பது சதவீதம் பெண்கள் என்று தோராயமாக வைத்துக்கொள்வோம். அப்படியானால் ஐம்பது சதவீத ஜனத்தொகை கல்வி அறிவு பெறாமல் அவர்களால் இந்த நாட்டுக்கு எதையும் அளிக்க முடியாமல் போனதே. அதன் பொருட்டு பொருளாதார வளர்ச்சியும் அறிவியல் வளர்ச்சியும் குறைபட்டிருக்கிறது. அதை பற்றி எல்லாம் நமக்கு என்ன கவலை நமக்கு சூடான ஆணாதிக்க எண்ணங்கள் செழித்தால் போதுமே. விதவைகள் வாழாவெட்டி இப்படி எல்லாம் பெண்களை நீங்கள் அடக்கி வைத்த காலத்தில் இந்தியாவின் ஜனத்தொகையில் சரி பாதி 50% இந்திய வளங்கள் முடக்கப்பட்டிருந்தன. பல நூற்றாண்டுகளாய் வெறும் 50% மைலேஜில் தான் இந்தியா முன்னேறிக்கொண்டிருந்திருக்கிறது. இப்படி 50% மைலேஜில் முன்னேறினால் எப்போது நாம் வல்லரசாவது?

இதை பற்றி மேலும் அடுத்த பதிவில் பார்ப்போம்

31 comments:

வால்பையன் said...

பணம் கொடுப்பவர் விற்பனை பொருளா!?
பணம் வாங்குபவர் விற்பனை பொருளா!?

பணம் கொடுத்து வாங்குறது நீங்க, பொம்பளைங்க எப்படி மாடாக முடியும்!?

VINCY said...

என்ன வால் இது கூட புரியலையா.....ஹையோ பாவம்.

வால்பையன் said...

வரதட்சணை வாங்கும் ஆண்கள் தான் நாயை விட கேவலமானவர்கள்!

தண்டோரா ...... said...

அடி தூள்..உய்..உய்...

லெமூரியன்... said...

\\உதாரணமாக பெண் கல்வியை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு என்றார்கள்.....//

நீங்கள் சொல்வதை போல் பார்த்தால் அப்பொழுது ஒட்டுமொத்தமாக ஆணினம் எல்லாம் கல்வி பயின்றிருக்க வேண்டுமே???

மன்னிக்கவும்.....சுதந்திரத்திற்கு பின்பும் சில ஆண்டுகள் வரை கல்வி என்பது சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உடைய சொத்தாக இருந்தது...........ஏனைய மக்கள் பால் பாகுபாடின்றி கல்வியறிவற்றவர்களாகவே இருந்தார்கள் என்பதை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்...!

நீங்கள் எளிதாக வரதட்சினை பற்றி பேசி சென்று விடுகுறீர்கள்.....என் சகோதரிக்கு வரன் பார்த்த பொழுது ஒரு பையனின் தாய் அந்த பையனுக்கு விலை சொன்னதை பார்த்து விக்கித்து போனேன்.....அந்த குடும்ப தலைவர் அமைதியாகத்தான் இருந்தார்........

ஆணாதிக்கம் என்று பொத்தாம் பொதுவாக சொல்கிறீர்கள்...எனக்கு தெரிந்து குடும்ப(தமிழ் நாட்டு) தலைவிகள் எடுக்கும் நிறைய முக்கிய முடிவுகளுக்கு அந்த குடும்ப ஆண்கள் ஒத்து போகிறார்கள்.........

ஆக பெண்ணியம். அல்லது ஆணாதிக்கம் என்று எது சொன்னாலும் சமுதாயத்தில் அதை வலுப்படுத்துவது கணிசமாக உள்ள பெண்கள்தான்.......
உங்கள் விழிப்புணர்வு இரு சாராருக்கும் பொருந்தும் பொதுவாக ஒன்றாகவே இருக்க வேண்டுமன்றி ஒரு தலை பட்சமாக இருக்க வேண்டிய அவசிமென்ன என்பது தான் என் கேள்வி ????

VINCY said...

//நீங்கள் சொல்வதை போல் பார்த்தால் அப்பொழுது ஒட்டுமொத்தமாக ஆணினம் எல்லாம் கல்வி பயின்றிருக்க வேண்டுமே???
//

சரி அட்லீஸ்ட் படித்த ஆண்களின் எண்ணிக்கைக்கு இணையாகவாவது பெண்கள் படித்திருந் தார்களா. அப்படி இருந்திருந்தாலே சமுதாயம் இரண்டு மடங்கு வளர்ச்சி அடைந்திருக்குமே.

