Friday, 2 October 2015

லெக்கின்ஸ் அணிவது ஆபாசமா?

இந்த லெக்கின்ஸ் விவகாரம் பற்றி கேள்விப்பட்டேன். தினமும் 10 பேராவது மெயிலிலும் கமென்ட்ஸிலும் ஏதாவது எழுதுங்கள் என்று கேட்கிறார்கள். எழுத நேரமில்லை. லெக்கின்ஸ் அணிவதை ஆபாசமென்று ஏதோ பத்திரிகை புகைபடம் எடுத்து எழுதியதற்கு இங்கிருக்கும் பெண்கள் கொதித்து ஆபாசம் என்பது பார்க்கும் கண்களில் தான் இருக்கிறது பாயாசம் என்பது குடிக்கும் கிண்ணத்தில் தான் இருக்கிறது என்று வாதாடி போராடிக்கொண்டிருந்தார்கள்.

இதை பார்க்கிற போது பெண்கள் இன்னும் கோழைகளாகவே இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது..

" டேய் லெக்கின்ஸ் ஆபாசமா தெரியுதாடா....கண்ணு கூசுதா.....பார்த்தா கிளுகிளுப்பா இருக்க....த்தா அத தாண்டா நாங்க இனி மேல் இன்னும் அதிகமா போடப்போறோமுன்னு" எதிர்த்து சொல்ற தில் இன்னும் பெண்களுக்கு வரவில்லை என்றே தோன்றுகிறது.

 ஆபாசம் என்றால் என்ன? நான் சாலையில் காரில் செல்கிற போது இரவு நேரத்தில் கவனிக்கிறேன். சுவற்றின் ஓரம் ஆண்கள் எல்லாம் வரிசையாக குஞ்சை பிடித்துக்கொண்டு பார்ப்பவருக்கு குமட்டும் அளவிற்கு ஒன்றுக்கு அடித்துக்கொண்டிருக்கிறார்கள். கேவலமா இல்லை? அடுத்து ரோட்டில் ஒருவன் ஒரு லுங்கியை அரைகுறையாய் கட்டிக்கொண்டு வாயில் ஒரு பிரஷ் வைத்துக்கொண்டு எச்சிலை குமட்டிக்கொண்டு என் காரை நில் என்று சைகை காட்டிவிட்டு ஒரு காட்டு பன்றியை போல் ஹாலுக்கும் பெட்ரூமுக்கும் நடந்து போவது போல் சாலையை கடக்கிறான். 

அடுத்து ஆண்கள் எல்லோரும் டாஸ்மாக்கில் குடித்துக்கொண்டு ஜெட்டி தெரிய தெருவில் விழுந்து கிடக்கிறார்கள். அதை பார்க்கிற போது உள்ளூற ஒரு சந்தோஷமும் பொங்குகிறது. ஏன்டா எத்தனை காலம் தண்ணி போட்டா ஏதோ பெரிய ரௌடி மாதிரி பெண்களை வீட்டுக்கு வந்து அசிங்கம் அசிங்கமா பேசி அடித்து கொடுமை படுத்தினீர்கள். அந்த பாவம் தாண்டா இப்போ நீங்க எல்லாம் குடிச்சிட்டு மல்லாக்க படுக்க வச்சிருக்கு. என்ன கேட்டால் டாஸ்மாக்கில் ஒரே ரக சரக்கு தான் விற்க வேண்டும். குடித்த அடுத்த பத்து நிமிடத்தில் மட்டை ஆகிவிடவேண்டும். தெருவிலே விழுந்து கிடப்பவர்களை கார்ப்பரேஷன் லாரி ஒன்றை கொண்டு வந்து அள்ளி கொண்டு போய் ஊருக்கு வெளியே கொட்டிவிடவேண்டும். பிறகு போதை தெளிந்து நிஜாரை ஏற்றி போட்டுக்கொண்டு அதுகளாகவே வீடு போய் சேரவேண்டும். யோசித்து பாருங்கள் ஒரு காலத்தில் ஆண் குடித்துவிட்டு வந்திருக்கிறான் என்றாலே அவனை ஏதோ வீராதி வீரன் சூராதி சூரன் என்கிற ரேஞ்சுக்கு பெண்கள் மனைவிமார்கள் குழந்தைகள் எல்லாம் பயந்து ஒதுங்கி போயிருக்கிறோம். 

