Monday 21 September 2009

கன்னியாகுமாரி மாமனார்களின் வரதட்சணை வெறி.

உலகின் அழகான படைப்புகளின் ஒன்றாக திகழ்ந்தும் அறிவில் ஆண்களை மிஞ்சும் பல சாகசம் புரிந்தும் உலகிற்கு உயிர்களை நீட்டித்து கொடுத்தும் தன் உடல் சுகங்களை ஓரங்கட்டிவிட்டு அடுத்த சந்நதியின் உடல் நலத்துக்காய் தன்னை வருத்தி பாடு பட்டும் இன்னும் இங்கே பெண்களை யாரும் வணங்குவதாய் தெரியவில்லை. வணக்கத்துக்கு உரியவள் பெண். அவளை இன்னும் தெருவில் கைகுழந்தையோடு தெருநாய் போல் அலைய வைக்கும் ஆணாதிக்க வர்க்கம் இருக்கும் போது அவற்றிற்கு பதிலடி கொடுக்க ஒரே வழி பெண் ஆதிக்கம் என்று நான் பல முறை கூறுகிறேன். என் மீது சேறும் சகதியும் வாரி இரைக்கிறீர்கள் போகட்டும்.

கன்னியாகுமாரியில் நடக்கும் கொடுமைகளில் வெளியே வந்திருக்கும் ஒரு கொடுமையை படிக்க இங்கே சொடுக்கவும்.

http://www.dinamalar.com/new/Incident_detail.asp?news_id=12935


தமிழக மாவட்டங்களின் அதிகமாக வரதட்சணை புழங்கும் மாவட்டம் கன்னியாகுமாரி. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இங்கு பெண்களின் படிப்பு விகிதம் ஆண்களை விட மிக மிக அதிகம். உதாரணத்துக்கு இங்கே அதிக வரதட்சணையோடு கல்லூரியில் மூன்று நான்கு டிகிரி வாங்கிய ஒரு பெண் பத்தாம் வகுப்பு படித்து பஸ் டயர் உருட்டும் வேலை பார்க்கும் ஒருவனை மணந்துகொள்ள நேர்கிறது. அதற்கும் மாப்பிள்ளையின் தாய் தந்தை பேசும் பேரத்துக்கு அளவில்லை.

படிப்பிலும் அறிவிலும் சிறந்து விளங்குபவள், மாதா கடவுளுக்கு சமமாக போற்றப்படவேண்டியவள் இந்த கன்னியாகுமாரி மாவட்டத்தில் அழுகிய மீனுக்கு இணையாக விலை பேசப்படுகிறாள். பெண் ஆதிக்கம் கொண்டு தான் இதை உடைக்க முடியும் என்பது என் கருத்து மட்டுமல்ல அது தான் உண்மையும் கூட.

நீங்கள் கூட இதை முயற்சித்து பார்க்கலாம்.
மேட்ரிமோனி வாயிலாக ஒரு கன்னியாகுமாரி பையனின் புரோபைலை எடுத்துக்கொள்ளுங்கள். அவன் பி.ஈ எனும் அதி புத்திசாலி படிப்பு படித்தவனாக இருந்தால் நல்லது. ஹரியர்ஸ் வைத்து ஏதோ ஒரு குப்பை காலேஜில் பி.ஈ வாங்கிவிட்டால் இவர்கள் எல்லாம் ஐ.ஐ.டி யில் படித்த மேதாவிகள் என நினைப்பு. பிறகு அவன் சாப்ட்வேர் நிறுவனத்தில் இரா பகலாக உழைத்து இருபது முதல் முப்பதாயிரம் சம்பளம் வாங்குபவனாக இருக்கவேண்டும். செய்வது என்னவோ அடிமை வேலை இருந்தாலும் சாப்ட்வேர் எம்.என்.சி கூடவே என்ஜினியர் அட்ரா சக்க....
பிறகு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் நம்பருக்கு போன் செய்து உங்களுக்கு ஒரு மகள் இருப்பதாகவும் அவளும் பி.ஈ அல்லது அதற்கும் மேல் படித்தவள் என்றும் உங்கள் மகனின் புரோபைல் எங்களுக்கு பிடித்திருக்கிறது என்றும் சொல்லுங்கள். உடனே அந்த பையனின் தகப்பனாரிடமிருந்து கீழ்கண்ட கேள்விகள் வரும்.