//நீங்கள் எளிதாக வரதட்சினை பற்றி பேசி சென்று விடுகுறீர்கள்.....என் சகோதரிக்கு வரன் பார்த்த பொழுது ஒரு பையனின் தாய் அந்த பையனுக்கு விலை சொன்னதை பார்த்து விக்கித்து போனேன்.....அந்த குடும்ப தலைவர் அமைதியாகத்தான் இருந்தார்........//

அந்த குடும்ப தலைவர் அமைதியாக இருந்ததுக்கு காரணம் இருக்கிறது. அவரும் விலை கொடுத்து ஒரு காலத்தில் வாங்கப்பட்டிருப்பார். அந்த அம்மா வரதட்சணை கேட்கிறார் என்றால் அவர் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துகொண்டவராக இருக்கும். அதை ஒழிக்க அவர் முன் வர வாய்ப்பில்லை.

VINCY said...

//வரதட்சணை வாங்கும் ஆண்கள் தான் நாயை விட கேவலமானவர்கள்//

sari

kumar said...

thozhi vincy avargale nalla pathivu. paaraatukkal. intha varathatchanai enra oru muttaal thanamaana vishayam engu irunthuthaan thodangiyatho. intha varathatchanai enra oru vishayathai oru muthugu elumbu illaatha aan thaan uruvaaki irupaan. neengal solvathu pol pengal aathikkam seluthum naal vanthaalthaan ithu ponra kodumaigalai muluvathumaaga olikka mudiyum

அண்ணாமலையான் said...

”பெரும்பாலானவர்கள் என் வலை தளத்துக்கு வரவே அச்சப்படுகிறார்கள்.” அப்படியா? நாங்களெல்லாம் பின் தொடர்ந்தே வருகிறேமே.. வராதவர்களை பற்றி ஏன் கவலை? நீங்க தொடருங்க..

அதி பிரதாபன் said...

//அந்த குடும்ப தலைவர் அமைதியாக இருந்ததுக்கு காரணம் இருக்கிறது. அவரும் விலை கொடுத்து ஒரு காலத்தில் வாங்கப்பட்டிருப்பார். அந்த அம்மா வரதட்சணை கேட்கிறார் என்றால் அவர் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துகொண்டவராக இருக்கும். அதை ஒழிக்க அவர் முன் வர வாய்ப்பில்லை.//

இப்படியே போனால் ஒழிக்கவே முடியாது.

வரதட்சனையால் அவதிப்பட்ட ஒரு பெண்ணே, இன்னொரு பெண்ணையும் இவ்வாறு அவதிப்பட வைப்பது நல்லாவா இருக்கு.

மேல சொன்ன உதாரணத்துலயும் சரி பதிலிலும் சரி பெண்ணாதிக்கம்தான் தெரிகிறது, பெண் மீதும்.

வரதட்சனை வாங்காமல் கல்யாணம் செய்ய நாங்க தயார்தான்... ஆனால் தாயார்தான்...
---
சாமி இப்படி வந்து உசில்லாம் அடிக்கப்பிடாது.

ram said...

madam you are correct only if females rule dowry will be abolished what do you think of sati

வால்பையன் said...

//வரதட்சனை வாங்காமல் கல்யாணம் செய்ய நாங்க தயார்தான்... ஆனால் தாயார்தான்...//


அடிச்சி ஆடுங்க சிலேடை புலவரே!

எங்க வீட்ல பொண்ணு பார்க்க போனப்ப, வரதட்சணை கேட்டால் வீட்டு பக்கமே வரமாட்டேன்னு சொல்லிட்டேன்!

பிரியமுடன்...வசந்த் said...

தவுசண்ட் வாலா வெடிய கொளுத்திப்போட்ருக்கீங்க வின்சி...!

சொல்லியவிதத்தில் தெரிகிறது பாரதி கண்ட நிஜ புதுமைப்பெண் என்று...

VINCY said...

நன்றி வசந்த் வால் அண்ணாமலை....

நாங்கள் தயார் ஆனால் தாயார் தான்......

