Wednesday 20 January 2010

பெண் பார்க்கும் படலம் என்னும் ஆணாதிக்க வக்கிரம்.

ஒரு கடிதம்


தோழி வின்சி அவர்களுக்கு வணக்கம். நான் தொடர்ந்து உங்கள் வலைத்தளத்தை வாசித்து வருகிறேன். உங்களின் எண்ணங்கள் அனைத்துடனும் நான் ஒத்து போகிறேன். உங்கள் கருத்துக்கள் சில இடங்களில் வீரியமாக சொல்லப்பட்டாலும் அத்தனையும் முகத்தில் அறையும் உண்மைகள்.
பெண்கள் தொடர்ந்து பல வழிகளில் கலாசாரம் மதம் என்ற போர்வையில் பல வன்மையான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதில் வக்கிரம் என்னவென்றால் சிறு வயதிலிருந்தே அந்த கொடுமைகளை எல்லாம் ஏதோ தனக்கு வந்து சேரும் பெருமைகளை போல் ஒரு பெண் பாவித்துக்கொள்ள பழக்கப்படுத்தப்படுகிறாள். உதாரணமாக பெண் பார்க்கும் படலம். ஒரு பெண்ணை விற்பனை பொருளாக பாவிக்கும் ஒரு சடங்கு தான் பெண் பார்க்கும் படலம் என்பது என் கருத்து. மேலும் இதை பெண் ஆனவள் தன் வாழ்வில் ஒரு சாதாரண நிகழ்வாக அதை கருத நிர்ப்பந்திக்கப்படுகிறாள். இது எத்தனை வக்கிர குணம் கொண்ட ஒருவனால் வடிவமைக்க பட்டிருக்கும் சடங்கு என்று நினைக்கிற போது மனம் வேதனை அடைகிறது. இதை பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். மேலும் எனக்கு பெண் பார்க்கும் படலம் என்ற கீழ்த்தரமான நிகழ்வு நடந்தேறவில்லை. நான் உண்மையில் மாப்பிள்ளை பார்க்க போனேன். சொன்னால் நம்பமாட்டீர்கள். அதை இன்னொரு கடிதத்தில் எழுதுகிறேன். இப்போதைக்கு விடை பெறும்

தோழி
சித்ரா.
-------

பெண் பார்க்கும் சடங்கு என்று ஒரு சாபக்கேடு நம் சமுதாயத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு பெண் அழகாக புடவை கட்டிக்கொண்டு அலங்காரம் செய்துகொண்டு பூ வைத்துக்கொண்டு தயாராய் இருக்க வேண்டும். பிறகு மாப்பிள்ளை வீட்டார் வருவார்கள். பெண் அவர்கள் முன்னால் நடந்து வந்து அமரவேண்டும். பெண் ஊனமாக இருக்கிறாளா என்பதன் சோதனை முயற்சி. பிறகு தலை குனிந்து வெட்கப்பட்டபடி அவள் அவர்கள் முன் காட்சியளிக்க வேண்டும். பிறகு அவர்களுக்கு காபி கொண்டு வந்து ஒவ்வொருவருக்காய் கொடுக்க வேண்டும்(கிட்ட தட்ட வேலைக்காரி போல்). அவர்கள் அந்த காபி பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் தின்பார்கள். அடுத்து சில குடும்பங்களில் பெண் மண்டி போட்டு பெரியவர்களை வண்ணங்க வேண்டும் என்ற சம்பிரதாயமும் உண்டு. முன்பெல்லாம் பெண்ணை பாட சொல்வார்களாம். அதாவது பெண் ஊமையா என்ற பரிசோதனை. இது எல்லாம் நடந்தேறிய பின் மாப்பிள்ளை வீட்டார் கிளம்பிவிடுவார்கள். போய் கடிதமோ தொலை பேசியிலோ வியாபாரம் பேசுவார்கள். பிறகு திருமணம். இது போன்ற ஒரு நிகழ்வை வேசிகளின் கூடாரத்தில் தான் நாம் பார்க்க முடியும்.

விபசாரம் என்ற சாபக்கேடு உள்ள இடங்களில் வேசிகளின் கூடாரத்தில் தான் பெண் அலங்கரிக்கப்பட்டு ஆண்கள் முன்னால் நிறுத்தப்படுவாள். ஆண்கள் தங்களுக்கு பிடித்த பெண்ணை தேர்ந்தெடுப்பார்கள். பெண்கள் அலங்காரம் செய்யப்பட்ட பொம்மைகள் போல் விற்பனைக்கு தயாராய் நிற்பார்கள். அதன் மறு பிரதியே பெண் பார்க்கும் படலம். பெண் என்ன விற்பனை பொருளா. துடைத்து மெருகேற்றி பலருக்கு கண்காட்சிக்கு வைத்து அதில் ஒருவர் அவளை வாங்கிக்கொண்டு போக.

நற்குடி பெண்கள் பர்தா அணிவார்கள் என்ற கீழ்குடி சிந்தனை நிறைந்திருக்கும் நம்மிடம் பெண்களை முன்னுக்கு கொண்டு வருவது பெரிய சவாலாகவே உள்ளது. நாம் பலமுறை இந்த தளத்தில் குறிப்பிடுவது போல் நற்குடி பெண்கள் வீட்டு வேலை செய்வதை முற்றிலும் துறக்க வேண்டும். நமக்கு வீட்டுவேலை செய்வதை விட நிறைய வேலைகள் இருக்கிறது என்று உணரவேண்டும். நற்குடி பெண்கள் வீட்டு வேலைகளை ஆண்களிடம் ஒப்படைத்துவிட்டு கல்வி வேலை வாய்ப்பு என தன் உடல் அழகை பேணி முன்னேற வேண்டுமே தவிர வீட்டு வேலைகள் செய்வதல்ல அவளது கர்ம விதி.