வரதட்சணை வாங்கி திருமணம் செய்துகொள்ளும் ஆண்களை நீங்கள் கால் மேல் கால் போட்டுக்கொண்டு சுண்ட விரலை அசைத்து அருகில் அழைத்து உங்களின் பாதணிகளின் அடிப்பகுதியில் இருக்கும் அழுக்கை துடைத்துவிட சொல்வதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.அவர்களும் மண்டி போட்டு துடைத்துவிட வேண்டும். நமக்கு உபயோகம் இல்லாத பொருளை எதற்காக நாம் விலை கொடுத்து வாங்கவேண்டும்


பொண்ணுக்கு என்ன செய்வீங்க? (டேய் கெழ நாயே...போற வயசுல உனக்கு
ஏன்டா இந்த ஆசை. பையனுக்கு பொண்ண புடிக்குமா? பொண்ணுக்கு பையனை புடிக்கும? பெண் எப்படி பட்டவள்...குடும்பம் எப்படி அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. முதலில் கேட்கும் கேள்வி பொண்ணுக்கு என்ன செய்வீங்க. அதாவது என்னுடைய என்ஜினியர் ஆண் மாட்டுக்கு என்ன விலை என்று கேட்காமல் பெண்ணுக்கு என்ன செய்வீர்கள் என்று தான் முதல் கேள்வி இருக்கும். குறைந்தது ஒரு கோடி எதிர்பார்ப்பார்கள்.

இப்படி கோடி கணக்கில் பணம் சேர்த்து வைக்காத அப்பாவி பெண்கள் ஏதாவது கூலி வேலை செய்பவனோடு குடும்பம் நடத்த வேண்டியிருக்கும். பல குடும்பங்களில் பெண் பள்ளியில் ஆசிரியையாக இருப்பாள் ஆண் கூலி வேலைக்கு போவான். வரதட்சணை மட்டும் பத்து முதல் இருபது லட்சம் கேட்பான்.

இன்னும் சில கிழ அப்பாக்கள் ஒரு கோடி இருந்தால் பேசுங்கள்...இரண்டு கோடி இருந்தால் பேசுங்கள் என்பார். நீங்கள் அவரிடம் சம்மந்தம் பேச போனால் அவர் கேட்கும் முதல் கேள்வியே இது தான். எப்படி இருக்கிறது பாருங்கள்.
ஆக இப்படி வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய சக்தி உள்ள பெண்கள் செய்து கொள்ளுங்கள். ஆனால் செய்துகொண்ட பின் ஒன்றை மட்டும் மனதில் நிலைநிறுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு கோடியோ இரண்டு கோடியோ அல்லது பல லட்சமோ கொடுத்து அந்த ஆண் மாட்டை விலைக்கு வாங்கியிருக்கிறீர்கள். மாட்டை வாங்கி கயிறு கட்டி இழுத்துக்கொண்டு வருவோம். ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் மாடு ஓனருக்கு கயிறு (தாலி) கட்டுகிறது. பரிதாபம்.


இப்படி வரதட்சணை கொடுத்து ஒரு வீட்டில் நீங்கள் வாழ போகிற போது அந்த வீட்டிலிருக்கும் மாமனார் மாமியார் மற்றும் உங்கள் கணவன் உங்களுக்கு அடிமை பிராணிகளாக இருக்க நீங்கள் எதிர்பார்ப்பதில் தவறேதும் இல்லை. வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் மாமனார் வீட்டில் கீழ்கண்டவற்றை எதிர்பார்க்கலாம்.

வரதட்சணை கொடுத்து வாங்கிய மாடு வீட்டு வேலை செய்யட்டும். எஜமானிக்கு சேவை செய்வது தானே அவனுக்கு அழகு. பின்னே ஒரு கோடிக்கு அவனை வாங்கிவிட்டு நாம் அவன் ஜெட்டியை துவைத்து போடுவது எவ்வகையில் ஞாயம். கணவனே கண் கண்ட தெய்வம் என்றா சொல்கிறாய் தாயே ஒரு கோடி இல்லையென்றால் உனக்கு கணவனே இல்லை.