எனக்கு புரியவில்லை மிஸ்டர் அதி பிரதாபன். உங்களுக்கு வரதட்சணை வாங்குவது பிடிக்கவில்லை. ஆனால் உங்கள் தயார் தயாராய் இல்லை. அது தானே உங்கள் குற்றச்சாட்டு. அப்படியானால் உங்களை நம்பி யாரும் பெண் கொடுக்க வாய்ப்பே இல்லை. எப்படியிங்க உங்களுக்கு விருப்பமில்லாத ஒண்ணு அதே நேரம் அது தீங்கானதும் தப்பானதுமான ஒண்ணு அப்படி உங்களுக்கு தெரிந்தும் உங்கள் தாயார் சொல்லை தட்ட மறுக்கிறீர்கள் என்றால் உங்கள் தாயாரை நம்பி வேண்டுமானால் பெண் கொடுக்கலாம். ஆனால் உங்களை நம்பி நோ சான்ஸ்.

வால் சொன்ன பதிலை படியுங்கள் புரியும்.

VINCY said...

//சொல்லியவிதத்தில் தெரிகிறது பாரதி கண்ட நிஜ புதுமைப்பெண் என்று...//

இந்த விஷயத்தை எல்லாம் பல பேர் சொல்லிட்டாங்க இன்னும் திருந்த காணோம். அதான் நம்மளால முடிஞ்சது.

அண்ணாமலையான் said...

"இந்த விஷயத்தை எல்லாம் பல பேர் சொல்லிட்டாங்க இன்னும் திருந்த காணோம். அதான் நம்மளால முடிஞ்சது."
அதெல்லாம் மறந்துடுங்க.. புத்தம் புதுசா தொடர்ந்து எழுதுங்க..எழுதிக்கிட்டே இருங்க....நாங்க இருக்கோம் படிக்க.., ஃபாலொ பன்ன.. டோண்ட் வொரி பீ ஹாப்பீ...ஓகே?

பித்தனின் வாக்கு said...

வின்ஸி உங்கள் கட்டுரைகள் அனைத்தும் சூப்பர். உண்மைகளை நிதர்சனமாக புட்டு வைக்கின்றீர்கள். ஆனாலும் சின்ன சந்தோகம், தாங்கள் பெண் பெயரில் எழுதும் ஆண் என்று எனக்குத் தோன்றுகின்றது. இது அடிக்கடி பலமாக எழுகின்றது. இருந்தாலும் கருத்துக்கள் நன்று என்பதால் நீங்கள் யாராக இருந்தாலும் பின் தொடருகின்றேன். நன்றி.

ram said...

yes madam just keep on writing we will follow

George said...

வின்ஸி அவர்களே
வணக்கம்,
நிறய விஷயங்கள் எழுதுகிறீர்கள் பாராட்டுக்கள். மனதில் இருப்பதை தைரியமாக வெளிப்படுத்துகிறீர்கள். சரி, ஒன்று கூறுங்கள். எதை பெண் விடுதலை அல்லது பெண்களின் எழுச்சி என்று நினைக்கிறீர்கள். இங்கே சில புகை படங்கள் கொடுத்திருக்கிறீர்கள்
(உங்கள் பாய் பிரண்ட் இப்படி உங்களை சேவிப்பது உண்டா, என் கையால செவுட்லஅடிவாங்க உனக்கு தகுதி இல்ல, மேலும் ஒரு பெண் புகை பிடிப்பது )
இந்த படங்கள் மூலம் என்ன கூற வருகிறீர்கள்? இவ்வாறெல்லாம் நடந்து கொள்வது தான் பெண்கள் விடுதலை என்றா? ஆண்கள் மற்றும் பெண்களிடம் என்ன மாதிரியான மாற்றம் வர வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்.

The Analyst said...

"அப்படி ஒரு நடைமுறை நம் நாட்டில் இருக்கிறதென்றால் பெண்கள் மாட்டை விட கேவலமானவர்கள் என்று தானே அர்த்தம். அப்படி ஒரு அர்த்தம் கற்பித்து ஆணாதிக்க சிந்தனையோடு வாழும் இந்த சமுதாயத்தில் பெண்ணே உனக்கு திருமணம் தேவையா?"

சரியான கேள்வி. எவ்வளவோ தடவை யோசித்திருக்கிறன், எப்படி நீ எனக்கு இவ்வளவு லட்சம் காசு, வீடு, etc, etc தந்தால் மட்டுமே உன்னை திருமணம் செய்வேன் என சொல்லும் ஒருவனிடம் எப்படி சரி சொல்ல ஒரு பெண்ணிற்கு மனம் வருமென்று. என்னைப் பொருத்தவரையில் என்னை இவ்வளவு கேவலப்படுதிய ஒருத்தனுடன் என்னால் மனமொத்து வாழ்வது நினைத்துப் பார்க்கவே முடியாத காரியம்.