இப்போது ஆண்கள் எல்லாம் நல்லவர்கள் போல் வீட்டு வேலைகளை 50-50 என பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று பெருந்தன்மையோடு ஒத்துக்கொள்கிறார்கள். உண்மையில் அது பெருந்தன்மை அல்ல. காலத்தின் கட்டாயம். பல நூற்றாண்டுகளாய் பெண்கள் அடுப்பூத மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள். ஏன் ஆண்கள் அடுப்பூதக்கூடாது என்பது தான் என் கேள்வி. 50-50 என்பதெல்லாம் ஆண்கள் பெண்களின் வளர்ச்சியும் முன்னேற்றத்தையும் கண்டு இதற்கு மேலும் அவர்களால் தங்கள் போலி ஆணாதிக்கத்தை நிலை நிறுத்த முடியாது என்பதால் தங்களின் பாதுகாப்புக்காக கொண்டு வந்த திட்டம் தான் 50-50. இதில் ஏமாந்து போக வேண்டாம். ஆணும் பெண்ணும் சமம் என்பதெல்லாம் நாம் ஆண்களை விட முன்னேறி விடக்கூடாதென்பதற்காய் போடப்படும் கட்டு வேலை என்பதை நாம் மறந்துவிட கூடாது. நான் எப்போதும் சொல்வது போல் ஆணும் பெண்ணும் சமம் என்பது கேலி கூத்து. பெண் ஆணை விட உயர்வானவள்.

பெண்கள் வீட்டு வேலை செய்வதிலிருந்து எப்படி விலகி இருக்க வேண்டுமோ அதே போல் பெண் என்பவள் பெண் பார்க்கும் சடங்கு என்ன்னும் வேசித்தனமான வியாபார விளையாட்டையும் வலிமையாக எதிர்க்க வேண்டும். பெண்களே நினைத்து பாருங்கள் நாம் என்ன விற்பனை பொருளா. அல்லது ஒருவனுக்கு மட்டுமே விற்கப்படும் வேசியா. எதற்காக நாம் அலங்காரம் பண்ணிக்கொண்டு ஆண்கள் முன்னால் போய் நிற்க வேண்டும். கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இன்று ஆண்களை புறந்தள்ளும் அளவுக்கு சக்தி படைத்த நாம் ஏன் நம்மை ஒரு விற்பனை பொருள் போல் அலங்கரித்துக்கொண்டு ஈ என பல் இளித்தபடி ஆண்கள் முன்னால் போய் நிற்க வேண்டும்.



என்ன மாப்பிள்ளை சார் ரொம்ப நெர்வஸா இருக்கீங்க. எனக்கு உங்கள பிடிக்குமோ இல்லையோன்னு பயப்படுறீங்களா? ரிலாக்ஸ். வீட்டுக்கு போய் லெட்டர் போடுறோம்.





பெண் பார்க்கும் படலம் என்பது ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு கீழ்த்தரமான நிகழ்வு. நம் உடல் பரிசுத்தமானது. அதை நம் அனுமதியின்றி யாரும் தொடவோ தீண்டவோ அனுமதிக்க கூடாது. என்வே பெண்கள் எல்லாம் ஒருமித்த வலிமையோடு பெண் பார்க்கும் படலம் என்ற ஆணாதிக்க சடங்கை முற்றிலும் எதிர்க்க வேண்டும். துறக்க வேண்டும். ஏன் என்று கேள்வி எழுப்ப வேண்டும்.

நாம் உயர்வானவர்கள். ஆண்களை விட. இந்த பூமியில் எல்லா உயிருனங்களை விடவும் நாம் மேன்மை பெற்றவர்கள். நம் உடல் அழகை மெருகேற்றி அதை வரும் மாப்பிள்ளை வீட்டாருக்கு காட்டி நம்மை ஏற்றுக்கொள்ளும் படி கெஞ்சும் வலுவிழந்த நிலையில் நாம் இல்லை என்பதை உணரவேண்டும். ஏன் பெண் பார்க்கும் சடங்கு என்பது மாப்பிள்ளை பார்க்கும் சடங்காக இருக்க கூடாது என்று கேளுங்கள்.
என்னுடைய நெருங்கி தோழி ஒருவருக்கு பெண் பார்க்கும் சடங்கு நடந்தது. எப்படி என்றால் கோயிலில் வந்து பெண்ணை பார்ப்பார்களாம். பார்த்துவிட்டு பிடித்திருந்தால் வீட்டில் வந்து பேசுவார்களாம். நானும் அழைக்கப்பட்டிருந்தேன். அந்த பெண் அழகாய் அலங்காரம் பண்ணியிருந்தாள். அவளின் பெற்றோரும் இன்னும் சில உறவினர்களும் அவளோடு வந்திருந்தார்கள். மாப்பிள்ளை ஒரு காரில் வந்தான். அவ்னோடு வனுடைய அப்பாவும் ஒரு நண்பனும் வந்தார்கள். இரண்டே நிமிடம் நின்றுவிட்டு போய்விடார்கள். அவனுக்கு பெண்ணை பிடிக்கவில்லையாம். அந்த இரண்டு நிமிட காட்சிக்கு இவள் ஒரு நாள் முழுக்க சிரமம் எடுத்து தன்னை அலங்காரப்படுத்தியிருந்தாள். அவன் கார் எடுத்துக்கொண்டு பறந்துவிட்டான். பதில் இல்லை. அந்த பெண்ணின் மனம் எவ்வளவு வேதனை பட்டிருக்கும். இத்தனைக்கும் அந்த பெண் மாப்பிள்ளையை விட அதிகம் படித்தவள். அதிகம் சம்பாதிப்பவள். அவனை விட அழகு. அதை பார்க்கவே எனக்கு பரிதாபமாய் இருந்தது. இது தான் இன்று பெண்களின் நிலை. அந்த பெண்ணும் அதை இயல்பாக எடுத்துக்கொள்ள தயார்படுத்தப்படுகிறாள். ஏன் இந்த அவல நிலை. நாம் என்ன அவ்வளவு கீழ்த்டரமாய் போய்விட்டோமா சிந்தியுங்கள் பெண்களே.