உங்கள் மாமனார் உங்கள் உள்பாவாடையை துவைத்து போடட்டும். உங்களிடமிருந்து ஒரு கோடி இரண்டு கோடி என்று பேரம் பேசி தன் மகனை விற்றிருக்கிறார். புரோக்கர் வேலை பார்த்திருக்கிறார். உங்கள் கணவனின் சேவையில் ஏதேனும் குறைபாடு இருந்தால் உடனடியாக உங்கள் மாண்புமிகு மாமனாரை அணுகுங்கள்.

வரதட்சணை ஒழிப்பது கடினம் என்றாலும் இப்படி வரதட்சணை கொடுத்து மாட்டை வாங்கிவிட்டு அந்த வீட்டில் நீங்கள் போய் தொழுவத்தில் உட்கார்ந்துகொள்ளாதீர்கள் பெண்களே. ஆளவேண்டியது நீங்கள்.

32 comments:

balutanjore said...

dear vincy

arumai arumai

balasubramanyan vellore

Anonymous said...

Hello Vincy ,neenga Vincy illa Veen cee. Because First varathatcha katpathu mamanar illa madam ,ungala pola oru ponnutha ,athavathu mamiyar,atha first mind la vatchigkunga . . . . Always mens are respect Ladies. . . . " Pennuku Pennay ethiri ". . . . mamiyar kodumatha athikam,mamanar koduma illa madam. So First think well then write ok. . . .

VINCY said...

அதி புத்திசாலி அனானி அவர்களே ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்தாயிற்று. இப்போது அந்த பெண்ணை மதித்து காக்கவேண்டியது அந்த ஆணின் கடமை. பிறகு எப்படி மாமியார் கொடுமை செய்ய நேர்கிறது. பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்றே வைத்துக்கொள்வோம் அப்படி எதிரிகளால் பெண் தூஷிக்கப்படுகிற பொழுது அவளை திருமணம் செய்துகொண்ட ஆண் ஏன் விரல் சூப்பிக்கொண்டு ஒளிந்திருக்கிறான். மாமியாரிடமிருந்து தன் மனைவியை காக்க முடியாதவன் ஆணல்ல. பெண்ணும் அல்ல. திருநங்கையும் அல்ல.வேறு என்னவென்று நீங்களே யூகித்துகொள்ளுங்கள்.

venkat said...

hi vincy, neenga sollurathu ellam unmai than...ana dowry kanyakumari-la mattum than vangurangala enna????? ellam edathulayum ithu madhri nadakathu...neenka sollurathu madhri padicha pen onnum kooli velai seyyura paiyan-a kalyanam pannurathu illai...so konjam unmaiya eluthunga.

VINCY said...

வரதட்சணை எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் ஒரு சாபம் தான் ஆனால் சமீபத்தில் நடந்த சம்பவத்தின் மையமாகவும் எனக்கு தெரிந்த சில தகவல்களின் அடிப்படையிலும் இதை எழுதினேன். கன்னியாகுமாரியில் நன்கு படித்த ஆனால் வரதட்சணை கொடுக்க முடியாத ஒரு பெண்ணுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை தயாராக இருக்கிறான் என்பதை நீங்கள் போய் ஆய்வு செய்து பாருங்கள். நான் சொல்லியிருப்பது உண்மை என்று புரியும்.

VINCY said...

ஓ...நீங்களும் கன்னியகுமாரி ஆள் தானே ஆக ஆய்வு செய்ய வசதியாக இருக்கும்.

jaikar said...

ஒரு குறிபிட்ட பகுதியில் உள்ளவர்களையும் மற்றும் ஆண்களையும் இழிவு படுத்தவேண்டும் என்பதே முழு நோக்கமாக இருக்கிறது. பெண் ஆதிக்கம் என்று சொல்லிவிட்டு , middle class பெண்களை பற்றி இழிவாக தானே எழுதயுளிர்கள், ஒரு ஆண் வரதட்சனை வாங்கவில்லை என்றால் அவனுடைய ஜட்டியை துவைக்கலாம், மாமனாருடைய கோவணத்தை துவைக்கலாம், மமியருடைய பாவாடையை துவைக்கலாம். அப்படித்தானே உங்கள் கருத்து உள்ளது,

உங்களுடைய blog spot logo picturilkuda பெண் ஆதிக்கம் தெரியவில்லை (ஒரு பணக்கார பெண்ணின்) செக்ஸ் தானே ஓங்கி இருக்கிறது, உங்களால் இவர்களுக்கும் என்ன வழியை சொல்லிவிடமுடயும்!
"tips for high heels not for middle class"

Anonymous said...