யாரோ சொன்னது போல் 'பெண் கேட்டால் அது விபச்சாரம், ஆண் கேட்டால் அது சீதனம்' என்பது கிட்டத்தட்ட சரி.

இதற்கெல்லாம் பெண்ணின் சிந்தனையை மாற்ற வேண்டும். அது தன் மிகச் சிறந்த வழி என நினைக்கிறேன். எமாறுபவன் இருக்கும் வரையில் எமாற்றுபவனும் இருக்கத்தான் செய்வான் என்பது போல், கொடுக்கிறவை இருக்கும் வரையும் கேட்குறவையும் இருப்பினம்.

நான் அடிக்கடி என்னைச்சுற்றி இருப்பவர்களிடம் கோபத்துடன் சொல்வது: அவனவன் கெக்கிறானென கேக்கிறது எல்லாத்தையும் குடுத்து தம் மகளைக் கேவலப்படுதும் பெற்றோரை முதலில் நடுத் தெருவில் நிற்க வைத்து சுட்டுத் தள்ள வேண்டும் என்று.

kumar said...

pugai pidipathu enbathu thavaraana palakkam. athu anaagaa irunthaalum sari pennaaga irunthaalum sari. yaar pugai pidithaalum thavaruthaan. appadi irukumpoluthu oru pen pugai pidipathu ponra padathai pottu athupol pugai pidipathu thavaru illai enbathu pol kaatuvathu entha vithathil niyaayam vincy avargale

Mrs.Saran said...

வின்சி,
உங்கள் வலை பக்கத்துக்கு நான் புதிது. அப்பா என்னமா அடிச்சி விசிறிங்க... (வார்த்தைகளால்). நல்ல வேலையாக மலேசியா-வில் இந்த பிரச்னை இல்லை. எந்த மாப்பிளையும் கேப்பதும் கிடையாது. என்ன பெண் வீட்டார் bedroom set மட்டும் வாங்குவது வழக்கமாக உள்ளது. மற்ற படி கல்யாண செலவு மாப்ளை வீட்டார் உடையது. மாப்ளை வீட்டார் பெண்ணுக்கு அவர்கள் வசதி படி நகையும் எடுத்து போடணும். வரதச்சனை பத்தி யாரும் பேசவே மாட்டார்கள்.

ஆனால் வின்சி, நீங்கள் எழுதி விட்டிர்கள் பெண்ணே அப்படி ஒரு திருமணம் உனக்கு தேவையாய் என்று. இந்தியாவில் ஒரு பெண்ணால் அப்படி திருமணம் வேண்டாம் என்று நிம்மதியாக இருக்க விடுவார்களா சுற்றி உள்ளோர் .... பெண்ணுக்கு அடங்கா பிடாரி பட்டம் அல்லவா கொடுத்து விடுவார்கள் !

Kumaran said...

இன்று தான் உங்கள் பதிவை பார்க்க நேர்ந்தது. உங்கள் அனைத்து பதிவுகளையும் படித்த நான் அதிர்ந்தேன்.தோழியே தாங்கள் சொல்ல வரும் கருத்தில் இருக்கும் குழப்பமே என்னை இந்த பின்னூட்டத்தை போடா வைத்தது.

பெண்களை அடிமை என்றும், வீட்டு வேலை செய்யும் வேலைக்காரியாகவும், புணர துடிக்கும் போகப்பொருளாகவும் பார்க்கும் ஆணாதிக்க மனப்பான்மை உள்ளவர்களின் எண்ணிக்கை தற்பொழுது மிக மிக குறைவு என்பது உண்மையே. ஆண்கள் பெண்களை மதித்து, அவர்களின் கருத்தை கேட்டு எல்லா முடிவுகளும் எடுக்கும் நிலையிலேயே பெண்களை வைத்து உள்ளனர். இது நான் அன்றாட வாழ்வில் பார்த்துவருவது. ஆனால் ஆணாதிக்கத்தை ஒடுக்க பெண்ணாதிக்கம் மட்டுமே தீர்வு என்பதாக இருக்கிறது உங்கள் கருத்து. அதனைத்தான் நானும் இங்கே வரும் ஆண்களும் எதிர்க்கிறோம். பெண்ணின் சக்தி அழகும், அறிவும்தான் என்று நீங்கள் மறுபடி மறுபடி கூறுவதில் பெரிய தவறு இருக்கிறது. பெண்ணின் அழகுக்கு ஆணை காலம் முழுவதும் கட்டிபோடும் சக்தியில்லை. கொஞ்ச காலம் வரை வேண்டுமானால் சாதிக்கலாம். அதன்பின் உண்மையான அன்பே திருமண வாழ்க்கை சிறக்க வழிகொடுக்கும். அப்படி காலம் முழுவது கட்டிபோட பெண்களின் அழகு என்ன சாகாவரம் பெற்றதா. எல்லாமே அதிகம் போனால் பத்து வருஷம் தான். அப்புறம் நீங்கள் துப்பட்ட போடாமல் வந்தாலும், மேலாடையே இல்லாமல் வந்தாலும் பார்க்க நாய்கூடவராது.