சித்ராவின் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தின் விபரமான மடலை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

உங்கள் தோழி
வின்சி.

vincyontop@gmail.com

28 comments:

ரவி said...

நெத்தியடி.........

மதார் said...

நல்லா சொன்னீங்க .இந்த பெண் பார்க்கும் படலத்தில் எனக்கும் உடன்பாடு இல்லை . போன மாசம்தான் என்னை முதன்முதலாக ஒரு இடத்திலிருந்து பெண் பார்க்க வந்தார்கள் அம்மாவும் , மாப்பிளையின் தம்பியும் . இடம் நான் சென்னை திரும்ப நெல்லை இரயில் நிலையத்தில் . நானும் சாதாரனமாய் இருந்தேன் . ஜாலியா பேசிட்டு வந்தேன் , முதல் முறை என்பதால் ஒத்துக்கொண்டேன் .யாருக்கும் காபி குடுக்ககூடதுன்னு முடிவுல இருக்கிறேன் .

KULIR NILA said...

Inimel Aaan Paarkum Padalam than

VINCY said...

நன்றி செந்தழல்

VINCY said...

//யாருக்கும் காபி குடுக்ககூடதுன்னு முடிவுல இருக்கிறேன் .//

நிச்சயமாக நல்ல முடிவு. இது போன்ற ஆணாதிக்க நடைமுறைகள் மறைய பெண்கள் தான் முன் வந்து போராட வேண்டும்.

VINCY said...

//Inimel Aaan Paarkum Padalam than//

அப்படி நடந்தா எம்புட்டு நல்லா இருக்கும். நாம போய் கால் மேல கால் போட்டு உக்காந்துகிட்டு மாப்பிள்ளை சார் காபி தட்டோட வந்து நம்ம அப்பா அம்மாவுக்கும் நமக்கும் கொடுத்தா எப்படி இருக்கும்.....

VINCY said...

என்னை கேட்டால் இனி மேல் மாப்பிள்ளை பார்க்கும் படலம் தான் உருவாக வேண்டும். அது நடக்கும் வரை குறைந்தது பெண் பார்க்கும் படலத்தையாவது நிறுத்தி வைப்போம். இரண்டு குடும்பங்களும் சந்தித்துக்கொள்ளும் ஒரு நிகழ்வாக அதை மாற்றுவோம். மாறாக பெண்ணை அலங்காரம் பண்ணி காபி தட்டோடு அனுப்புவது கேவலமாக இருக்கிறது. இன்றைய படித்த சாதனை பெண்கள் யாரும் அதை செய்ய உடன்படமாட்டார்கள்.

மு.இரா said...

தோழி அவர்களுக்கு வணக்கம், நீங்கள் சொல்ல வரும் கருத்தின் கரு நன்று, ஆனால் சொன்ன விதம் தவறு. ஆண்களுக்கு செய்த அதே தவறை நீங்களும் செய்ய போகிறீர்களா? ஒரு பழமொழி இருக்கு “ஏமாறவன் இருக்கிற வரைக்கும், ஏமாத்தறவன் இருப்பான்” அதனால நீங்க ஏமாறாம இருந்தாவே போதும்... உங்களோட தன்மாணத்த காப்பத்துங்க, அதுக்காக அடுத்தவன் மானத்த வாங்க நினைக்க கூடாது.

Anonymous said...

ரவி சார் , மேடத்துக்கு ரொம்ப ஜால்ரா அடிக்கிறீங்க. அவங்ககிட்ட எதாவது எதிர் பாக்கிறீங்களா? ஒப்பனா சொல்லுங்க. மேடத்துக்கு ரொம்ப பெரிய மனசு. அவங்க தப்பா நினைக்க மாட்டாங்க. அவங்க மாடர்ன் பொண்ணு. புரட்சி பெண் புதுமை பெண், அவங்களுக்கு அதெல்லாம் சின்ன விஷயம்.
இதுக்காக, பதிவு என்ற பெயரில் அவங்க எடுக்குற வாந்திக்கெல்லாம் ஏன் முதல் ஆளாக ஜிங்கி அடிக்கிறீங்க.

M. Jaya prakash

VINCY said...

