Wednesday, 3 February 2010

சூப்பர் ஸ்டார்களின் ஆணாதிக்கம்.

ரஜினி பாபா என்று ஒரு திரைப்படத்தில் பெண்கள் அதிகமாக ஊர் சுற்றினால் கெட்டு போய்விடுவார்கள் என்றார். விஜய் என்ற அடுத்த வளரும் சூப்பர் ஸ்டார். கட்சி என்ற கமர்கட்டை காட்டி படத்தை ஓட வைக்கும் தந்திரத்தை ரஜினியிடமிருந்து கற்றுக்கொண்டு தமிழக மக்களை மூடர்களாய் வைத்திருக்க துடிக்கும் இளைய தளபதி. அவர் ஒரு படத்தில் அசின் போர்த்திக்கொண்டு வரவேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். அதாவது போர்த்தி நல்ல பெட்ஷீட்டா எடுத்து முழுசா போர்த்தி மஞ்சள் பூசி ஒரு ரூபா சைசுக்கு குங்குமம் வச்சுகிட்டு வந்தா உடனே எல்லோரும் நம்மள மகாலட்சுமி என்று கும்பிடுவார்களாம். ஆக பெண்கள் இவர்களை பொருத்தவரை கும்பிடும் சாமியாக இருக்க வேண்டும் அல்லது காம இச்சையை பூர்த்தி செய்யும் பரத்தையாக இருக்க வேண்டும். அதை தவிர பெண்ணுக்கென்று தனியாக எந்த அடயாளமும் இல்லை. அவளது படிப்போ அறிவோ வேலையோ சம்பாத்தியமோ இல்லை. மகாலட்சுமி அல்லது மஜா சுந்தரி.

படையப்பா என்றொரு திரைப்படத்தில் அதிகமா ஆசைப்படுற ஆம்புளையும் அதிகமா கோபப்படுற பொம்புளையும்....அதென்னப்பா ஆண்கள் ஆசைப்பட கூடாதாம் ஆனால் கோபப்படலாமாம்...பெண்கள் ஆசைப்படலாமாம் ஆனால் கோபப்படக்கூடாதாம். எங்கேருந்தையா இந்த சைக்காலஜி எல்லாம் கத்துகிட்டு வர்றீங்க....மறுபடியும் பெண் என்பவள் போர்த்திக்கொண்டு கோபப்படாமல் தலை குனிந்தபடி ஆண்களை கண்டால் நாணி ஒடுங்கி ஒடிந்து ஓடக்கூடிய அந்த திரைப்படத்தில் வரும் சவுந்தர்யா போல் இருக்கவேண்டும் என்று சூப்பர் ஸ்டார் வருங்கால இளைஞர்களுக்கு ஆணாதிக்கம் கற்றுக்கொடுக்கிறார்.

படையப்பா திரைப்படம் எனக்கு பிடிக்கும். ஒரு ஆணின் உயிர் பிச்சையில் வாழ பிடிக்காத ஒரு புரட்சி பெண்ணாக ரம்யா நடித்திருப்பார். உண்மையில் அந்த கிளைமாக்ஸ் ரஜினிக்கு எத்தனை பெரிய அவமானம். ஆனால் நாம் பிச்சை போடுவது சூப்பர் ஸ்டார் என்பதால் அவரது பிச்சையை தூக்கி அவர் முகத்தில் வீசிய வீர பெண்மணியை பரிதாபத்தோடும் பிச்சை போட்ட சூப்பர் ஸ்டாரை கம்பீரத்தோடும் பார்க்க பழகிவிட்டோம். காலம்காலமாய் பெண்கள் அடிமைகளாய் வீட்டு வேலை செய்தபடி வீட்டோடு இருக்க வேண்டும் என்று நமது ஹீரோக்கள்கள் கற்பித்து வைத்திருக்கிறார்கள்.