கணவனை தாசி வீட்டுக்கு அழைத்து போகிறவள் தான் பத்தினி என்பது ஒரு காவியம் சொன்ன கதை. அதனை எதிர்பார்க்கும் ஆண்மகன் திருமணம் செய்ய தகுதி அற்றவன். இன்று நிலை எப்படி மாறிவிட்டிருக்கிறது என்பது அனைவருக்குமே தெரியுமே. திருமணத்திற்கு முன் யாரும் எப்படி வேண்டுமானாலும் இருங்கள். திருமணத்திற்கு பிறகு நாம் ஒழுங்காக இருக்கலாமே என்பது தான் இப்போது தாம்பத்ய வாழ்கையாக ஆகிவிட்டது. அதற்க்கு தங்களை போன்ற புரட்சி(!!) பெண்கள் ஆப்பு வைத்து விடுகிறீர்கள். ஆம் ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம்மிடம் இருந்து வெளிநாட்டவர் கற்க விரும்பும் விசயமாக இருக்க, நீங்கள் அதனையே தப்பு என்று சொல்கிறீர்கள்.

உங்களது மற்றொரு பதிவில், ஆண்மை இல்லாத கணவர் காலில் விழுந்ததை பற்றி கூறியிருந்தீர்கள். தன்னிடம் குறையிருப்பவர்கள், தனது துணையை(ஆண்/பெண்) திருப்தி படுத்த அவர்களின் காலைபிடிப்பது தானே இயற்க்கை. எந்த தவறும் இல்லாத ஆண்மகனோ,பெண்ணோ இன்று அடுத்தவர் காலைபிடிப்பது இல்லை என்று தங்களுக்கு நினைவு படுத்த விளைகிறேன். அந்த பதிவில் இன்னொரு நகைப்புக்குரிய விசயமும் இருக்கிறது. பெண் விருப்பபட்டால் மட்டுமே உடல் சுகம் குடுக்க வேண்டுமாம் ஒரு ஆண். அப்பொழுது திருமண பந்தம் எதற்கு. தனக்கு மூடு வரும் நேரத்தில், இதற்காகவே அலையும் ஆண்களை அழைத்து விஷயம் முடித்து அவனை விரட்டலாமே. இருவரும் பரிமரிக்கோலும் அழகான விசயமே தாம்பத்தியம். இல்லறம்.

தங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். நீங்கள் பெண்களை அடிமைபடுத்தும் ஆண்களை விமர்சிப்பது நிதர்சனம். ஆனால் பெண்களுக்கு ஆண்கள் அடிமை என்கிற வாதம், பெருகிவரும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிகையை இருமடங்காக, மும்மடங்காக ஆக்கும் முயற்சியின் ஆரம்பமாக தெரிகிறது. தயவு சித்து பெண்களுக்கு விழுப்புணர்வு கொடுங்கள். ஆனால் பெண் என்கிற மமதையை கற்றுகொடுக்காதீர்கள்.