//மேடத்துக்கு ரொம்ப ஜால்ரா அடிக்கிறீங்க. அவங்ககிட்ட எதாவது எதிர் பாக்கிறீங்களா? ஒப்பனா சொல்லுங்க. மேடத்துக்கு ரொம்ப பெரிய மனசு. அவங்க தப்பா நினைக்க மாட்டாங்க. அவங்க மாடர்ன் பொண்ணு. புரட்சி பெண் புதுமை பெண், அவங்களுக்கு அதெல்லாம் சின்ன விஷயம்.//

சபாஷ் நண்பரே. ஒரு கூட்டம் நான் தொடர்ந்து ஆண்களை கேலி செய்கிறேன் என்று சாடுகிறது. ஆனால் இப்போது நீங்களே உங்களை கேலி பொருளாக்கி நான் இங்கே ஆண்களின் மேல் சாட்டும் குற்றங்கள் எல்லாம் அப்பட்டமாய் உண்மை என நிரூபித்து விட்டீர்கள்.
பாருங்கள் ஒரு வேளை ஒரு ஆண் பதிவர் எழுதும் மொக்கை கதைக்கோ அல்லது மொக்கையான ஒரு பதிவுக்கு யாராவ்து பிரசன்ட் சார் என்று பின்னூட்டம் போட்டு அவர்களின் வாலாட்டும் புத்தியை காட்டினால் உடனே என்ன சொல்வீர்கள்....பார் அவர் பிரபல பதிவர் அதனால் ஜால்ரா தட்டுகிறான்...அல்லது அவர் சினிமா பிரபலம் அதனால் ஜால்ரா...அல்லது அவர் இவருடைய மொக்கைக்கு பின்னூட்டம் போடுவார் அதனால் அவர் திருப்பி போடுகிறார் என்பீர்கள். ஆனால் ஒரு பெண் என்று வரும் போது உடனே செக்ஸ் வந்துவிடுகிறது. அது தான் ஆண்களின் பொது புத்தி. எப்போதும் கையில் பிடித்துக்கொண்டு நாக்கை தொங்க போட்டபடி அலையும் பொது புத்தி. திருந்துங்கள் ஆண்களே....
மேலும் ஆண்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் செக்ஸ் சம்மந்தப்படுத்தி ஒரு பெண்ணை திட்டிவிட்டால் அவள் பொது வாழ்க்கையிலிருந்து தலை குனிந்தபடி முக்காடு போட்டுக்கொண்டு வெளியேறிவிடுவாள். பிறகு நாம் ஆண் சிங்கங்கள் குதித்து எழலாம் என்பதே. ஆனால் அது இனி மேலும் நடக்காது தோழரே. ரவி அவர்கள் உங்கள் பின்னூட்டத்தால் சோர்வடைய போவதில்லை. உங்களை போன்ற ஒரு மன நோயாளியின் இந்த பின்னூட்டம் எனக்கு அதிர்ச்சியோ கோபமோ தராது. மாறாக உங்கள் மன நோய் குறித்து பரிதாபப்படுகிறேன். அவ்வளவே.

VINCY said...

//இதுக்காக, பதிவு என்ற பெயரில் அவங்க எடுக்குற வாந்திக்கெல்லாம் ஏன் முதல் ஆளாக ஜிங்கி அடிக்கிறீங்க. //

பதிவு என்ற பெயரில் வாந்தி...அடடா சபாஷ்...
இத்தனை வருடம் உங்களை போன்ற ஆண்களை சமுதாயத்தில் பார்த்து பார்த்து எனக்கு குமட்டிக்கொண்டு வருகிறது. அப்படி வருவது தான் என் பதிவும். அது நிச்சயம் வாந்தி என்றே கொள்ளலாம். தோழரே அது உங்களின் ஊசிப்போன கலாசார ஆணாதிக்க பழைய கஞ்சி. அதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எனக்கு வாந்தி வருகிறது. அது தான் என் பதிவு. எனவே என் பதிவுகளை அள்ளி உங்கள் உள் பாக்கெட்டில் சேகரித்துக்கொள்ளுங்கள். அவை அனைத்தும் அந்த கழிவுகள் அனைத்தும் ஒரு பெண்ணால் ஜீரணிக்க முடியாத ஆணாதிக்க மலம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

VINCY said...

//அதுக்காக அடுத்தவன் மானத்த வாங்க நினைக்க கூடாது.//

ஆக மொத்தத்துல ஆணாதிக்க ஆண்களின் மானம் கப்பலேறிடிச்சு சொல்ல வர்றீங்க.

rama ram said...

madam you don't have to wait for long
this will start happening very soon madam

Anonymous said...

தங்கள் பதிலுக்கு நன்றி வின்சி மேடம், இந்த மன நோயாளிக்கு, உங்களுக்கு என்ன நோய் பிடித்திருக்கிறது என்பது புரியவில்லை. கொஞ்சம் உங்கள் ஆரம்ப பதிவுகளில் இருந்து அனைத்தையும் திரும்பி பாருங்கள். மன நோய் யாருக்கு என்பது தெரியும்.
//VINCY said...