எல்லோரும் நல்லா பாத்துக்கோங்கப்பா......ஹீரோ மற்றும் ஹீரோவின் அறிவுரைப்படி உடை உடுத்தியிருக்கும் மகாலட்சுமி. உடம்ப காட்டக்கூடாதுன்னு ஆணாதிக்க அறுவுரை சொன்ன நமது தளபதி கட்டிக்கொண்டு நிற்பது நம்புங்கப்பா மகாலட்சுமி...


திரைப்படங்களில் ஒரு காட்சியில் ஹீரோயின் ஆடை ஆபாசமாக இருப்பதாய் ஹீரோ அறிவுரை கூறுவார். அதாவது பெண்கள் அடக்கமாக அமைதியாக பஜாரியாக அல்லாமல் நாணத்தோடு வெட்கப்பட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்று ஹீரோ அறிவுரை கூறுவது அதற்கு அடுத்த காட்சியில் ஹீரோவின் அந்த ஆணாதிக்க அறிவுரையால் மனம் மாறி ஹீரோயின் புடவை சுற்றிக்கொண்டு வந்து தன் காதலை வெளிப்படுத்துவதும் அதற்குள் பொறுமையில்லாமல் அடுத்த காட்சியில் சுவிட்சர்லாண்டில் ஹீரோயினுக்கு ஒரு ஜெட்டியும் பிராவும் கொடுத்து அரை நிர்வாணமாய் ரோட்டில் ஆட விட்டு ஹீரோ கோட் சூட் கூளிங் கிளாஸ் சமிதமாய் ஓடி வருவதும்.....அட டா என்னே தமிழ் சினிமா....

தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் ஆணாதிக்க சிந்தனைகளை போதிக்கவும் அதே படத்தில் ஐட்டம் சாங் என்ற பெயரில் அரை நிர்வாணமாக பெண்களை குலுங்க விட்டு வேடிக்கை பார்ப்பதற்கும் மட்டுமே ஹீரோயின்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். மொழி போன்ற பெண்ணை மையப்படுத்தி வரும் திரைப்படங்கள் ஒரு விலக்கு. மற்றபடி ஹீரோ ஏழைகளுக்கு தையல் மெஷின் கொடுப்பதும் ஞாயத்தை நிலை நாட்டுவதும் குடிசை மக்களோடு குழந்தைகளோடு பாடுவதும் ஆலமரம் ஆக்ஸ்போர்டு ஆக வேண்டும் என்ற கற்பனைக்கும் எட்டாத கர்மாந்திர வரிகளை பாடி இளைஞர்களை தன் பால் ஈர்த்து அரசியல் சினிமா ஆதாயம் தேடவும் மட்டுமே பயன்படுகிறார்கள்.

இங்கே உலக சினிமா உலக சினிமா என்று பீற்றிக்கொள்ளும் கமல் கூட ஒரு பெண் கதாபாத்திரத்தை ஆபாசத்தின் உச்சமாகவும் இன்னொரு கதாபாத்திரத்தை வெகுளித்தனத்தின் உச்சமாகவும் காட்ட தவறவில்லை. ஆனால் அதே திரைப்படத்தில் அவர் மட்டும் பத்து வேடங்களிலும் புரட்சியாளராகவே வருகிறார்.

நேற்று போக்குவரத்து கழகத்தின் பேருந்தின் கூரையின் மீது நின்றுகொண்டு கல்லூரி மாணவர்கள் டான்ஸ் ஆடுகிறார்கள். ஒருவர் தவறி விழுகிறார். உடனே அந்த மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து பஸ் ரயில் ஆட்டோ என்று கற்களை வீசி தாக்குகிறார்கள். இப்படிப்பட்ட குரங்கு கூட்டம் தான் விஜய் ரஜினி என்று கையில் ஒரு கர்சீப்பை கட்டிக்கொண்டு போஸ்டர் ஒட்டி அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி முன் இருக்கையில் அமர்ந்து விசில் அடிக்கிறது. அந்த ஒன்றுக்கும் உதவாத ஆண் வீரர்கள் தங்களின் ஹீரோ ஆணாதிக்க வசனம் பேசும் போது விசில் அடிப்பார். அது போன்ற மன நிலை பாதிக்கப்பட்ட இளைஞர்களை ஒரு வித வன்முறை ஆபாச போதையில் ஆழ்த்தி பணம் பார்க்கும் நீங்கள் எல்லாம் ஹீரோக்கள்(குரங்கு கூட்டத்திற்கு மட்டும்) என்று சொன்னால் நான் ஒத்துக்கொள்வேன் தயவு செய்து சினிமா கலைஞர்கள் என்று சொல்லி சினிமா என்ற அதிசயத்தை அழுக்கு படுத்த வேண்டாம்.

