Sunday, 25 October 2009

அம்மன் பெயரில் ஆணாதிக்கம்!!!

அம்மன் பெயரில் ஆணாதிக்கம்.
நம் தேசத்தில் நிறைய பெண் கடவுள்களை நாம் வழிபடுகிறோம் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. ஆனால் பெண்களை கடவுளாக வழிபட நமக்கு மனம் ஒத்துக்கொள்வதில்லை. சரி போகட்டும். பாரத மாதா எனவும் நதிகளுக்கு பெண்களின் பெயரை இட்டும் அழகுபார்த்த நாம் அந்த பெண்கடவுள்களின் வழிபாட்டு முறையின் அடித்தளத்தை ஆணாதிக்கத்தில் உருவாக்கியிருக்கிறோம் என்பது தான் வேதனைக்குரியது.

அம்மனை வழிபடுபவர்கள் பெரும்பாலும் கீழ்தட்டு உழைக்கும் வர்க்கத்தை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். அந்த குடும்பங்களில் அம்மன் கடவுளாகவும் அவர்கள் வீட்டிலிருக்கும் பெண்கள் அடிமைகளாகவும் தான் பார்க்கப்படுகிறார்கள். தாங்கள் வழிபடும் தெய்வம் பெண்ணாக இருக்கும்போதும் அவர்களுக்கு கிடைப்பதென்னவோ சாராய நெடி வீசும் அடியும் உதையும் வன் புணர்வும் தான்.

பெண் கடவுளின் வாயிலாக நாம் வலியுறுத்துவதெல்லாம் பெண் கற்புள்ளவளாக இருக்கவேண்டும் என்பதும் கணவனின் நல்வாழ்வுக்காக மண் சோறு உட்கொள்ளவேண்டும் அங்கபிரதட்சணம் செய்யவேண்டும் நோன்பு இருக்கவேண்டும் தீட்டு என்ற பெயரில் பெண்களிடம் கற்பு கற்பு என்னும் ஆணாதிக்க வலையை விரித்துவிடுகிறார்கள். ஒரு பெண் வேறு ஆணுடன் தொடர்பு வைத்துக்கொண்டால் அவளை ஏதோ தீட்டு பெற்றவள் போலவும் பாவியை போலவும் பாவித்து பல சித்திரவதைகளுக்கும் ஆளாக்கி ஆணாதிக்க வெறியர்கள் மகிழ்கிறார்கள். அந்த சித்திரவதைகளின் நோக்கமெல்லாம் நீ நெறிகெட்டவள் எனவே உன்னை எல்லோரும் அனுபவிக்கலாம் என்கிற மறைமுக வக்கிர எண்ணமே மேலோங்கியிருக்கிறது. ஒருத்தியை நெறிகெட்டவள் ஆக்குவது தங்கள் உடல் சுகத்துக்கு ஒரு பலி ஆட்டை தயார் செய்வதுக்கு ஒப்பாகும்.

நான் இங்கே பெண் ஆணை விட உயர்ந்தவள் என்று சொல்லி எழுதுகிற போது எல்லோரும் கொதித்துப்போகிறார்கள். ஆனால் அபராதம் கட்டினால் கற்பழிப்பு ஒரு குற்றமே இல்லை என்கிற ரீதியில் நம் நாட்டில் ஆண் நாட்டாமைகள் தீர்ப்பு வழங்கி மகிழ்ந்ததை நாம் மறந்துவிடவேண்டாம். அப்படி வக்கிரங்களையும் பெண்ணை ஒரு இன்பத்தின் தூண்டுபொருளாக்கி மகிழ்ந்த இந்த சமுதாய ஆண்கள் இன்று ஏதோ திருந்திவிட்டது போல் பொய் வேடம் போடுகிறார்கள். நம்பவேண்டாம். அவர்கள் என்றும் பெண்களை அடிமைகளாக வைத்திருக்கவே விரும்புகிறார்கள். தெய்வமாக வேண்டுமானல் ஒரு பெண் இருந்துவிட்டு போகட்டும் ஆனால் மனுஷியாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் அடிமையாக இருக்கவேண்டும் என்ற கோட்பாடோடு தான் இந்த அம்மன் வழிபாட்டு முறைகள் உருவாக்கியிருக்கிறார்கள் என்பது என் கருத்து.ஆண்க்ளே உங்கள் சேவையை ஒரு பெண்ணின் பாதங்களிலிருந்து தொடங்குங்கள்


