Friday, 2 November 2018

மீ டூ (Mee too)

மீ டூ இயக்கம் ஒரு அசாத்திய இயக்கம். அதை நாம் இரு கரம் கூப்பி வரவேற்க வேண்டும். பல திமிர் பிடித்த ஆண்களின் கோமணத்தை உருவிவிடும் அற்புதமான இயக்கம். உன் லிப்ஸெ ஆர்கன் மாதிரி தான் இருக்கு அதனால கிஸ் பண்ணிட்டேன் என்று ஒரு பெண்ணின் உதட்டை கூட ஏதோ போக பொருளாக பார்க்கத்தூண்டி எப்போதும் பெண்களை அவர்களின் உடலை தங்கள் சுகத்திற்கு எப்படி எல்லாம் அனுமதியின்றி, அனுமதியோடு, மிரட்டி, உருட்டி, காதல் பேசி , பணத்திற்காக, வாய்ப்பிற்காக என நக்கி பிழைக்கும் ஆண்கள் கூட்டத்தை கூண்டோடு காலி செய்கிற இந்த இயக்கத்தை நான் பெரிதும் வரவேற்கிறேன்.


இந்த இயக்கம் வந்ததிலிருந்து அவனவனுக்கு கிலி ஏறுகிறது. பி.பி. எகிறுகிறது. எங்கே நாம் பக்கத்து வீட்டு கொடியில் காய்ந்த உள்பாவாடையை பத்து வருடத்திற்கு முன்பு மோந்து பார்த்த வரலாறை வெளியே விட்டு நமது நாடாவை உருவிவிடுவார்களோ என்று நாடெங்கும் அலறி அடித்து திரிகிறார்கள். இவ்வளவு குற்றம் செய்தீர்களே இப்போது அனுபவியுங்கள்.


அடுத்ததாக "ஏன் அப்போது சொல்லவில்லை, ஏன் 10 வருடம் கழித்து சொல்கிறீர்கள்?" என்று கேட்கிறார்கள். "டேய் எங்களுக்கு எப்போ மூடு வருதோ அப்போ வேளியே சொல்லுவோம்டா.....நீங்க முதல்ல ஒழுங்க இருங்க" என்று தான் பதில் கூறவேண்டும்.


அடுத்து ஆதாரம் இல்லாமல் சொல்கிறோம் என்கிறார்கள். ஆதாரமில்லாமல் தானே பல பெண்களோடு பாயாசம் குடித்துவிட்டு பஞ்சாயத்தில் அபராதம் கட்டி அலேக்காக திரிந்தீர்கள். டி.என்.ஏ டெஸ்ட் என்று ஒன்று வருவதற்கு முன்பு வரை, எத்தனை பெண்களை கெடுத்துவிட்டு, அதை நான் தான் செய்தேன் என்று என்ன ஆதாரம் இருக்கிறது என்று அபலை பெண்களை கண்ணீர் விட வைத்தீர்கள்.

ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டு அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்டு அந்த பெண்ணை அழ வைத்து கேவலப்படுத்தி கூனிக்குறுகும்படி நிர்பந்தித்து இன்பம் கண்ட சாடிஸ்ட் கூட்டம் இன்று ஆதாரம் கேட்டு கொக்கரிக்கிறது.


மீ.டூ இயக்கத்தின் சாதனையே, முன்பெல்லாம் ஒருவன் என்னை கெடுத்துவிட்டன் என்று பெண் அவமானப்பட்டு அழுவதாக இருந்த காலம் போய் இன்று அவன் என் பேன்டீசை மோந்து பார்த்தான் என்று பகிரங்கமாக சொல்கிற போது கூனி குறுகி ஓடி ஒழிந்து அவமானப்படுவது இந்த ஆண் வர்க்கம், இந்த மாற்றத்தை இன்று சமுதாயத்தில் ஏற்படுத்தியதே முதல் வெற்றி.

ஒரு பெண்ணை ருசி பார்த்தேன் என்பதை ஆண் திமிரோடு சொல்லிக்கொண்டிருந்த காலம் போய், ஐய்யோ அவளை கால் விரல் நகத்தை கூட அனுமதியில்லாமல் தொட்டுவிட்டால் முகத்தில் சாணி அடித்து காறி உமிழ்ந்து கழுவில் ஏற்றும் இந்த முறை வரவேற்கத்தக்கது.