என்னுடைய பெண் பார்க்கும் படலம் என்ற கட்டுரைக்கு நிறைய பதில்கள் வந்தன. சில பதில்களில் பெண் பார்க்க வரும் பொழுது காபி கொடுப்பதில் தவறில்லை என்று சொன்னார்கள். காபி கொடுப்பதில் தவறில்லை. அதை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் செய்யட்டுமே. பெண் தான் காபி தட்டை தூக்கிக்கொண்டு போய் ஒரு சர்வரை போல் ஒவ்வொருவருக்கும் காபி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையே.

பெண் பார்க்கும் சடங்கில் இப்போது காலில் விழுவது இல்லை பாட்டு இல்லை என்றெல்லாம் பெரிய புரட்சியாளர்கள் போல் ஆண்கள் எழுதுகிறார்கள். ஆண்களே உங்கள் முன்னோர்கள் இதை எல்லாம் கன கச்சிதமாய் பின் பற்றினார்கள். பெண்களை பாட சொல்லி அவள் ஊமையா இல்லையா என்று சரி பார்த்தார்கள். நடக்க சொல்லி நொண்டியா இல்லையா என்று சோதித்தார்கள். பெரியர்வர்களை சேவித்தல் என்று சொல்லி மண்டி போட்டு தலை குனிய வைத்தார்கள். இப்போது பெண்கள் வளர்ச்சியும் எழுச்சியும் அடைந்த பிறகு அப்படி சொல்ல உங்களுக்கே கூச்சமாக இருக்கும் அல்லது அப்படி சொன்னால் எந்த பெண்ணும் செய்ய மாட்டாள் என்பதால் தான் அந்த சங்கதிகள் எல்லாம் மூட்டை கட்டப்பட்டன. மாறாக ஆணாதிக்க சிந்தனை இல்லாததாலோ....அல்லது ஆண்கள் எல்லாம் புரட்சியாளர்கள் ஆகிவிட்டதாலோ அல்ல...பெண்கள் முன்னேறியதால் தான் இந்த கொடுமைகள் அழிக்கப்பட்டு விட்டன.

30 comments:

வால்பையன் said...

இவனுங்க யாரு, அப்படி இருக்கனும், இப்படி இருக்கனும்னு சொல்றதுக்கு!

VINCY said...

நன்றி வால். அது தான் என்னுடைய கேள்வியும். இவர்கள் அப்படி அறிவுரை சொல்வதும் ஒரு கூட்டம் மன நோயாளிகளை திருப்தி படுத்தி அவர்க்ளை வைத்து தங்கள் படத்தை ஓட்டி கோடி கோடியாய் கல்லா கட்டுவதற்கு மட்டுமே....

வால்பையன் said...

திருவள்ளுவரே நிலபுரபுத்துவ சொம்பு தூக்கி என்று சொல்லி கொண்டிருக்கிறேன்!

பத்தினி சொன்னால்
பெய்யென பெய்யும் மழையாம்!

மழை பெய்யாட்டி!?

ரசினி பொண்டாட்டியையும், விசய் பொண்டாட்டியையும் நிக்க வச்சு மழை பெய்ய சொல்லலாமா!?

VINCY said...

என்னது பத்தினி சொன்னா மழை பெய்யுமா...
திருவள்ளுவர் தாடிய தீ வச்சு கொளுத்த....
புருஷனோட கால தொட்டு கும்பிட்டு சொன்னா உடனே மழை பெய்யுமாம்....இந்த திருக்குறள எழுதுறப்ப வள்ளுவரு ஆந்திரா பக்கம் போயிருப்பாருன்னு நினைக்கிறேன். அவனுங்க தான் இப்படி மசலாவா அரச்சு தள்ளுவாங்க. ஒரு படத்துல மழை பெஞ்சா ஹீரோயின் வருவாளே அது மாதிரி

VINCY said...