வின்சி.. நறுக்கு நறுக்குன்னு குட்டுறீங்க ..நல்லாத்தான் இருக்கு..உங்களுக்கு ஒரு பட்டம் கொடுக்கணுமே..என்ன கொடுக்கலாம்? ரூம் போட்டு யோசிச்சிட்டு வரேன்..

அருண்
சென்னை
9382635000

ரவி said...

kalakkal.

one of my friend also facing the same problem. she is from nagarkoil.

என் நடை பாதையில்(ராம்) said...

உங்கள பத்தி இன்னைக்கு தான் college ல பேசுனோம். உங்க blog பேர் தெரியல. நல்ல வேல அதுக்குள்ளே நீங்களே ஒரு பதிவு எழுதீட்டீங்க....

அப்புறம் ஒரு விஷயம்..... ஓட்டப்பந்தயத்தில் முதல்ல வரணும்னா, நம்ம தான் வேகமா ஓடனும்; பக்கத்தில ஓடுரவனோட வேகத்த குறைக்கற முயற்சி பண்ணக்கூடாது;

பெண் அடிமைய ஒழிக்க ,ஆண்கள அடிமைப்படுத்த நினைக்காதீங்க; நீங்க முன்னேறுங்க.... simple. (மத்தபடி பெண் அடிமை,வரதட்சணை விசயத்துல என் சப்போர்ட் உங்களுக்கு தான்.)

என் நடை பாதையில்(ராம்) said...

உங்கள பத்தி இன்னைக்கு தான் college ல பேசுனோம். உங்க blog பேர் தெரியல. நல்ல வேல அதுக்குள்ளே நீங்களே ஒரு பதிவு எழுதீட்டீங்க....

அப்புறம் ஒரு விஷயம்..... ஓட்டப்பந்தயத்தில் முதல்ல வரணும்னா, நம்ம தான் வேகமா ஓடனும்; பக்கத்தில ஓடுரவனோட வேகத்த குறைக்கற முயற்சி பண்ணக்கூடாது;

பெண் அடிமைய ஒழிக்க ,ஆண்கள அடிமைப்படுத்த நினைக்காதீங்க; நீங்க முன்னேறுங்க.... simple. (மத்தபடி பெண் அடிமை,வரதட்சணை விசயத்துல என் சப்போர்ட் உங்களுக்கு தான்.)

Unknown said...
This comment has been removed by the author.
Anonymous said...

நீங்கள் கேள்விப்பட்ட ஒண்ணு ரெண்டு
சம்பவத்தை வைத்து நீங்கள் எழுதுகிற
கட்டுரைகள்,கண்ணை மூடிகிட்டு உலகமே இருண்டு போச்சுனு பூனை
கத்துகிற காட்டு கூச்சல் போல் இருக்கிறது.

நீங்கள் இன்னும் மனதளவில் வளரவே
இல்லை என நினைக்கிறேன்.

மற்ற நண்பர்கள் சொன்னதையே நான் வழிமொழிகிறேன். நீங்கள் நல்ல மன நல மருத்துவரை அணுகுங்கள்.

இது போல எழுதி மற்ற பெண்களின்
மனதையும் கெடுத்து, அவர்களின் வாழ்க்கையை வீணடித்து தெருவில் நிறுத்தி விடாதீர்கள்.

Anonymous said...

Its unfair to generalise a whole district based on few assholes.
Why the fuck should people marry in the first place is my question.
Do away with those marraiges.
You got no divorces and no dowry.

Swadesi said...

I think u r an advocate.. or u must be a big fan of all tamil serials...Nagercoil court la paesa vaendiyatha intha vanthu paesureenga..

VINCY said...