பெண்களோடு சல்லாபித்து குழந்தையே கொடுத்துவிட்டு எந்தா ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் ஆண் திமிரோடு சமுதாயமும் அவனை ஏதோ ஒலிம்பிக்கில் மெடல் வாங்கிய வீரனை போல தாங்கி அந்த பெண்ணை ஏதோ ஒழுக்கம் கெட்டவள் போல் எள்ளி நகையாடி இன்பம் கண்ட சமுதாயம் இன்று ஆணை நடுவீதியில் நிற்க வைத்து அம்மணமாக ஓட விடுகிறது. இது வியக்கத்தக்க மாற்றம். இந்த மாற்றம் தொடரவேண்டும். அவன் என்னை பாலியல் ரீதியாக சீண்டினான் என்று பெண்கள் தைரியமாக சொலதும் அதற்கு ஆதரவுகள் குவிவதும், அப்படி சொல்லப்பட்ட ஆண் தனிமைப்படுத்தப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதும் மிக சரியான மாற்றம். இத்தனை நாள் பாலியல் ரீதியாக நம்மை துன்புறுத்திவிட்டு அவர்கள் குஜாலாகவும் நாம் கூனி குறுகியும் திரிந்த காலம் போய்விட்டது.Related image


வாலாட்டினா, வாழ்க்கை பூரா தலையை தொங்க போட்டு திரியவேண்டியது தான் என்பதை உணர்த்தி உரக்கச்சொல்லும் இயக்கம், வாழ்த்துக்கள்.


அடுத்து மீ.டூ. புகாரை எப்படி கையாள வேண்டும். எப்படி சட்டங்கள் இயற்றவேண்டும் என்று தோழிகளோடு விவாதித்தபோது, விசித்தரமான பல ஐடியாக்கள் தோன்றின. அவற்றை கேட்கிற போது சிரிப்பாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஐயோ பாவம் என்பது போன்றும் உணர்வுகள் எழுந்தன. அதைப்பற்றி அடுத்த பதிவில்.

இத்தனை நாள் ஆண் என்ற திமிரோடு திரிந்தவர்களுக்கெல்லாம் இனி ஆண் என்ற அகந்தை ஒழிந்து தான் ஆண் என்பதே பெண்களுக்கு சேவை செய்து அதன் மூலம் பெறவேண்டிய தகுதி வெகுமதி என்பதை உணரும் காலம் வந்துகொண்டிருக்கிறது.


7 comments:

Anonymous said...

Arumai maharaani

Anonymous said...

நீங்கள் சொல்லும் கருத்து அத்தனையும் உண்மை ஆண்கள் சமுதாயம் ஒழிய வேண்டும் வருங்காலத்தில் பெண்கள் கால் அடியில் அடிமையாக ஆண்கள் இருக்க வேண்டும் vincy அவர்களே தொடரட்டும் பெண் ஆதிக்கம் தொடர்ந்து எழுதுங்கள் நான் எப்போதும் உங்களுக்கு அதரவு தருவேன்

Anonymous said...

உங்களின் இந்த பதிவு வரவேற்கத்தக்கது அருமையாக சொல்றுகிங்க vincy அவர்கலே உண்மையில் பெண்கள் போற்றபடவென்டும் தலை நிமிர்ந்து இருக்க வேண்டும் ஆண்கள் சமுதாயம் ஆதிக்கம் ஒழிய வேண்டும் பெண்கள் இடம் ஆண் மன்டி இடவேண்டும் பெண்கள் ஆதிக்கம் வளரவேண்டும் பெண் சமுதாயம் பொற்றபடவென்டும் பெண்கள் வழியில் ஆண் பின்பற்றவேண்டும் அனைத்து ஆண்களும் பின்பற்றும் வரை தொடர்ந்து எழுதுங்கள் வின்சி

Anonymous said...

Aduthaa pathivirku kathurukiren thayavu seithu thodarungal

ram said...

Correct madam missed this post so long sorry do continue

Anonymous said...

Hello Vincy

Romba months Aa unga site parthutu poren recent updates yathum ilainga Vincy Seeikram ungaloda Adutha pathivu Eluzthungaa Meeto pathi sollunga

Anonymous said...

I agree.