நான் சைக்கோவா?
ஆணும் பெண்ணும் சமம் போன்ற எழுத்துக்கள் ஒரு காலத்தில் அடிமைகளிடம் மட்டுமே அதிகாரம் செலுத்த விரும்பும் ஆண் மன நோயாளிகளுக்கு பெரிய எரிச்சலாக இருந்தது. அவர்கள் அதை பல வழிகளில் எதிர்த்தார்கள். மேலும் அவ்வாறான எழுத்துக்கள் தங்கள் வீட்டு பெண்களிடம் சிக்கிவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். அந்த எழுத்துக்களை படித்து பெரிய எரிச்சல் கொண்டு அதை தங்கள் மனைவியிடம் அடக்குமுறைகளாக வெளிப்படுத்தினார்கள் அந்த மன நோயாளிகள்.

பிறகு காலப்போக்கில் பெண்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்பட்டு ஆண்களுக்கு மேலாக அவர்கள் சாதிக்க தொடங்கிவிட்டார்கள். இப்போது அவர்களின் பயமெல்லாம் ஒரு காலத்தில் நம் காலை வருடிக்கிடந்த பெண்கள் முன்னேறிவிட்டார்கள். முன்பு போல் போலி ஆதிக்கம் செலுத்தி மூட வழக்கங்களை சொல்லி அவர்களை அடிமைப்படுத்தி வைப்பது சாத்தியமில்லை. அவர்களை முன்பு போல் நம் அடிமைகள் என்று நினைக்கும் பட்சத்தில் ஆண்கள் கசக்கி எறியும் காகிதம் போல் வீசப்பட்டுவிடுவார்கள் என்ற பயத்தில் உடனே ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஒத்துக்கொண்டு பம்மிவிட்டார்கள். இப்போதும் ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஏதோ ஆண்கள் தங்களுக்கான ஒரு இடத்தை பெண்களுக்கு ஒதுக்கி கொடுத்துவிட்டதாய் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காலம் காலமாய் அடிமைகளை நடத்தப்பட்டு வந்த பெண்கள் இன்று அவர்களின் மூக்குடைத்துவிட்டார்கள் என்பது தான் உண்மை.இப்போது நான் ஆண்களை விட பெண் உயர்ந்தவள். பெண் வணக்கத்துக்குரியவள். பெண்களுக்கு சேவகம் செய்ய படைக்கப்பட்டவன் தான் ஆண் என்று சொல்கிறபோதும் அதே வகை கொதிப்பும் மன உளைச்சலும் இந்த மன நோயாளிகளுக்கு ஏற்படுகிறது.

உடனே என்னை சைக்கோ என்றும் நான் திருமண வாழ்வில் துன்பப்பட்டவள் என்பதால் என்னுடைய வலியை இங்கே பதிவு செய்கிறேன் என்றும் உடனே நான் ஒரு மருத்துவரை அணுகவேண்டும் என்றும் பல கீழ்த்தரமான( சகிப்புத்தன்மை கொஞ்சமும் இல்லாத வீரம் இல்லாத ஆண்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்) வார்த்தைகளால் வஞ்சித்து மகிழ்ந்தார்கள். இதனால் அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனக்கும் ஆண்களை பிடிக்கும். அழகான ஆண்கள் மிகவும் பிடிக்கும்.


