Monday, 3 January 2011

யோனி ஆராய்ச்சி (திறக்காத மொட்டு)
சமீபத்தில் ஒருவர் என்னோடு சாட் செய்தார். தன்னை பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டார். என் பிளாகை தொடர்ந்து படிப்பதாகவும் என்னுடைய கருத்துக்கள் பிடித்திருப்பதாகவும் சொன்னார். பிறகு என்னிடம் திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டார். நான் இல்லை என்றேன். உடனே அவரது பதில் என்ன தெரியுமா?

"வாவ்...திருமணம் ஆகவில்லையா? அப்போது நீங்கள் புதிய மொட்டு அப்படித்தானே? மன்னிக்கவும் திறக்காத மொட்டு. என்ன சரி தானே திறக்காத மொட்டு சரிதானே?"
என்று தொடர்ந்து பத்து முறை கேட்டு பதில் அனுப்பிக்கொண்டிருந்தார்.

இது தான் ஆண்களின் கம்பீரம். அதாவது இரண்டு கன்னத்தில் இரண்டு கையை முட்டு கொடுத்து நிறுத்தியபடி மண்டி போட்டு எப்போதும் நமது யோனியை ஆராய்வது தான் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை.

திறந்த மொட்டா? திறக்காத மொட்டா? அங்கே யார் யார் வந்து போகிறார்கள். அவர்கள் துப்பிவிட்டு போவது என்ன? அதன் வாசம் என்ன? சுவை என்ன? ஏன் அவர்களுக்கு எல்லாம் மொட்டு திறக்கிறது? இப்படி மண்டி போட்டு பெண்களின் மறைவு பிரதேசத்தை ஆராய்வது தான் ஆண்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை. அந்த மறைவு பிரதேசத்தை ஆராய்ந்து டாக்டரேட் பட்டம் பெற்றதன் விளைவு தான் கற்பு என்ற கர்மாந்திரம்.

அதாவது பெண்கள் மட்டும் தங்கள் உறுப்பை யாருக்கும் காட்டாமல் ஒருவனுககே அதை உரித்தாக்க வேண்டும் என்ற பாசிஸ சிந்தனை குறைந்தது பத்து தலைமுறை ஆண்கள் வேறு வேலை வட்டி இல்லாமல் பொழுது புலர்ந்து இரவு முழுதும் யோனியின் அருகே மண்டி போட்டு வேறு வேலை வட்டி இல்லாமல் யோசித்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பது இந்த திருமணமாகாது மொட்டின் கருத்து.

இப்படிப்பட்ட வம்சத்தில் வந்த ஆண் வர்க்கத்தை தான் நாம் வரதட்சணை கொடுத்து வாங்கி வைத்து குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறோம். வரிசையாக ஒரு ஆயிரம் யோனியை அடுக்கி வைத்தால் நாள் முழுத ஆராய்ச்சி செய்திகொண்டிருப்பேனே என்று உற்சாகமாக துள்ளி எழும் ஆண்களிடமிருந்து தான் இது போன்ற வக்கிரங்கள் வெளிப்படும். இவர்கள் கக்கூஸை ஆராய்வது போல் யோனியை ஆராய்ச்சி செய்துவிட்டு ஏதோ தாங்கள் தான் இந்த உலகில் மேன்மையாக படைக்கப்பட்டவர்கள் போல் பாவ்லா காட்டவேண்டும் அல்லவா? அதற்காகத்தான் வைத்திருக்கிறார்கள் தாலி மெட்டி கற்பு கன்ட்ராவி வாழாவெட்டி.

அதாவது அவர்களுக்கு ஆட்டை பலியிடுவது போதாது. நாமாகவே போய் என்னை பலியிடுங்கள் என்னை பலியிடுங்கள் எனக்கு வாழ்க்கை கொடுங்கள் என்னை வாழ வையுங்கள் என்று கெஞ்சவேண்டும். அதற்குத்தான் இந்த அடக்குமுறைகளும் சம்பிரதாயங்களும் பெண்கள் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது.