//நிஜவாழ்க்கியில் பத்தினி போன்று நடித்துக்கொண்டு எழுத்துக்களின் மூலம் கற்ப்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்..//

யப்பா நான் பத்தினியின்னு யாருப்பா சொன்னது. என்ன கட்டிக்கபோறவன் கிட்ட முதல்ல சொல்ல போறதே நான் ஒரு பத்தினி இல்லேங்குற உண்மையை தான். ஆமா "பத்தினி"ங்குறவங்க யாரு. சுதந்திர போராட்ட தியாகிய. இல்ல மின்சாரம் டெலிபோன் போன்ற அறிவியல் சாதங்களை கண்டு பிடித்த விஞானியா. இல்லை பல புத்தகங்கள் எழுதிய அறிவு ஜீவியா? இல்லை பெரிய பிசினஸ் மேக்னட்டா? புருஷன் எத்தன பேரோட படுத்தாலும் சரி சாகுற வரைக்கும் அவன் ஒருத்தனுக்கே காட்டி படுக்குறவளுக்கு பெயர் தானே பத்தினி. அப்படியானால் சத்தியமாக...உங்கள் மேல் சத்தியமாக அந்த வேஷத்தை நான் ஏற்று நடிக்க விரும்பவில்லை. நான் பத்தினி வேஷம் போட விரும்பவில்லை ஐயா....வேறு யாரையாவது பாருங்கள்.//

இது உங்கள் முந்தைய பதிவு ஒன்றில் உங்கள் பதில் தானே, நான் உங்களை திட்டவில்லை, இவ்வளவு வெளிப்படையாக பேசுகிறீர்கள், அதையே நான் திருப்பி கூறி இருக்கிறேன் அவ்வளவுதான். உங்களுடைய கருத்தை தான் கூறி இருக்கிறேன். ஒன்று சொல்லுங்கள், நீங்கள் எழுதுவது எல்லாம் புரட்சி கருத்துக்களா? என்ன விதமான புரட்சி இது. எனக்கு புரிய வில்லை. உங்களுடைய பதிவு எல்லாவற்றிலும் எதாவது ஒரு விதத்தில் செக்சை சம்பந்தபடுதியே இருக்கிறது, போதாகுறைக்கு கவர்ச்சியான படங்கள் வேறு போட்டிருக்கிறீர்கள். இதை எல்லாம் பார்க்கும்போது புரட்சி எண்ணம் வராது மேடம். வேற மாதிரி எண்ணம் தான் வரும். உங்களுடைய பதிவுகள் எல்லாம் கூறும் ஒரே விஷயம் என்ன தெரியுமா, தன்னுடைய உடல் அழகை வைத்து பெண்கள் ஆண்களை மயக்கி அடிமைபடுத்த வேண்டும் என்பதுதான் அடிப்படை கருத்து.

மேலும் தொடர்வோம்....

M. Jayaprakash

Anonymous said...

//உங்களை போன்ற ஆண்களை சமுதாயத்தில் பார்த்து பார்த்து எனக்கு குமட்டிக்கொண்டு வருகிறது.//

நீங்கள் நல்ல ஆண்களையே சந்தித்ததில்லை என்று நினைக்கிறேன். அது சமுதாயத்தின் குறை அல்ல, உங்கள் குறை. பார்க்கின்ற பார்வை சரியாக இருந்தால் பார்ப்பவையும் நல்லவையாக இருக்கும்.

இங்கே நீங்கள் எழுதி இருக்கும் பதிவுகள் அனைத்துமே பெண்களின் உடலையும் அழகையும் மையப்படுத்தியே எழுதி இருக்கிறீர்கள். உடல் அழகும், அங்க வளைவுகளுமா பெண்களிடம் உள்ள திறமைகள். வேறு எந்த திறமைகளும் பெண்களிடம் இல்லையா? பெண்களுக்காக பேசுகிறேன் என்று பெண்களை எவ்வளவு தரங்கெட்ட விதமாக எழுதி வருகிறீர்கள் என்று மூளை இருந்தால் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

நீங்கள் மட்டும் அல்ல, பெண்களுக்காக பேசுகிறேன் என்று கூறிக்கொண்டு கிளம்புகின்ற பெரும்பாலான பெண்கள் செய்வது தான் இது. இவர்களால் எந்த பலனும் எந்த பெண்ணுக்கும் இல்லை. வெளிப்படையாக சொன்னால் மலிவான விளம்பரம் தேடும் முயற்சி இது.

ஆண்களை போல் புகை பிடிப்பதும், மது அருந்துவதும் எந்த விதத்தில் புரட்சியான விஷயங்கள் எனக்கு புரியவில்லை. ஒரு பெண் நானும் புகை பிடிப்பேன், நானும் மது குடிப்பேன் என்று அவற்றை செய்தால் எப்படி தெரியுமா இருக்கும், பன்றி மட்டும் தான் சாக்கடையில் புரள வேண்டுமா நானும் புரள்வேன் என்று சொல்வது போன்று தான் இருக்கும்.

நீங்கள் ஏதோ உலக மகா புரட்சி கருத்துக்களை எழுதுவதை போல் ரவி போன்ற சிலர் உங்களை ஊக்கபடுத்துகிரார்கள், இந்த மன நோயாளி கேட்க நினைப்பது எப்படி எல்லாம் பெண்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் உங்கள் பதிவுகளில் கூறி இருப்பதை போல் தங்கள் குடும்பத்து பெண்கள் நடந்து கொண்டால் இவர்கள் சம்மதிப்பார்களா. கண்டிப்பாக மாட்டார்கள். பின் எந்த அடிப்படையில் உங்களை ஊக்கப்படுத்துகிறார்கள்.