//ரசினி பொண்டாட்டியையும், விசய் பொண்டாட்டியையும் நிக்க வச்சு மழை பெய்ய சொல்லலாமா!?//

இவனுங்களுக்கு இது தான் வேலை வால். எவ்வளவு படத்துல பாத்திருப்பீங்க...ஆ..ஊன்னா பொம்புளைங்குள அட்வைஸ் பண்றதும் விரல சுண்ட்ரதும். குரலி வித்த காரன் மாதிரி. இவனுங்க எல்லாம் சினிமா நடிகர்கள் அல்ல. பப்பூன்ஸ். சர்க்கஸ் காட்டி விசில் அடிக்க வைக்கிற கூட்டம். அத தான் செஞ்சுகிட்டு இருக்கானுங்க. அவனுங்க பின்னாடி நம்ம மக்கள் விஜய் ரஜினின்னு நக்கிட்டு போறானுங்க....அவனுங்களோ கோடி கோடியா ஒவ்வொரு படத்துக்கும் வாங்கிட்டு செட்டில் ஆயிடுறாங்க. அப்புறம் ஒருத்தர் அதுல ஆன்மீகவாதியாம். யோவ் சோத்துக்கு வழி இல்லாதவன் முதல்ல இமயமலைக்கு போகணுமுன்னு நினைக்க மாட்டான். எங்கயாச்சும் எச்ச இலை இருக்கான்னு பாப்பான். சோறு கிடச்சு கொளுத்த மனுஷன் தான் அடுத்து என்ன செய்யுறதுன்னு தெரியாம ஏதாவது சாமியார் கிட்ட போய் பணத்த கொடுத்த நிம்மதி தேடுவான்.

VINCY said...

apadi antha aalu nimathi theadi poana atha kooda TVla pudichu poatu panamum pukalum theadikiraanga......enna kodumada sami.

தண்டோரா ...... said...

நல்ல மிதிங்க ..இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்!!

பித்தனின் வாக்கு said...

என்ன அம்மினி காபி மேட்டரை நீங்க இன்னமும் விடவில்லையா? நீங்க மட்டும் என்ன ஒழுங்கு. உங்களுக்காக நாங்க ஒரு காலத்தில் காளை அடக்கவில்லை. அம்பு விடவில்லையா? வட்டக்கல் தூக்கி வலிமையைக் காட்ட வில்லையா? அன்று நீங்க ரொம்ப டிமாண்ட் பண்ணீங்க. எங்க எல்லாரையும் பொம்மை மாதிரி உக்கார வைச்சு சுயவரம் நடத்த வில்லையா?. எல்லாம் மாறி விட்டது அல்லவா! அது போல மறுபடியும் இது எல்லாம் மாறும். ஒரு காலத்தில் பெண்ணுக கிடைக்காம ஆண்கள் அடித்துக் கொள்ளப் போகின்றார்கள். அதுவும் நடக்கும். நன்றி.

செந்தழல் ரவி said...

கொஞ்சநாளா உங்க வலைப்பக்கம் வரமுடியல.

உதற்றீங்க...!!!

Nilaksan said...

ஹா ஹா ஹா பித்தனின் வாக்கு பலிக்கட்டும்.

jothi said...

//பெண்கள் முன்னேறியதால் தான் இந்த கொடுமைகள் அழிக்கப்பட்டு விட்டன.//

jothi said...

//பெண்கள் முன்னேறியதால் தான் இந்த கொடுமைகள் அழிக்கப்பட்டு விட்டன.//

இன்னமும் பெண்கள் முன்னேறவில்லை, கொடுமைகளும் அழிக்கப்படவில்லை.

