Wednesday 9 December 2009

ஷகீலாவுக்கு வேலை வாங்கி கொடுங்கள்.

ஒரு காலத்தில் மலயாள திரை உலகில் கொடி கட்டி பறந்த ஒரு நடிகை. தமிழிலும், வட நாட்டினர் கூட தெரிந்து வைத்திருக்கும் ஒரு செக்ஸ் சிம்பள் ஷகீலா. நான் நிறைய முறை இதை கவனிப்பதுண்டு. ஷகீலாவின் செக்ஸ் போஸ்டர்களை மாதர் சங்கங்கள் கிழிப்பதும் அதன் மேல் சாணி அடிப்பதும் செருப்பால் அடிப்பதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் பிட் நோட்டீஸ் கொடுப்பதுமாக ஷகீலா உட்பட பலர் நடித்து வெளிவரும் செக்ஸ் படங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.

இப்படி செய்யும் இவர்களின் நோக்கம் என்ன. சிலர் அந்த திரைப்படம் ஓடும் தியேட்டர் வாசலில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்துவதும் அங்கு வரும் ஆண்களை விரட்டுவதுமாக ஆண்களை கேட்டால் ஒரு பெரிய கலை எதிர்ப்பு கலாட்சாபமே அவர்கள் நடத்துவதாக சொல்லக்கூடும். எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் அப்போதெல்லாம் தோன்றும். இப்படி போராடும் இந்த மாதர் சங்க தொழிகளும் பெண்கள் தான் அந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகையும் ஒரு பெண் தான். ஒரு பெண் தன் இனத்தின் கௌரவத்தின் மீது அக்கரை கொள்ளாமல் தன் இனத்தை மேலும் மேலும் இழிவுபடுத்தும் ஒரு செயலை தொடர்ந்து செய்து வருகிறாள். ஆனால் மாதர் சங்கங்கள் ஷகீலாவுக்கு எதிராக போர் கொடி உயர்த்துவார்களா என்றால் இல்லை. காரணம் அவள் ஒரு பெண். இப்படி பெண்ணுக்கு பரிதாபம் பார்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும். நீங்கள் பரிதாபமாக ஒரு பெண்ணை பார்ப்பதன் மூலம் பெண் இனத்தை அவமதிக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரு விதத்தில் பரிதாபப்படுவது கூட பேசிஸம். (புரியாதவர்களுக்காக ஹிட்லரின் பேசிஸம்.)

உண்மையில் இப்படிப்பட்ட திரைப்படங்கள் வெளிவருவதற்கு முதல் குற்றம் சாட்டப்பட வேண்டியவர் ஷகீலா. அவரை தான் நாம் முதலில் திருத்த வேண்டும். காரணம் யாரும் அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி அது போன்ற படங்களில் நடிக்க வைப்பதில்லை. அந்த அம்மையாரே இஷ்டப்பட்டு தான் அது போன்ற திரைப்படங்களில் தோன்றி தன் பெருத்த உடலை காட்டி பணம் சம்பாதிக்கிறாள். என்னை கேட்டால் அந்த மாதர் சங்கங்கள் உடனடியாக ஷகீலாவுக்கு ஒரு நல்ல சம்பளத்தில் ஒரு வேலை வாங்கி கொடுத்து அவரது வருமானத்துக்கு வழி பண்ணலாம். அதை விட்டுவிட்டு போஸ்டரில் சாணி அடிப்பதும் படம் பார்க்க வரும் ஆண்களை விரட்டுவதும் அரசியல் போராட்ட ஸ்டண்டே தவிர வேறொன்றுக்கும் உதவாது.
















எனக்கு ரொம்ப நாளாக சந்தேகம் ஷகீலா அளவுக்கு குண்டாக ஒரு ஆன்டி போனால் எந்த ஆணும் சீண்ட கூட மாட்டான். ஆனால் தியேட்டர் இருட்டில் அப்படி அந்த பெண்மணியிடம் என்ன தான் ரசிக்கிறார்களோ தெரியவில்லை.

----------------

கெட்ட வார்த்தைகள் அதிகம் பேசுபவர்கள் ஆண்கள் தான். பெண்கள் அவ்வளவு சகஜமாக கெட்ட வார்த்தைகள் உபயோகிப்பதை நீங்கள் பார்க்க முடியாது. ஆனால் ஆண்களுக்கு கோபம் வந்தால் மளமளவென கெட்ட கெட்ட வார்த்தைகளாக துப்பி தள்ளுவார்கள். உண்மையில் அப்படி கெட்ட வார்த்தை பேசும் ஆண்கள் கோழைகள் என்பதே உண்மை. அவர்களை கண்டு நீங்கள் அச்சப்பட தேவையில்லை. சைக்காலஜி படி கெட்ட வார்த்தை பேசுவதென்பது உங்கள் இயலாமையை வெளிப்படுத்தும் ஒரு மீடியா அவ்வளவுதான்.