//ஒரு குறிபிட்ட பகுதியில் உள்ளவர்களையும் மற்றும் ஆண்களையும் இழிவு படுத்தவேண்டும் என்பதே முழு நோக்கமாக இருக்கிறது. //நிச்சயமாக அது அல்ல என் குறிக்கோள். கன்னியாகுமாரி மாவட்டத்தில் பெரும்பாலும் ஜாதகம் பார்ப்பதில்லை ஜாதி பார்ப்பார்கள் பொருத்தம் பார்ப்பதில்லை மதம் கூட சில நேரங்களில் தடையாய் இருப்பதில்லை. அப்படி இருக்கையில் பணம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. என்னுடைய அலுவலகத்தில் வேலை செய்யும் சில ஆண்களுக்கு முப்பது வயதை கடந்தும் திருமணம் நடக்கவில்லை. காரணம் அவர்கள் வீட்டில் பார்க்கும் பல வகை பொருத்தங்களுக்கு ஏற்ற மாப்பிள்ளை அமைய வில்லை என்பது தான். கன்னியாகுமாரி மாவட்டத்தில் அது இல்லை. எனவே பணம் தான் பிரதானம். ஏழை பெண்கள் சமுதாயத்திலோ ஆண் வர்க்கத்தின் மீதோ ஆதிக்கம் செலுத்த முடியாதென்று யார் சொன்னது ?

VINCY said...

//kalakkal.

one of my friend also facing the same problem. she is from nagarkoil.//

ரவி வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. நீங்கள் பார்த்தது ஒரு உதாரணம். நான் பல பார்த்திருக்கிறேன்.

VINCY said...

//
பெண் அடிமைய ஒழிக்க ,ஆண்கள அடிமைப்படுத்த நினைக்காதீங்க; நீங்க முன்னேறுங்க.... simple. (மத்தபடி பெண் அடிமை,வரதட்சணை விசயத்துல என் சப்போர்ட் உங்களுக்கு தான்.)//

நன்றியோ நன்றி. இங்கே ஓட்ட பந்தயம் நடக்கிறது. எங்களை ஆண்கள் கால்களில் விலங்கு போட்டுக்கொண்டு ஓட சொல்கிறார்கள். அப்படிப்பட்ட விலங்குகளை உடைக்க பெரியார் பாரதி முன் வந்தார்கள். இப்போது விலங்கு இல்லாமல் ஓட முடிகிறது ஆனால் தள்ளிவிடுகிறார்கள். ஓட முடியாதபடி ஆதிக்கவாத அடிமை தனத்தை ஏவுகிறார்கள். அந்த அடிமைத்தனத்தை ஒழிக்க பெண்கள் அதிக அளவில் முன்னேறுவதோடு மட்டுமன்றி சமத்துவ எண்ணமும் பெண்ணை போற்றி வணங்கும் எண்ணமும் இல்லாத ஆண்கள் மேல்பெண்கள் ஆதிக்கத்தை ஏவித்தான் அடக்க வேண்டியிருக்கும். அப்படி பெண் ஆதிக்கம் செலுத்துமளவுக்கு கல்வியிலும் செல்வத்திலும் செழித்திருக்கவேண்டும். அதர்கு ஓட்டம் தேவை. ஓடுவோம் பெண்களே வாருங்கள்.

VINCY said...

//How you can say its happening in Kanyakumari.Have you seen before this kind of incidents in kanyakumari.Dont write this belongs with Kanyakumari...//

உங்க ஊர பத்தி எழுதினா ரொம்ப கோபம் வருதோ? உங்க ஊருல இப்படி மனசாட்சியே இல்லம வரதட்சணை கேக்குறாங்களா இல்லையா. ஒன்று இரண்டு சம்பவத்தை வைத்து குறை சொல்லவேண்டாம் என்கிறீர்கள். மும்பை குண்டு வெடிப்பு கூட ஒரே ஒரு சம்பவம் தான் சும்ம விட்டுவிட முடியுமா?

VINCY said...

//I think u r an advocate.. or u must be a big fan of all tamil serials...Nagercoil court la paesa vaendiyatha intha vanthu paesureenga..//

Hello for your information I have not started writing the core ideology what I have in mind. I have just shown an outline and you people were not able to tolerate. So wait and watch.

Nagercoil courtla aamaya neenga ponnungala theru theruva alaya viduveenga naanga courtukum veetukum alanchittu irukkanum illa.

VINCY said...