நீங்கள் சொல்கின்ற அழகாலும், கவர்ச்சியாலும் ஆண்களை அடிமைப்படுத்துவது எத்தனை நாளைக்கு. பெண்களின் உடல் என்ன இரும்பினால் செய்யப்பட்டதா அல்லது பிளாஸ்டிக்கினால் ஆனதா, எப்போதும் பிரெஷாக இருப்பதற்கு. எல்லாம் தோல் சுருங்கும் வரைக்கும் தான் அழகும் கவர்ச்சியும். அதன் பிறகு? நீங்கள் என்ன மார்கண்டேய வரம் வாங்கியவர்களா.

ஏதோ ஒரு சம்பவத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு அந்த பாதிப்பில் எழுதுவது போல் தான் உங்கள் பதிவுகள் அனைத்தும் காணப்படுகிறது. தயவு செய்து நல்ல சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள்.

உங்கள் பதிவுகளில் எல்லாமே மேல்தட்டு சாயலே தெரிகிறது, கையில் அளவுக்கு மீறிய பணத்தை வைத்து கொண்டு பொழுது போக்கிற்காக பெண் விடுதலை என்று கூவிக்கொண்டு இருக்கும் உங்களை போல் பலர் இந்த சமூதாயத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். யோசித்து பார்த்தால் எந்த நன்மையுமே இவர்களால் பெண்களுக்கு இல்லை.

உங்கள் பதிவுகள் மூலம் பெண்களை ஒரு செக்ஸ் பொம்மையாக நீங்களே கூறுகிறீர்கள் நாங்கள் கூறவில்லை.

பாவம் பெண் விடுதலை, பெண் சுதந்திரம் போன்றவற்றிக்கு முழு அர்த்தம் தெரிந்து பதிவு எழுதுங்கள்.

அன்னை இந்திராகாந்தி போன்ற இரும்பு பெண்மணிகளின் வரலாற்றை வாங்கி படியுங்கள். பெண் எந்த அளவிற்கு திறமை வாய்ந்தவள் என்பது விளங்கும். இப்படி நாலாந்தரமாக பதிவு எழுதி பெண் இனத்தை கேவலபடுத்த வேண்டாம்.


M. Jayaprakash

VINCY said...

பன்றிகள் சாக்கடை என்ற உவமை அருமை. ஆக பெண்கள் மது புகை போன்ற சாக்கடைகளில் ஆண் பன்றிகளை போல் உருள வேண்டாம் என்று தடுத்து எங்களை நல் வழி படுத்தவா பெங்களூரில் பப்பில் புகுந்து வன்முறை ஆணாதிக்க வெறியாட்டத்தை நடத்தியது அந்த கும்பல். புகை பிடிக்க வேண்டும் மது அருந்த வேண்டும். அப்படி செய்பவள் தான் புதுமை பெண் என்று நான் சொல்ல வரவில்லை. நான் எதிர்ப்பதெல்லாம் பெண்கள் மது அருந்தக்கூடாது பெண்கள் புகை பிடிக்கக்கூடாது என ஆண்களிடம் நிறைந்திருக்கும் ஆணாதிக்க போக்கை. மது அருந்துவதும் புகை பிடிப்பதும் பெண்கள் அவர்களாகவே தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதை அடக்கவோ தடுக்கவோ ஆண்களுக்கு அதிகாரம் இல்லை என்பதை தான் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

VINCY said...

பெண்கள் தங்கள் அழகை பராமரிக்கவேண்டும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் இது இரண்டும் தான் பெண்ணின் சக்தி என்று நான் சொல்வதில் என்ன பிழை கண்டார்களோ தெரியவில்லை. வயதான காலத்தில் பெண்கள் அழகாக இருப்பதில்லை. இளமையில் அழகாக இருக்கிறார்கள். ஆனால் அதுவல்ல வாதம். பெண்ணோ ஆணோ அவளின் வாழ்வில் அவளோடு கூட வருவது அவள் மீதான அன்பு. அந்த அன்பு ஒரு பெண்ணின் அழகை வணங்குவதில் வெளிப்படும். ஒரு பெண்ணை உடலாலும் மனதாலும் போற்றி வணங்குவதில் வெளிப்படும் காதலின் உணர்வை ஆண்கள் உணார வேண்டும்.
காதல் கவிதைகளில் இருக்கும் காதலும் பெண்ணை போற்றும் தன்மையும் பெண்ணை வணங்கும் தன்மையும் பென்ன் இல்லாமையால் தோன்றும் வெறுமையும் ஏன் அப்படியே உங்களிடம் மங்கிவிடுகிறது என்பதை என்றாவது சிந்தித்து பார்த்ததுண்டா. இதை பற்றி தனியே எழுதுகிறேன்.

Anonymous said...

இனி ஆண் பார்க்கும் படலம் வந்தால் எப்படி இருக்கும் .

Anonymous said...

பெண்கள் அழகை வளர்த்து கொள்ள வேண்டும், அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்று சொல்வதில் குறை இல்லை. ஆனால் உங்கள் எந்த பதிவிலும் பெண்கள் அறிவை வளர்க்க வேண்டும் என்று நீங்கள் கூறியதாக தெரியவில்லை. அழகால் யாரையும் வெகு காலம் அடிமை படுத்தி விட முடியாது. இந்தியாவில் பல தம்பதிகள் முப்பது நாற்பது ஆண்டு காலம் சேர்ந்து வாழ்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அழகு மட்டும் இல்லை. உள்ளார்ந்த அன்பு. அது இருந்தால் மட்டும் தான் பல காலம் இணைந்து வாழ முடியும். மேலை நாடுகளில் மிக அரிதாகவே இப்படி பட்டவர்களை காண்க முடியும்.
இந்தியாவிலும் இன்று பல பெண்கள் பல துறைகளில் பெரும் சாதனை புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் அது அவர்களது அழகை கொண்டு செய்த சாதனை இல்லை, அவர்களது தனி திறமையையும் அறிவையும் முறையாக பயன்படுத்தியதால் வந்த வெற்றி, சாதனை.