இந்த நாய்கள் அந்த சாக்கடை போன்ற டாஸ்மாக்கில் குடித்துவிட்டு ரோட்டில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்ன பேசுகிறார்கள் "ஓத்தா.....அவன....லவடை கபால்.....தேவிடியா பையன்....அவன சாவடிக்கணும்....என் கிட்டையே....ஓத்தா.....அவன....லவடை கபால்.....தேவிடியா பையன்....அவன சாவடிக்கணும்....என் கிட்டையே...மறுபடியும் அதே தான் "ஓத்தா"...இப்படி உரத்த குரலில் தொடர்ந்து ஏதோ மந்திரம் போல் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். பிறகு பான்பாராக்கை போட்டு கொப்பளித்து புளிச் புளிச் என்று துப்பிவிட்டு பிறகு ஒரு "ஓத்தா" வை உதிர்ந்துவிட்டு வண்டியில் ஏறி போய் போலீசில் மாட்டிக்கொள்கிற லூசுகள். இது எல்லாம் ஆபாசம் இல்லையா? எட்டாவது படிக்கும் மாணவன் மூன்று வார்த்தைக்க்கு ஒரு முறை ஓத்தா என்ற வார்த்தையை வெட்ட வெளிச்சமாக பேசுகிறான். கூசவில்லை அவனுக்கு. கேட்டால் அது தான்  ஆம்பிளை தனம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். கெட்ட வார்த்தையை சேர்த்து பேசுவதை ஆம்பிளை தனம் என்று நினைத்துக்கொண்டிருப்பது வடிவேலுவின் கைப்புள்ளை ஜோக் தான் நினைவிற்கு வருகிறது. எனவே ஆண் குஞ்சுகளே

உங்களது தாளாத சாக்கடை ரவுசுகளை தெருவில் அவிழ்த்துவிடுவது ஆபாசமல்ல....நாராசம். எனவே முதலில் உங்கள் நாராசத்தை நிறுத்திக்கொள்ளுங்கள்.

ஒரு சமுதாயத்தில் எப்படி பண்பட்ட நாகரீகத்தோடு நடந்துகொள்ளவேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள். கெட்ட வார்த்தை பேசுவது சத்தமாக பேசுவது சுருக் சுருக் என்று பைக்கில் வேகமாக சென்று போஸ்ட்டில் முட்டி உயிர் விடுவது பெண்களை கேலி பேசுவது லெக்கின்ஸ் போடுறது ஆபாசமுன்னு கண்டு புடிக்கிறது இதை எல்லாம் விட்டுட்டு போய் புள்ள குட்டிகள படிக்க வையுங்க.

ஐன்ஸ்டீன்....எடிசன் இவங்க எல்லாம் விஞ்ஞான கண்டு புடிப்பா புடிச்சாங்க நம்ம ஆளுங்க நாம போடுற ஜெட்டி பிரா நைட்டி லெக்கின்ஸ் இதுகளையே கொட்ட கொட்ட வெறிச்சு பாத்துட்டு அதுல எங்க ஆபாசம் இருக்கு எங்க பாயாசம் இருக்குன்னு நாக்க தொங்க போட்டுகிட்டு அலையுறானுங்க. ஏன்டா லெக்கின்ஸ் ஆபாசமுன்னு கண்டுபுடிச்ச நீ......டுத்தவ புடவை சரியுறத பாத்து ஆபாசமுன்னு சொல்ற நீ இந்தியா ரூபாயின் மதிப்பு ஏன் சரிஞ்சிட்டு இருக்குன்னு ஒரு ஆராய்ச்சி பண்ணி கண்டுபுடி. எப்போ பாரு ரோட்டுல குடிச்சிட்டு துப்பிகிட்டு ஒன்னுக்கு போயிட்டு கெட்ட வார்த்தை பேசிகிட்டு பொண்ணுங்கள கிண்டல் பண்ணிகிட்டு து...போஙகடா லூசுங்களா.....

 மேட்டர் என்னன்னா உண்மையாவே லெக்கின்ஸ் சவுகரியமான உடை மட்டுமல்ல கொஞ்சம் செக்ஸியான உடையும் கூட. நம்ம அம்பளைங்க எல்லாம் தொப்பையும் கொப்பையுமா திரியுறப்போ நாம லெக்கின்ஸ் மாதிரி செக்ஸியா திரியுறது கொஞ்சம் உறுத்தத்தான் செய்யும். அப்படி உறுத்துறது தான் நமக்கு தேவை. பெண்களே இன்னும் அதிகமாக லெக்கின்ஸ் அணியவும். உடலை அழகாக பேணவும். அழகும் அறிவும் தான் நமது ஆயுதங்கள். அழகையும் அறிவையும் மட்டுமே பேணுங்கள்.