//Its unfair to generalise a whole district based on few assholes.
Why the fuck should people marry in the first place is my question.
Do away with those marraiges.
You got no divorces and no dowry.//

See mumbai attack is also one such incident. Can we take it lightly. There are many such incidents or incidents which doesnt come to media light in kanyakumari.

Your view on doing away with marriages I am fully with you. I also dont believe in marriage but its always the wish and will of the couples.

Anonymous said...

Dont equate 26/11 with this one.I feel you can use a better language on your blog, so that your concerns reach everyone.I do beleive you are from a small town.Smoking and drinking does not equate to feminism.

In major cities females smoke n drink more than males.If you have to generalise,generalise india as a whole where atrocities against women take place day to day. Be against child marraiges,rape and others too.

Its just your frustration against men which is reflected here.I am sure you will look beyond it, and you will understand being a better human being is far superior than being a feminist.All the best and do continue your ramblings.

Anonymous said...

Let us know your core idealogy. Believe that will be interesting than this silly things, that happen in some remote areas.

who should take care of the children? how should a male child bought up and a female child bought up????

How are you going to establish equality between Federer and Venus williams? are they going to have same judgement??

should we have same toilets for men and women? what should be done to rapists? Waiting to hear your ideas.

Anonymous said...

//அதி புத்திசாலி அனானி அவர்களே ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்தாயிற்று. இப்போது அந்த பெண்ணை மதித்து காக்கவேண்டியது அந்த ஆணின் கடமை. பிறகு எப்படி மாமியார் கொடுமை செய்ய நேர்கிறது. பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்றே வைத்துக்கொள்வோம் அப்படி எதிரிகளால் பெண் தூஷிக்கப்படுகிற பொழுது அவளை திருமணம் செய்துகொண்ட ஆண் ஏன் விரல் சூப்பிக்கொண்டு ஒளிந்திருக்கிறான். மாமியாரிடமிருந்து தன் மனைவியை காக்க முடியாதவன் ஆணல்ல. பெண்ணும் அல்ல. திருநங்கையும் அல்ல.வேறு என்னவென்று நீங்களே யூகித்துகொள்ளுங்கள்.//



Hello we are respect ladies always ...Mamiyarum marumagalum sanda podumpothu , husband wifeku support pannuna petha Ammava mathika theriyalanu solluringa, illa Ammauku support pannuna unna nambi vantha ponna purinchika theriyalanu solluringa . Nanga yaruku support panna . Kamatha katti Husband a Wifeum , Pasatha Katti ammaum veelaiyadra attathula nanga Umpire a iruthu irenduperugum pothuva tha irukamudiyum Vincy . "Marriage Life is Like travelling Boat,One stick is Mother and another one is Wife. But Husband need Both at a time ..... " . . . . . Try to understand men

B.அருண் said...

////ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்தாயிற்று. இப்போது அந்த பெண்ணை மதித்து காக்கவேண்டியது அந்த ஆணின் கடமை. பிறகு எப்படி மாமியார் கொடுமை செய்ய நேர்கிறது. பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்றே வைத்துக்கொள்வோம் அப்படி எதிரிகளால் பெண் தூஷிக்கப்படுகிற பொழுது அவளை திருமணம் செய்துகொண்ட ஆண் ஏன் விரல் சூப்பிக்கொண்டு ஒளிந்திருக்கிறான். ////

நீங்கள் சொல்வது சரிதான். ஒரு பக்கம் பத்து மாதம் சுமந்து பெற்ற
அம்மா என்ற பெண் தெய்வம். மறு பக்கம் தாலி கட்டி கூட்டி வந்த மனைவி என்ற பெண் தெய்வம்.

அம்மா சொல்லி தருவதை கேட்டு,
மனைவியை வீட்டை விட்டு வெளியே துரத்தலாமா ???? அல்லது
மனைவி சொல்லி தருவதை கேட்டு,
அம்மாவை முதியோர் இல்லத்திற்கு
துரத்தலாமா ????

இதற்கு ஒரு தீர்வை சொல்லுங்கள் பார்ப்போம்....

BIG DREAMER said...

Vaanga Sornaa akka. Romba kevalama pesuringa.onnu therinjukonga "potta kozhi koovi pozhudhu vidiyaadhu".Adhu mutta poda than layaki

Anonymous said...