ஆண்களே ஒரு அழகான பெண்ணை பார்க்கிற பொழுது உங்களுக்கு மனம் படபடக்கிறது அவள் மேல் ஆசை வருகிறது. அவள் பின்னால் அலைவதில் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அப்படி அலைவதும் திரிவதும் அவள் உங்களின் செக்ஸ் தேவைகளுக்கும் சுகங்களுக்கும் ஒத்துழைக்கவேண்டும் என்பதற்குத்தானே. ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் அவளின் உடல் பாகங்களை தீண்டும் எந்த ஆணும் அவளை கற்பழிக்கிறான். ஒரு ஆண் ஒரு பெண்ணின் உடல் பாகங்களை அவள் அனுமதி இல்லாமல் தொடுவதும் உரசுவதும் எதற்கு? அவளின் காம உணர்ச்சிகளை தூண்டி அவளை தங்கள் இச்சைகளை தீர்க்கும் பொருளாக மாற்றும் பொருட்டான நடவடிக்கைகளே தவிர அதில் ஒரு காதலும் கத்திரிக்காயும் இல்லை.
அதாவதுங்க ஆணாதிக்க வெறியர்கள் என்ன கமென்டுவார்கள் என்றால் கெட்ட கெட்ட வார்த்தைகள் அதாவது அந்த வார்த்தைகளை எல்லாம் கேட்டால் நான் பயந்து போய்விடுவேன் என்று கண்ணுகளா என்னிடம் ஆங்கிலத்திலும் தமிழிலும் கெட்ட வார்த்தைக்கென்றே தனி புத்தகம் இருக்கிறது. அப்படிப்பட்ட கோழைகளின் கமென்டுகள் எவ்வாறாக இருக்குமென்றால் மேலே நீங்கள் பார்க்கும் படம் ஆபாசமாக உள்ளதென்பார்கள். அதாவது ஒரு பெண்ணின் பாதத்தை அதன் மென்மையை அதன் பரிசுத்தத்தை ஆராய்ந்து பார்க்கும் ஒரு ஆண் அல்லது அவள் பாதங்களை வணங்கும் ஒரு ஆண் அவளுக்கு சேவகம் செய்யும் ஒரு ஆண் அல்லது அவள் பாதங்களை முத்தம் செய்யும் சுத்தம் செய்யும் ஒரு ஆண் - அது ஆபாசம். தொப்புளை காட்டிக்கொண்டு ஆம்ப்லேட்டுக்கும் பம்பரத்துக்கும் படுத்திருந்தால் ஐயோ அப்படியே வழிஞ்சு ஒழுகும் இல்ல.....ஏன்யா இப்படி இருக்கீங்க???எனவே பெண்களே உங்கள் உடலை தீண்டி உங்கள் காம இச்சைகளை தூண்டிவிட்டு அதில் குளிர் காய நினைக்கும் ஆண் ஓநாய்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.

பெண்களே நீங்கள் ஆள பிறந்தவர்கள். ஒரு ஆணிடம் உங்கள் உடலை ஒப்படைத்துவிட்டு மல்லாக்க படுத்திருக்கும் அடிமை கோலம் பூண்டு வாழ்வதற்கு அல்ல. அழகும் கல்வியும் உங்களை உயர்த்தும். தொடர்ந்து முன்னேறுவதில் நோக்கமாய் இருங்கள். வீணான உடல் இச்சைகளுக்கு பலியாகவிடாதீர்கள்.


-உங்கள் தோழி வின்சி.
உங்கள் கேள்விகள் சந்தேகங்கள் கோட்பாடுகள் தர்க்கங்கள் நாகரீகமான மொழி பயன்பாட்டில் இருப்பின் என் முகவரிக்கு அனுப்புங்கள். பதில் அளிக்கப்படும்.


vincyontop@gmail.com

16 comments:

செந்தழல் ரவி said...

இப்போது நான் ஆண்களை விட பெண் உயர்ந்தவள். பெண் வணக்கத்துக்குரியவள். பெண்களுக்கு சேவகம் செய்ய படைக்கப்பட்டவன் தான் ஆண் என்று சொல்கிறபோதும் அதே வகை கொதிப்பும் மன உளைச்சலும் இந்த மன நோயாளிகளுக்கு ஏற்படுகிறது&&&


ஆமாம் வின்ஸி. உளவியல் ரீதியில் ஏற்றுக்கொள்ளமுடியாமல் அலறுகிறார்கள் இல்லையா ?

உங்களுக்கு வரும் கருத்துக்கள் என்ன மொழியில் இருந்தாலும் தயங்கமல் செருப்பால் அடித்தது போல பதிலடி தாருங்கள். செய்வீர்கள். நம்புகிறேன்.

சக்திவேல் said...

தோழி வின்ஸியின் கருத்துக்களை ஒத்துக்கொள்கிறேன். ஆதிக்கவாதிகளின் அடக்குதல் மற்றும் ஒடுக்குதலில் சிக்குன்டு உன்மையான வாழ்வின் மகிழ்ச்சிதனை தொலைத்து அல்லது அறியாமல் கிடக்கும் பாவப்பட்ட பெண் ஜென்மத்தை தட்டி எழுப்பச்செய்யும் இந்த முயற்ச்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன் எனது ஆதரவினையும் வழாங்குகிறேன்.

Indy said...

என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் ரொம்ப நாள் எழுதவில்லை?

Vincy said...