//காதல் கவிதைகளில் இருக்கும் காதலும் பெண்ணை போற்றும் தன்மையும் பெண்ணை வணங்கும் தன்மையும் பென்ன் இல்லாமையால் தோன்றும் வெறுமையும் ஏன் அப்படியே உங்களிடம் மங்கிவிடுகிறது//

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது சாதத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் மேடம். அதே அடிப்படையில் எல்லாரையும் எடை போடக்கூடாது. அது உங்களுடைய பார்வை. ஒரு சிலபேர் செய்யும் தவறை வைத்துக்கொண்டு எல்லோரையும் கெட்டவர்களாக கூறக்கூடாது.

பப்பில் புகுந்து வன்முறை செய்தவர்களை மனிதர்கள் பட்டியலிலே சேர்க்கவே நான் விரும்பவில்லை. இழிவான வழியில் விளம்பரம் தேடும் சிலரின் முயற்சியின் விளைவு அது. ஆனால் பப்பில் என்ன நடக்கிறது. அங்கே சென்று குடித்து கூத்தடினால்தான் பெண்களுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்று அர்த்தமா. பெண்களுக்கு எல்லாவித உரிமையும் இருக்கிறது அதை அடக்க யாருக்கும் உரிமை இல்லை என்பது உண்மைதான். ஆனால் தவறான செயல்களை ஒருவர் செய்யும் போது அதை தவறு என்று சுட்டி கட்டும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அதை ஏற்று கொள்வதும் ஏற்காததும் அவரவர்விருப்பம்.


M. Jayaprakash
Ngl

பித்தனின் வாக்கு said...

பெண்களின் சமுதாயத்திலும் சரி,ஆண்களின் சமுதாயத்திலும் சரி குறைகள் இருக்கும். அதை ஊதிப் பெரிது படுத்துவதால் எந்த லாபமும் இல்லை. ஆணும் பெண்ணும் மனம் ஒத்து வாழ்வதுதான் வாழ்க்கை, இனிமை. அதை விடுத்து பேதம் பார்த்து வாழ்வது இல்லை வாழ்க்கை. நன்றி வின்ஸி.

பித்தனின் வாக்கு said...

மதார் அப்படி ஏன் நினைக்கின்றீர்கள். காப்பி உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு கொடுப்பது கடமை அல்லவா?. பாட்டுப் பாடு, டான்ஸ் ஆடு. நில்லு நட திரும்பு என்றால் அவர்களை உதைத்து அனுப்புங்கள். வரதட்சனை கேட்டால் திட்டி அனுப்புங்கள். அதை விடுத்து காப்பி தரமாட்டேன் என்பது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

மதார் said...

பித்தனின் வாக்கு said...

சார் , நான் சொன்ன அந்த காபி கொடுக்கும் நிகழ்ச்சிலேயே நீங்க மேற்சொன்ன அனைத்தும் அடங்கிவிடும் .வீட்டுக்கு வந்தவர்களை உபசரிக்கும் விருந்தோம்பல் எனக்கும் தெரியும் . நான் எதிர்க்கும் காபி குடுக்கும் பழக்கம் சினிமாத்தனம் போல நடக்கும் பெண்பார்க்கும் படலதிர்க்கே . சென்னையில் இருந்துகொண்டு ஒருஒரு முறையும் காபி கொடுப்பதற்காக மட்டுமே என்னால் ஊருக்கு போக முடியாது . நாங்கள் விரும்பும் பெண்பார்க்கும் படலம் முதலில் பொண்ணும், பையனும் இயல்பாய் அவர்கள் ஒரு பொது இடத்தில் சந்தித்த பின் அவர்கள் மனம் ஒத்து போனால் மேற்கொண்டு பெரியவர்கள் பேசலாம் , நானும் காபி குடுப்பேன் .

rama ram said...

just dont see in india look world wide and see where men and women are equal in asian and african countries only men drink and smoke mostly and look what is happening but in europe and america male and female drink and smoke if they wish and look at their development it's not by just not drinking or smoking a economy or culture develops it's got nothing to do with it you guys put all restriction on women but you are depending on an country or economy where both drink so don't rubbbish yourself

just think what will it be like if women came to see us for proposing marriage and you waiting in home all day for it in full make up and be rejected at the end if any male is man enough to try it do it aand then talk about anything

don't underestimate women india won the battles with his neighbours only when indira gandhi was the pm and lost when nehru was pm

VINCY said...

மதார் அருமையான பதிலடி. பெண் பார்க்கும் படலத்தில் காபி கொடுப்பது விருந்தோம்பல் என்றால் அதை பெண்ணின் அப்பாவோ அம்மாவோ அல்லது உறவினர்களோ செய்யலாமே.....Am i right?

பித்தனின் வாக்கு said...