கால் மேல் கால் போடுவது மிகவும் அருமையான விசயமாக உங்களுக்கு படுகிறது. பெண்கள் அப்படி உக்கார கூடாது என்பதற்கு அறிவியல் பூர்வமாக ஒரு கரணம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா. பெண்களின் எலும்புகள் சீக்கிரமாக தேய்மானம் அடயகூடியவை. அதனால் அவர்கள் நாற்காலி மேல் அமராமல், தரையில் அமர்ந்து எழுந்தால் எலும்புகளுக்கு நல்ல பயிற்சி. அதனால்தான் தரையில் அமர செய்தார்கள். துப்பட்டா பற்றி நீங்கள் பேசுவதும் சிரிப்பாக மட்டுமே வருகிறது. நீங்கள் சொல்லாமலே இப்போது அதுதான் நடக்கிறது. ஆண்கள் அதனை பார்பார்கள், ரசிப்பார்கள், கூடத்தில் அமுக்ககூட செய்கிறார்கள்(சிலர்). ஆனால் அதற்கெல்லாம் ஆண்கள் அடிமையாவது என்பது கற்பனையின்உச்சம்..

குடும்பம் என்பது ஒரு அழகான அருமையான அனுபவம். இவ்வளவு பதிவுகள் போட்ட நீங்கள் , திருமணத்துக்கு பிறகு வரும் குழந்தை என்ற ஒரு அத்தியாயத்திற்குள் செல்லவே முடியவில்லை என்று தெரிகிறது. பிள்ளை பெற்று வளர்த்து பாருங்கள். அப்போது தெரியுமே பெண்ணின் பெருமை உங்களுக்கு.

thiru said...

Hi,

You are bold and straight forward.
Please write about Tamil TV Serials.Irrespective of any channels all the serial directors show women actors(main characters) in their serials as masochists. They show them as always sacrificing and underdogs. The male chauvinists show women as only towards High negative minded and always as dependents on men.Its been propagated in their shows that a men who do all atrocities against a women are always forgiven.

Television a powerful invention of the millennium has now been used against Women. As you say all the TV shows/Ads that carry women are for cooking / Toilet cleaning / Makeup and look beautiful for men.

Make all your readers (men/Women) to boycott all such nonsense stuff.
I trust your words can do that.

All the Best!

Anonymous said...

You are a crack...

Anonymous said...

The person who asks dowry is also a woman and not a man.

செந்தழல் ரவி said...

கலக்கிட்டீங்க.

ManA said...

நீங்கள் சொல்வது எல்லம் சரி அல்ல...

Selvaraj said...

நான் பதினைந்து வருடங்களுக்கு முன்பே வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து கொண்டவன். நானும், என் மனைவியும் வரதட்சணை வாங்கவோ கொடுக்கவோ கூடாது என்னும் கொள்கையுடையவர்கள். இதற்கு என் பெற்றோர் தடையாக இருக்கவில்லை. ஆகவே இது முழுக்க முழுக்க திருமணம் செய்யும் ஆணும் பெண்ணும் தீர்மானிக்க வேண்டிய விஷயம். வீணாக பெற்றோரை குறை சொல்வதில் அர்த்தமில்லை. எத்தனை பெண்கள் வரதட்சணை கொடுக்கமாட்டேன் என்று சொல்ல தயார்? பெண்களே எனக்கு இத்தனை பவுன் நகை போடணும், என் கணவனுக்கு கார் கொடுக்கணும், நிலம் கொடுக்கணும் என பெற்றோரை நிர்பந்திக்கும் கொடுமை நிறைய உண்டு. நீங்கள் ஒன்று செய்யலாம் வரதட்சணை வாங்கமாட்டேன்! என்று சொல்லும் பையன்களையும், வரதட்சனை கொடுக்கமாட்டேன்! என்று சொல்லும் பெண்களையும் ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவர முயற்சியுங்கள். அது பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவிற்கு நீங்கள் போட்டிருக்கும் படம் பொருத்தமில்லாதது என நினைக்கிறேன்.

Madurai Saravanan said...

nalla karuththukal kopamaaka varukirathu. nithaanamaaka velipatuththungkal annaamalaiyaan kuriyathu pol naangkal pinthodarukirom.

greatfemale fan said...

yen ellorum varadakshinai kevalam engireergal ... kodukum panathai anubavikka povadhum andha kalyana pen dhaane ... petrorin sothu pillaigaluku dhaane... adhuvum andha kalathil pen pillaigalukku sothil pangu illai.. 1987 ku piragu sattam pottargal... apadi parthaal ... petrorin sothu muluvadhum thangal aan pillaigal mattum anubavipargal.. ippodhellam pengale enaku ivlo nagai podu endru than petroridam adam pidikirargal, piragu adhai than kanavar veettaar thoda viduvadhe illai...
ennai porutha varai dowry enbadhu kutrame illai, aanal adharkaga pen veetaarai kodumai paduthivadhu yetru kolla mudiyadhu