//உங்களுக்கு வரும் கருத்துக்கள் என்ன மொழியில் இருந்தாலும் தயங்கமல் செருப்பால் அடித்தது போல பதிலடி தாருங்கள். செய்வீர்கள். நம்புகிறேன்.//
உங்கள் தொடர்ந்த வாசிப்புக்கும் ஊக்கத்துக்கும் நன்றி. நான் எல்லா ஆண்களையும் ஒட்டுமொத்தமாக குறை சொல்வதாய் சிலர் எழுதுகிறார்கள். நான் கோபம் கொள்வதெல்லாம் இந்த சமுதாயம் காலம் காலமாய் மறைமுகமாக பெண்ணுக்கு இளைக்கும் கொடுமைகளை கண்டு தான். அது நம் முதுகில் ஒட்டிய அழுக்கு போல் சுகமாகவே இருந்துவருகிறது. அதை உணர்த்தவே நான் எழுதுகிறேன்.நன்றி செந்தழல்

Vincy said...

//தோழி வின்ஸியின் கருத்துக்களை ஒத்துக்கொள்கிறேன். ஆதிக்கவாதிகளின் அடக்குதல் மற்றும் ஒடுக்குதலில் சிக்குன்டு உன்மையான வாழ்வின் மகிழ்ச்சிதனை தொலைத்து அல்லது அறியாமல் கிடக்கும் பாவப்பட்ட பெண் ஜென்மத்தை தட்டி எழுப்பச்செய்யும் இந்த முயற்ச்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன் எனது ஆதரவினையும் வழாங்குகிறேன்.//


நன்றி.....அன்றாட வாழ்வில் ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனித்தால் பெண்ணின் மீது நாம் எவ்வாறெல்லாம் ஆதிக்கம் செலுத்தி அவர்களை நம் இன்ப சுகங்களுக்கு பலி ஆக்குகிறோம் என்பது புரியும். தொடர்ந்து வாசியுங்கள்

Vincy said...

//என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் ரொம்ப நாள் எழுதவில்லை?//

வெளிநாடு சென்றிருந்தேன்.:)

செந்தழல் ரவி said...

&&&&&&&&&&&&&நான் எல்லா ஆண்களையும் ஒட்டுமொத்தமாக குறை சொல்வதாய் சிலர் எழுதுகிறார்கள். நான் கோபம் கொள்வதெல்லாம் இந்த சமுதாயம் காலம் காலமாய் மறைமுகமாக பெண்ணுக்கு இளைக்கும் கொடுமைகளை கண்டு தான். அது நம் முதுகில் ஒட்டிய அழுக்கு போல் சுகமாகவே இருந்துவருகிறது.&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&சரியா சொன்னீங்க வின்சி. குற்றமுள்ள நெஞ்சுகள் குறுகுறுக்கத்தானே செய்யும்... :)))))

kumar said...

thozhi vincy ungaludya karuthakalai inruthaan padithen.ungal karuthaukkal athanayum miga sariyaanathu.pengal aangalai vida uyaranthavargal enbathil thuli kooda santhegam illai. pengalukku aangal sevai seiyum kaalam vegu tholaivil illai. atharkaaga neengal eduthu irukkum intha muyarchikku ennudaya aatharavu enrum undu. ethirupugal evlavu vanthaalum thodarnthu eluthungal.pengal samuthaayam munnera neengal eduthu iurkum intha muyarchikku ennudaya vaalthukkal.

Mighty Maverick said...

உங்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது... நீங்கள் மல்லாக்க படுத்து எச்சில் துப்பிக்கொண்டிருக்கிறீர்கள்... நான் ஆணாதிக்க மனோபாவம் கொண்டிருப்பதாகநீங்கள் என் மீதும் உமிழலாம்... ஆனால் என் நண்பர்கள் வட்டாரத்தில் எனக்குதான் பெண் தோழிகள் அதிகம்... அதற்கு காரணம் நீங்கள் சொல்லும் பெண்ணியத்தை பின்பற்றுவது தான்... நீங்கள் எல்லாம் பேசதான் லாயக்கு... உங்களுக்கு ஜால்ரா தட்ட ஒரு கூட்டம் வேறு... நாங்களும்பெண்ணியவாதிகள் தான் என்று கூறிக்கொண்டு... எல்லாம் வெட்கக்கேடு...

Mighty Maverick said...