பெண்கள் முன்னேற்றம் என்பது பத்தாவது, பன்னிரெண்டாவது மார்க் வாங்கியவுடன் முடிந்துவிடக்கூடாது. தாண்டி வரவேண்டும். படித்த கல்வியை நடைமுறை பயன்பாட்டிலும் செயல்படுத்த வேண்டும். அதை அடையும் வரை என்ன மார்க் வாங்கியும் பலனில்லை. அதற்கு திருமணம் கண்டிப்பாக ஒரு தடைக்கல்லே. துரதிர்ஷ்டமாக இந்திய பெண்களுக்கு வாழ்க்கை திருமணத்திற்கு பின்பே ஆரம்பிக்கிறது.

கட்டுரை நல்ல விளாசல்.

ஆனால் ஏன் ரஜினி பெண்டாட்டியையும் விஜய் பெண்டாட்டியையும் இழுக்க வேண்டும். இங்கேயும் சம்பந்தமில்லா பெண்கள்தான் கிழிக்கப்படுகிறார்கள்

Madurai Saravanan said...

aanin methu kobam athu pal nedugkalamaka kuraya villai. paavam ennai ponra appavikalum athikam. anna visil atichchaan kunchukalai vaiththu intha starkal pannum attakaasam eppothu kuraiyum ungkalai ponru athangkaththudan.

inru penkal suyamaay sampaathikenranar aakave aan athikkam veliyil theriyavarukirathu . innum penkal suyamaai nilaiththu ninraal thaanaka otungkividum ellaa athikkamum.

aavathum pennaale , alivathellam atthikka vathiyaale.

tamil agaviyan said...

இவ்வளவு கோபமா ஆண்கள் மீது உங்களுக்கு, நானும் ஆணாதிக்கத்துக்கு எதிரானவன் தான் ஆனால் இந்த அளவுக்கு இல்லை. ஏன் தேவையில்லாமல் நடிகர்களை ஏன் இப்படி சாடுகிறீர்கள், இயக்குனர்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்வதுதான் ஒரு நடிகனின் வேலை, ஆணாதிக்கத்துக்கு எதிரான நடிகர் சத்யராஜ் கூட "செந்தமிழ்நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே" என பாடிஉள்ளர், இது அவர்கள் சொந்த கருத்தில்லை. உங்கள் கருத்தில் நியாயம் இருந்தாலும், நீங்கள் சொல்லும் விதத்தில் ஆணாதிக்கத்துக்கு எதிரான என்னை கூட ஒரு நிமிடம் இப்படி இவர்கள் பேசுவதற்கு பேசாமலே இருகலாம் என்று தோன வைக்கின்றது .
//ஆனால் ஏன் ரஜினி பெண்டாட்டியையும் விஜய் பெண்டாட்டியையும் இழுக்க வேண்டும். இங்கேயும் சம்பந்தமில்லா பெண்கள்தான் கிழிக்கப்படுகிறார்கள் // முழுமையாக வழிமொழிகிறேன் .
என் தமிழில் பிழை இருந்தால் மன்னிக்கவும், நான் மேலை நாட்டில் வளர்ந்தவன்.

aruns said...

Poddi Losu... entha bloggers tholla thangalada sami... I dont agree with your views.. Cinema is just entertainment. What is your view about women appearing Nude in Hollywood..is it not insult for women in the west where women n men are treated equal?

Dont write blogs just for sake of visitor count and comments!!

Get lost you bitch...

pillaival said...

patayappa padadhuku vasanam yezhudhunadhu k.s .ravikumar. thirupatchi patadhuku vasanam yezhudhunadhu perarasu. okva.

VINCY said...