பேருந்து ஓட்டுனர்கள் அதிகமாக கெட்ட வார்த்தை உபயோகிப்பதை நாம் பார்க்கிறோம். யாராவது குறுக்கே வந்துவிட்டால் உடனே ஓரிரு கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசினால் தான் அவருக்கு ஆண்மை அடங்கும். எதிராளியை உண்மையில் நேருக்கு நேராக சந்தித்து வீழ்த்த அல்லது நமது கோபத்தை தணித்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில் நமக்கு நாமே ஆறுதல் தேடும் விதமாகத்தான் கெட்ட வார்த்தைகளை நாம் பயன்படுத்துகிறோம். சில ஆண்கள் அதுவும் காலேஜ் பையன்கள் கெட்ட வார்த்தை பேசுவதை தாங்கள் வயதுக்கு வந்துவிட்டதை அறிவுறுத்தும் ஒரு மேற்கோளாக வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு இன்டர்நெட் சென்டரில் நின்றிருந்தேன். மூன்று கல்லூரி பையன்கள் வந்தார்கள். இன்டர்நெட் சென்டரில் ஒரு பெண் இருந்தாள். அது என்னவோ அந்த பெண்ணை பார்த்த பிறகு ஒருவன் இன்னும் பலமாக கெட்ட கெட்ட வார்த்தைகளால் தன் நண்பனை அர்ச்சிக்கிறான். அவர்களுக்கு கெட்ட வார்த்தை பேசுவது தன்னை ஆண் என்று தலை தூக்கி காட்ட உதவுகிறதென்றே நினைக்கிறேன். உண்மையில் கெட்ட வார்த்தை பேசும் ஒவ்வொருவரும் கோழைகள். தங்கள் இயலாமையை இப்படி வெளிப்படுத்துகிறார்கள்.

ஆண்மை இல்லாத ஒருவனை கட்டிலில் மனைவி ஆசையாய் நெருங்கினால் உடனே அவன் "தே...உனக்கு எப்ப பாத்தாலும் இதே நெனப்பு தானா? அச்சா புச்சா...." என்று கெட்ட கெட்ட வார்த்தையால் அர்ச்சிப்பான். உடனே மனைவி ஐயயோ நான் எவ்வளவு பாவம் செய்துவிட்டேன். அவர் கோபமாக இருக்கிறார். என்றெல்லாம் மனம் வருந்தி தலையணைக்குள் அழுது உறங்கிவிடுவாள். உண்மையில் ஆண்கள் கெட்ட வார்த்தை உபயோகிப்பது பல நேரங்களில் தங்கள் இயலாமையை மறைப்பதற்கே.


vincyontop@gmail.com

3 comments:

அண்ணாமலையான் said...

”எனக்கு ரொம்ப நாளாக சந்தேகம் ஷகீலா அளவுக்கு குண்டாக ஒரு ஆன்டி போனால் எந்த ஆணும் சீண்ட கூட மாட்டான். ஆனால் தியேட்டர் இருட்டில் அப்படி அந்த பெண்மணியிடம் என்ன தான் ரசிக்கிறார்களோ தெரியவில்லை.”
உண்மை என்னவென்றால், ஷகிலாவோ இல்லை ஏதொ ஒரு கீலாவோ இயற்கையின் படைப்பில் உருவான பெண் உடலை பார்க்கும் ஆர்வம் அடிப்படை காரனம். இரண்டாவதாக ஷகிலா போன்ற பெண்களுக்கு உள்ள தாழ்வு மனப்பான்மை(குண்டாக் இருக்கிற)இந்த மாதிரி படத்தில் நடிக்கிற போது கூடும் ஆண்கள் கூட்டம் கொடுக்கிற திருப்தி.. இறுதியாக இந்தியா போன்ற நாடுகளில் வெளிப்படையான் செக்ஸ் படங்களுக்கு அனுமதி இல்லாததால்(இருந்தால் ஒல்லி பெண்களும் வருவார்களோ என்னமோ?) இது போன்ற அழகிகள் தாமகவே முன்வந்து கலைச்சேவை புரிகிறார்கள்.

Unknown said...
This comment has been removed by a blog administrator.
என் நடை பாதையில்(ராம்) said...

உண்மையில் கெட்ட வார்த்தை பேசும் ஒவ்வொருவரும் கோழைகள். தங்கள் இயலாமையை இப்படி வெளிப்படுத்துகிறார்கள்.
இவர்கள் மட்டுமல்ல, கோபப்படுபவர்களும், கூட்டத்தில் கத்துபவர்களும் கூட கோழைகள் தான்.