அப்புறம் இன்னொன்னும் கவனித்தேன்... உங்களை எதிர்த்து கருத்து இட்டால் அதுஇங்கு வெளியிடப்படுவதில்லை... உங்கள் ஆதரவு கருத்து மட்டும் தான்வருகின்றன... இதில் இருந்தே தெரிகிறது நீங்கள் எந்த அளவுக்கு மன அழுத்தநோயில் விடுகிறீர்கள் என்று...

kumar said...

pengal aangalai vida ellaa thurayilum munneri kondu varugiraargal. neengal solvathu pol pengal angalai adimai paduthum naal vegu tholaivi illai. naan oru aanaaga irunthaalum ithanai othu konduthaan aaga vendum

kumar said...

mighty maverick solli irukiraar aatharavu tharum karuthukkal mattum veliyida paduvathaagavum ethirthu karuthukkal vanthaal avai veliyida paduvathillai enru kurai koori ullaar.avar veliyitta intha ethirppu karuthum veliyidapattu irukirathu. atharkku mighty maverick avargal enna bathil solla pogiraar enru theriyavillai

VINCY said...

//அதற்கு காரணம் நீங்கள் சொல்லும் பெண்ணியத்தை பின்பற்றுவது தான்... //

Mr. Mighty Maverick.

நீங்கள் பெண்ணியத்தை பின் பற்றுகிறீர்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது. உங்களுக்கு நிறைய தோழிகள் இருப்பதை பெருமையோடு சொல்லியிருக்கிறீர்கள். நல்லது.
நான் பெண்ணியத்தை பின் பற்றுகிறேனா இல்லையா என உங்களுக்கு தெரியவேண்டிய அவசியம் என்ன? நான் எழுதுவதினால் திருடர்கள் ஒழிந்துவிடவேண்டும் என ஆசைப்படுகிறேன். குறைந்தபட்சம் இந்த சமுதாயத்துக்கு திருடர்கள் இருக்கிறார்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினாலே போதும் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் மறைமுகமாக ஆணாதிக்கம் எவ்வாறெல்லாம் இந்த சமுதாயத்தில் த்ளிக்கப்பட்டிருக்கிறதென்பதை சுட்டிக்காட்டவே நான் எழுதுகிறேன். நீங்கள் பெண்ணியத்தை பின் பற்றுகிறீர்கள். பெண்ணியத்தை பற்றி ஏன் எழுதுவதில்லை. எழுதுங்கள் மற்றவர்களும் பெண்ணியத்தின் மேன்மையை தெரிந்துகொள்ளட்டுமே.

VINCY said...

//ungal karuthaukkal athanayum miga sariyaanathu.pengal aangalai vida uyaranthavargal enbathil thuli kooda santhegam illai.//

Kumar Thanks.

kumar said...

thozhi vincy avargalukku. intha kaalathil aangal thirumanathirkku piragu manaivikku theriyaamal matra pengalodu thodarbu vaithu throgam seigiraargal. sila pengal avatrai poruthu kondu pogiraargal. sila pengal devorce kooda vaangukiraargal.sila pengal kaaval nilayathil pugaar solgiraargal. anaal ivai elaavatrayum vida pengal aan ithu pol thavaru seiyum pothu avargalaagave aangalai thandikka vendum. avargal thavaru seiyum aangalukku adi uthai kuduthaalthaan thavaru seiyum aangal thirunthuvaargal. olungeenmaaga nadanthaal pengal adipaargal enra bayamthaan avaragalai olukkamaana paathayil kondu sellum. vada indiavil inthu ponru oru sambavam nadanthu irukinrathu. aan matra oru pennodu thodarbu vaithu iurppathai paartha avar manaivi avarukku sairyaana adi kuduthu thandithu ullar. antha pennai matra pengalukku oru uthaaranamaagave naan karuthugiren . elaa pengalum antha pennin vazhiyil nadakka vendum. antha pennin antha veeram nichayamaaga paaraatukku uriyathu. antha pen antha aanai thandikkum nigalvai padam pidithu pottu irukiraargal. athanai thaanglum paarkka vendum enru virumbukiren. antha linkai naan anuppi irukiren. thaangalum athanai paarkka vendum enru virumbukiren.
http://www.youtube.com/watch?v=L2_o9j7E9aM

VINCY said...

Kumar nalla pagirvu nantrigal. neengal solvathu unmayea. pengal thairiyamaaga seyalpada veandum. sila samayam theru naayai vida kevalamaaga aangalin puthi poeividukirathu. avargalai thiruthaveandiyathu pengalin kadamaium kooda.