//patayappa padadhuku vasanam yezhudhunadhu k.s .ravikumar. thirupatchi patadhuku vasanam yezhudhunadhu perarasu. okva.//

அண்ணா தெரு நாய் கடிச்சா என்ன பண்ணுவோம் மூடிகிட்டு போவோம். அதுவே வீட்டு நாய் கடிச்சா ஓனர சும்மா விடுவமா? ரஜினி பெரிய நடிகர் அவர் டயரக்டர் சொல்றத திருப்பி சொல்ற கிளிப்பிள்ளையா இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்புறம் பாபா என்று ஒரு படம் ஒரு கடவுளை மையப்படுத்திய படம் அதற்குள் மசாலாவை அரைத்து பஞ்ச் அடித்து அடியாட்களை பந்தாடி ஹைபை ஸ்டைல் எல்லாம் வைத்து எடுக்க காரணம் என்ன? கல்லா கட்டுவது தான். நேர்மையாய் அதை ஒரு பக்தி படமாக ரஜினி எடுத்திருக்க வேண்டியது தானே. அப்படி எடுத்தால் வசூல் வராது என்பதால் அதாவது ஒரு கோடி செலவு செய்துவிட்டு நூறு கோடி அள்ள நினைக்கும் ரஜினியின் பேராசையின் முன்னால் ரஜினி என்ற சினிமா கலைஞன் புஸ்.....

VINCY said...

//What is your view about women appearing Nude in Hollywood..//

Wonderful question. But I dont think there would be male chauvinistic heroes like James Bond or De Caprio or Jackie Chan who come on screen and advise women what to wear and what NOT to.....

I am against male chauvinistic view of heroes. They preach heroines in movies what to wear but they themselves dance with them making heroines wear minimum dresses. So the male chauvinistic approach or the dialogues or the scenes towards heroine is to satisfy a particular group of people called visil adichaan kunchugal.

VINCY said...

உங்களை போல் முட்டாள்களை நான் எப்படி சொல்லி புரிய வைப்பது. அட லூசே கே.எஸ். ரவியோ பேரரசோ எதற்கு ரஜினிக்கும் விஜய்க்கும் அப்படி ஒரு ஆணாதிக்க காட்சியை உருவாக்க வேண்டும். காரணம் உங்களை போல் விசில் அடிச்சான் குஞ்சுகளுக்காக. தமிழ்நாட்டில் ஒரு கூட்டம் இருக்கிறது. அதற்குபெண்கள் நாகரீகமாக உடை உடுத்தினால் பிடிக்காது பெண்கள் சுதந்திரமாக திரிவது பிடிக்காது...கற்பழிப்புக்கு காரணம் பெண்கள் ஆபாசமாக உடை உடுத்துவது என்று சிறு பிள்ளைத்தனமாக காரணம் கற்பிக்கும் அந்த கூட்டம் தான் பப்புகளில் புகுந்து அடிப்பதும் பெண்கள் மீது ஆசிட் வீசுவதும் கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்வதும் ஒன்றுக்கும் உதவாத ரசிகர் மன்றம் நடத்துவதும் என வளர்கிறீர்கள். எந்த ஒரு லட்சியமும் இல்லாமல் நீங்கள் வாழ்வதும் பெண்கள் ஒழுங்காக படித்து முன்னேறி சுதந்திரமாக திரிவது உங்கள்கண்ணுக்கு உறுத்தும். எனவே உங்கள்மன புழுக்கத்தை குறைக்க உங்கள் அபிமான ஹீரோ ஆணாதிக்க வசனம் பேசும் போது உங்கள் அடிப்பகுதி குளிர்கிறதென்பதால் தான் அப்படிப்பட்ட வசனங்கள் வைக்கப்படுகிறதென்பதை நீ விசில் அடிச்சான் குஞ்சாய் இருக்கும் வரை அறிந்துகொள்ளப்போவதில்லை.

pillaival said...

akka enaku puriyala.ungal thevai enna?samugathil enna matram vendum? or aangalitam enna matram vendum?