எனக்குத் தெரியாது. எங்கள் வீட்டில் ஜாதகத்துடன் பெண்ணின் புகைப்படத்தையும் வாங்கி விடுவார்கள். பிடித்து திருமணம் செய்து கொள்வதாக இருந்தால்தான் பெண் பார்க்க போவார்கள். பார்த்து விட்டு பின்னர் தபால் அனுப்பும் பழக்கம் எங்க வீட்டில் இல்லை. ஆதலால் தான் சொன்னேன். காபி கொடுத்தால் என்ன தவறு என்று. மாதர் செல்லும் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு, என்றாலும் காபி கொடுக்கலாமே.

Anonymous said...

நன்று வின்சி மேடம், என் பெயர் தீபன்,
நீங்கள் சொன்ன கருத்துப்படி நான் சொல்கிறேன். மாப்பிளை வீட்டில் தான் பெண் வீட்டார் மாப்பிளை பார்க்க வர வேண்டும். மாப்பிளை வீட்டில் மாப்பிளைக்கு பட்டுப் புடவை கட்டி கொலுசு, வளையல் போட்டு அலங்காரம் செய்து நாணத்தோடு இருக்க வேண்டும். பெண்ணானவள் சேட், ஜீன்ஸ் அணிந்து வர வேணும்.பெண்வீட்டார் வந்தவுடன் மாப்புளை காப்பி கொடுக்க வேண்டும். பின்பு பெண்ணின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் பெற வேண்டும். பெண் மாப்பிளையைப் பார்த்து உனக்கு சமைக்கத் தெரியுமா? பாட்டு, நடனம் தெரியுமா? என்று கேட்க வேண்டும். இந்தத் தகுதி இல்லாத மாப்பிளையை Reject பண்ண வேணும். சம்மதம் என்றால் மாப்பிளைக்கு எத்தனை சவரன் நகை போடுவீங்க? என்று வரதட்சணை கேட்கணும். இவ்வாறு என் வாழ்வில் நடந்தால் சந்தோஷப் படுவேன். ஏனெனில் நான் அதிகம் படிக்க வில்லை. ஆகவே நான் Housewife வேலை செய்யவே ஆசைப்படுறன்.எனக்கு நல்ல மனைவி அமைய வேணும். வின்சி மேடம் உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன். தயவு செய்து பதில் பதிவு தரவும். நன்றி....

Anonymous said...

தீபன் எனக்கும் உன்னைப் போல இருக்க ஆசையா இருக்கு. என் பெயர் தனுஷன்,
எனக்கு விருப்பம் மாப்பிளை வீட்டில் தான் பெண் வீட்டார் மாப்பிளை பார்க்க வர வேண்டும். மாப்பிளை வீட்டில் மாப்பிளைக்கு பட்டுப் புடவை கட்டி பின்னல் பின்னி நிறைய மல்லிகைப் பூ வைத்து கொலுசு, வளையல் போட்டு அலங்காரம் செய்து இருக்கணும். பெண்ணானவள் சேட், ஜீன்ஸ் அணிந்து வர வேணும்.பெண்வீட்டார் வந்தவுடன் மாப்புளை காப்பி கொடுத்து வெட்கப்பட்டு பெண்ணின் காலைத் தொட்டு வணங்க வேண்டும். பெண் மாப்பிளையைப் பார்த்து உனக்கு என்னென்ன சமைக்கத் தெரியும் பாட்டுப் பாடுவாயா? என்று கேட்க வேண்டும். மாப்பிளை பொண்ணு கேட்ட பாடலைப் பாடி நடனம் ஆடிக்காட்ட வேணும். சம்மதம் என்றால் மாப்பிளைக்கு எவ்வளவு வரதட்சணை போடுவீங்க என்று கேட்கணும். மாப்பிளை வீட்டார் சம்மதித்தால் ஓகே சொல்லிவிடணும். இக்கல்யாணத்தில் என்னோட அப்பா புடவை கட்டியும் என் அம்மா சேட், ஜீன்ஸ் போட்டிருந்தால் நல்லாயுருக்கும். எனக்கு என்னை விட அதிகமாக படித்த பெண்ணே மனைவியாக வரவேணும். மனைவியே தலைவியாக குடும்பத்தைப் பார்க்க வேணும். நான் Housewife வேலை செய்யவேணும்.வின்சி மேடம் தயவு செய்து பதில் பதிவு தரவும்.

சமுத்ரா said...

வின்சி எந்த காலத்துல இருக்கீங்க? இப்ப எல்லாம் பெண் பார்க்கப்
போகிற போது ஆண்கள் தான் பயப்படவேண்டி இருக்கிறது. வீடு இருக்கா
சேவிங்க்ஸ் எத்தனை இருக்கு? என்ன சம்பளம்? வேலை நிரந்தரமா ?என்று ஆதிக்கம் செலுத்துவது
பெண்கள் தான். ஆண்கள் தங்கள் உரிமைக்காகப் போராடும் காலம் வந்து கொண்டு
இருக்கிறது. நீங்கள் இன்னும் ஒரு நூற்றாண்டு முந்திய காலத்தில் இருக்கிறீர்கள்.
நீங்கள் சொல்லும் விஷயங்களில் சிலவற்றை நான் ஆமோதிக்கிறேன்.ஆனால் எல்லாவற்றையும்
ஒத்துக் கொள்ள முடியாது. நீங்கள் மறைமுகமாக ஒரு பெண்ணாதிக்க சமுதாயத்தை
விரும்புகிறீர்களா என்ன?