வீட்டு வேலை செய்வது, சமைப்பது, துணி துவைப்பது, குனிந்து மணி கணக்காக கோலம் போடுவது இது போன்ற அல்பை விஷயங்களை விட்டொழியுங்கள். அந்த நேரத்தில் நல்ல புத்தகங்களை படித்து அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் மறுபடியும் சொல்கிறேன் அறிவும் அழகும் தான் நமது ஆயுதங்கள். உடலை அழகாக கம்பீரமாக செக்ஸியாக வைத்துக்கொள்ளுங்கள். இன்னும் அதிகமாக லெக்கின்ஸ் அணியுங்கள். வாருங்கள் ஆண்களை கடுப்பேற்றுவோம். வாழ்த்துக்கள்

 vincyontop@gmail.com

11 comments:

ram said...

Well said madam

trichymlae said...

Wearing any type of the dress is the right of the woman. In developed countries like US and UK ladies are wearing the dress as they like. no restriction.

Arun said...

Looks like you have some deep rooted hatred towards men. Can you tell 5 good things about men?

adimainai_forvincygoddesses said...

To be frank....most men admire the attitude of self confident girls...but it really making us too inferior before them...hence to avoid it we are making such a nonsense.

adimainai_forvincygoddesses said...

To be frank....most men admire the attitude of self confident girls...but it really making us too inferior before them...hence to avoid it we are making such a nonsense.

Anonymous said...

நீங்கள் பல தவறான ஆண்களை கண்டு, எல்லா ஆண்களையும் தவறாக பேசி உள்ளீர்கள். பரவாயில்லை, பொதுவாக அனேக பெண்கள் செய்யும் தவறு தான். அபாசமாக உடை அனியும் பெங்களை விட அடக்கமாக உடை அனியும் பெண்ணே, ஆழகில் சிறந்தவள். உடை அணியும், விதம், உங்கள் விருப்பம் தான், ஆனால் ஆண்களை சூடேத்தும் உடை அணிவதால், ஒரு நல்ல ஆண் கூட , பெண்ணை காம பொருள் போன்று தான் பார்ப்பான். இந்த தவறை செய்வதால் சமூக சீரழிவை, நீங்கள் ஊக்குவிக்குரீர்கள்.

Anonymous said...

நீங்கள் பல தவறான ஆண்களை கண்டு, எல்லா ஆண்களையும் தவறாக பேசி உள்ளீர்கள். பரவாயில்லை, பொதுவாக அனேக பெண்கள் செய்யும் தவறு தான். அபாசமாக உடை அனியும் பெங்களை விட அடக்கமாக உடை அனியும் பெண்ணே, ஆழகில் சிறந்தவள். உடை அணியும், விதம், உங்கள் விருப்பம் தான், ஆனால் ஆண்களை சூடேத்தும் உடை அணிவதால், ஒரு நல்ல ஆண் கூட , பெண்ணை காம பொருள் போன்று தான் பார்ப்பான். இந்த தவறை செய்வதால் சமூக சீரழிவை, நீங்கள் ஊக்குவிக்குரீர்கள்.

அரவிந்த் said...

நீங்கள் பல தவறான ஆண்களை கண்டு, எல்லா ஆண்களையும் தவறாக பேசி உள்ளீர்கள். பரவாயில்லை, பொதுவாக அனேக பெண்கள் செய்யும் தவறு தான். அபாசமாக உடை அனியும் பெங்களை விட அடக்கமாக உடை அனியும் பெண்ணே, ஆழகில் சிறந்தவள். உடை அணியும், விதம், உங்கள் விருப்பம் தான், ஆனால் ஆண்களை சூடேத்தும் உடை அணிவதால், ஒரு நல்ல ஆண் கூட , பெண்ணை காம பொருள் போன்று தான் பார்ப்பான். இந்த தவறை செய்வதால் சமூக சீரழிவை, நீங்கள் ஊக்குவிக்குரீர்கள்.

immanuel inbarathinam said...

Please check my mail important

திவ்யா said...

ஏன் ஆண்கள் எல்லோரும் வேட்டி கட்டி அடக்கமாக வாருங்களேன்.

aambala said...

Nenga sambarikarenu sollunga nanga Veetu velai seirom