N. Arun Kumar said...

எனக்கு ஹாலிவுட் படங்கள் மிகவும் பிடிக்கும். அங்கு இருக்கும் மக்களுக்கு தொழில்நுட்ப அறிவு அதிகம். திரையில் எதாவது வந்தால், ஏன் எதற்கு என பகுத்து பார்க்கும் தன்மை அதிகமாக உள்ளது. ஆனால் நம் மக்களோ 4 சண்டை, 5 பாடல்களோ வைத்து படம் எடுத்தால், சூப்பர் ஹிட் ஆக்குகின்றனர். "தசாவதாரம்" போன்ற தொழில்நுட்பம் நிறைந்த படங்களை எடுத்தால், புரியவில்லை என வெக்கம் இல்லாமல் சொல்கின்றனர். அதிலிருந்தே தெரியவில்லை. நம் இளைஞர்கள் இன்னும் முட்டாள்களாகவே இருக்கின்றனர். இங்கு உள்ள எதனை இளைஞர்களுக்கு மொபைல், ப்ளுடூத், இன்டர்நெட் போன்ற தொழில்நுட்பங்கள் தெரியும். குறிப்பாக "வேட்டைக்காரன்" படத்தில் இருந்து கேள்வி கேட்கப்பட்டது. மிகவும் கடினமான கேள்வி. அந்த திரைப்படத்தில் எத்தனை சண்டை காட்சிகள் உள்ளன என்று. அதாவது எத்தனை தடவை தம் அடிக்க வெளில போனைன்னு கேக்கறாங்க. ஹாலிவுட் படங்களில் சண்டை காட்சியின் போது கண்களை அங்கே இங்கே நகர்த்த முடியாது. அந்த அளவு தொழில்நுட்பம் இருக்கும். நம்மவர்களோ அதன் அருமை தெரியாமல், அரைத்த மாவையே அரைகின்றனர். மக்களும் ஜாலியாக தம் அடித்து விட்டு வருகின்றனர். ஹீரோக்களும் வழக்கம் போல பஞ்ச் டயலாக்குகளும், கொரங்கு சேட்டைகளும், அரைகுறை நடனங்களும், ஓட்டை திரைகதைகளும், ஒன்றுக்கும் உதவாத மசாலா திரைப்படங்களும் நடித்துகொண்டு இருக்கின்றனர். அவர்கள் வாழும் வாழ்க்கையே ஒரு ஏமாற்று பிழைப்பு. போதா குறைக்கு ரசிகர்களுக்கும் பெண்களுக்கும் பெரியவர்களுக்கும் அட்வைஸ் வேறு. மொதல்ல நீங்க திருந்துங்க. நல்ல தரமான படமா, யாருக்கும் அட்வைஸ் பண்ணாம, மக்களை நல்ல வழிக்கு கொண்டு வர படமா நடிங்க. அப்புறம் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணலாம்

வால்பையன் said...

//ஆனால் ஏன் ரஜினி பெண்டாட்டியையும் விஜய் பெண்டாட்டியையும் இழுக்க வேண்டும். இங்கேயும் சம்பந்தமில்லா பெண்கள்தான் கிழிக்கப்படுகிறார்கள் //

நியாயம் தான்!

அந்த பின்னூட்டத்திற்காக எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்!

Anonymous said...

Dear Vincy

Dont hit Rajini , He is super star because of his good . He says athigama kopapadura pengal thal . kopapadakudathunu sollala . My syster , mother , wife are girls so how i bad treat for girls . do u know i am the hero of my mother , syster , wife and my syster daughter but all decision taken by him and i need happy for my family and my womens world guidence for me . so dont say many men . say some men only .
By G

Divya said...

Pls, Vincy mistrrss, I am a 24 year old male. Workking in It company. But I am a Female supremacy follower. I need a mistress(wife superior). How can I sesrch for like a female? Where she get for me to rule myself. I am a folower of your artcle. Please write more. Female obedeienter

Divya said...

Dear vincy, I want a mistress to rule me. I am 24. How can identify my ruler.

Divya said...

Pls, Vincy mistrrss, I am a 24 year old male. Workking in It company. But I am a Female supremacy follower. I need a mistress(wife superior). How can I sesrch for like a female? Where she get for me to rule myself. I am a folower of your artcle. Please write more. Female obedeienter

Divya said...

Pls, Vincy mistrrss, I am a 24 year old male. Workking in It company. But I am a Female supremacy follower. I need a mistress(wife superior). How can I sesrch for like a female? Where she get for me to rule myself. I am a folower of your artcle. Please write more. Female obedeienter

Perumal Vadivel said...

super page

Perumal Vadivel said...

super page

Perumal Vadivel said...

super page