தோழி வின்சி,
உங்கள் எண்ணங்களும் கட்டுரைகளும் எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்துதின்றது, எது நிஜம் எது போலி என்று நீங்கள் ஆண்களை துகில் உரிக்கும் போது எனக்குள்ளும் ஒரு வின்சி இருப்பதை கண்டு கொண்டேன், இதே போன்று ஆங்கிலத்தில் அல்லது வேறு மொழிகளில் blogger or website உண்டா ? தெரியப்படுத்தவும்

அன்புடன் தோழி லாவண்யா

Anonymous said...

//////////////////////////////////
நீங்கள் கேள்விப்பட்ட ஒண்ணு ரெண்டு
சம்பவத்தை வைத்து நீங்கள் எழுதுகிற
கட்டுரைகள்,கண்ணை மூடிகிட்டு உலகமே இருண்டு போச்சுனு பூனை
கத்துகிற காட்டு கூச்சல் போல் இருக்கிறது.

நீங்கள் இன்னும் மனதளவில் வளரவே
இல்லை என நினைக்கிறேன்.

மற்ற நண்பர்கள் சொன்னதையே நான் வழிமொழிகிறேன். நீங்கள் நல்ல மன நல மருத்துவரை அணுகுங்கள்.

இது போல எழுதி மற்ற பெண்களின்
மனதையும் கெடுத்து, அவர்களின் வாழ்க்கையை வீணடித்து தெருவில் நிறுத்தி விடாதீர்கள்.
///////////////////////////////////

நான் சொன்னது சரிதான் என்பதை போலவே லாவண்யா என்ற ஒரு தோழியின் பதிவு அமைந்துள்ளது.

எந்த ஒரு விஷயத்தையும் மிகைப்படுத்தி சொல்லாமல், உண்மையை மட்டும் எழுதுங்கள். எல்லா விஷயங்களிலும் ஆண்களை மட்டும் குறை கூறாமல், பெண்கள் பக்கம் உள்ள தவறுகளையும் சுட்டிக்காட்டினால் தான் உண்மையான நிலை வெளிப்படும். பெண்கள் பக்கம் நின்று பிரச்சனையை பேசுவதை விட்டு விட்டு, நடுநிலையோடு பிரச்சனையை அலசினால் எந்த பாதிப்பும் இருக்காது. நீங்கள் இது போல் எழுதினால், பாதிப்பு பெண்களுக்கு தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் தனிப்பட்ட பாதிப்புக்கு வடிகாலாக இது போல் எழுதி கொண்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

மீண்டும் சொல்கிறேன், இது போல எழுதி மற்ற பெண்களின்
மனதையும் கெடுத்து, அவர்களின் வாழ்க்கையை வீணடித்து தெருவில் நிறுத்தி விடாதீர்கள்.

கிரி said...

//நான் சொன்னது சரிதான் என்பதை போலவே லாவண்யா என்ற ஒரு தோழியின் பதிவு அமைந்துள்ளது

மீண்டும் சொல்கிறேன், இது போல எழுதி மற்ற பெண்களின்
மனதையும் கெடுத்து,//

ம்ம்ம் வாய்ப்பு உள்ளது... யோசிக்கலாம்.

உங்கள் பெண்கள் மீதான அக்கறை, அனுசரையான எண்ணம், அடிமை தனம் குறித்த எண்ணங்கள் நல்ல விசயமாக இருந்தாலும் ...அதுவே அவர்களை பாதித்து விடப்போகிறது.

யாரும் யார் எழுதுவதையும் தடுக்க முடியாது..கட்டற்ற சுதந்திரம் உண்டு..


உங்கள் தளம் உங்கள் எண்ணம்..தடை போட யார்? இருந்தாலும் பெண்களே இதனால் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்..

கூற வந்ததை ஆணாதிக்க சிந்தனையாக நினைத்து தவறாக புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

Suresh Ram said...

http://tamil498a.blogspot.com/2009/10/blog-post_5255.html
தேவை ஒரு கள்ளக்காதல் பாதுகாப்பு இயக்கம்!

keran said...

Good

Divya said...

ஏன் ஆண்கள் எல்லாம் ஒரு சில நூற்றாண்டுகள் எங்களின் அடிமையாக வாழ்ந்து பாருங்களேன். பிறகு தெரியும் அடிமை வாழ்வு என்றால் என்னவென்று.