ஒரு பெண் என்ன படித்திருக்கிறாள். சமுதாயத்திற்கு அவள் என்ன தொண்டாற்றுகிறாள். அவள் என்ன வேலை செய்கிராள் இதை எல்லாம் விட ஆணுக்கு மிகவும் முக்கியமான ஒன்று அவள் திறந்த மொட்ட திறக்காத மொட்ட என்ற தகவல் மட்டுமே.

உதாரணமாக கார் டிரைவருக்கு தன் எஜமானியின் யோனி பற்றி கவலை. அவனுக்கு தன்னை விட படிப்பிலும் பணத்திலும் திறமையிலும் ஒரு பெண் சாதித்திருப்பது பற்றி வியப்பில்லை. அதை மதிக்கவோ ஆராதிக்கவோ அதன் பொருட்டு தன்னை உயர்த்திக்கொள்ளவோ அவனுக்கு எண்ணமில்லை . அவனுடைய கவலை எல்லாம் தன் எஜமானியின் யோனி எப்படிபட்டது என்பதே. இப்படிப்பட்ட ஆண்களுக்கும் தெருவில் மாடுகள் போட்டு வைக்கும் சாணத்துக்கும் எந்த வேருபாடும் இல்லை.

திருமணம் ஆனால் திறந்த மொட்டு இல்லையென்றால் திறக்காத மொட்டு என்று உங்களுக்கு நீங்களே ஒரு உன்னதமான முடிவுக்கு வந்து மகிழ்ந்துகொள்கிறீர்கள்.

"உங்கள் தாயும் திருமணம் ஆனவள் தான். அப்போது அவளை திறந்த மொட்டு என்று அழைப்பீர்களா? "
இப்படி நான் கேட்கப்போவதில்லை. இது போன்ற கேள்விகளை தமிழின் வடிகட்டிய ஆணாதிக்க இயக்குனர்கள் தான் கேட்க முடியும். அவர்கள் தான் அப்பாவி பெண்களை வைத்து இப்படியெல்லாம் கேட்கச்சொல்வார்கள்
"நீ அக்கா தங்கச்சியோட பொறக்கலையா? நான் உன் அம்ம மாதிரிடா எட்சட்ரா எட்சட்ரா..."
அக்கா தங்கச்சியோட பொறந்தவன் மட்டும் யோக்கியமா எல்லா பெண்களை அக்க தங்கச்சி போல் நினைக்கவேண்டும் என்று நான் அறிவுறுத்தவில்லை மாறாக அக்க தங்கச்சியோடு பொறந்தவன் பிற பெண்களை போல தன் அக்க தங்கச்சி மனைவி தாய் போன்ற தன் பெண் உறவுகளுக்கும் உரிய மரியாதையும் சுதந்திரமும் கொடுக்கட்டுமே. சன் மியூசிக்கில் வரும் 18 வயது பெண்ணை மேடம் என்று அழைக்கும் நீ உன் மனைவியை அழைக்க மட்டும் கூசுவது ஏன். அவளை மட்டும் வாடீ...போடீ என்று உன் ஆண் திமிரை கட்டி அழைத்து மகிழ்வது ஏன்?

எது எப்படியோ ஆண் திமிர் பிடித்தவர்களுக்கு பெண்களை வெறும் யோனியை சுமக்கும் பொம்மைகளாக பார்க்க மட்டுமே அறிவு வளம் பெற்றிருக்கிறது என்பதை அறிகிறபோது கேலி சிரிப்பு தான் வருகிறது.
வாழ்க ஆண்களின் யோனி ஆராய்ச்சி.

12 comments:

வால்பையன் said...

கல்யாணம் ஆகலைன்னு தாண்டா சொன்னேன், திறக்கலைன்னு எப்படா சொன்னேன்னு சொல்ல வேண்டியது தானே!


இந்தியாவில் இருக்கும் பாலியல் வறட்சி, உடல்ரீதியான ஈர்ப்புக்கு காரணமாக இருக்கலாம், மாறும் என்று நம்புவோம்!

யோனி ஆராய்ச்சியாளன். said...

இந்த பதிவை எழுதி வெளியிட்ட பின் மட்டற்ற மகிழ்ச்சியை அடைந்திருப்பீர்கள் என 2௦௦% நம்புகிறேன். இல்லை என்று சொல்லி விடாதிர்கள். பெண்ணடிமை அல்லது ஆணாதிக்கம் இதை ஒழிக்க விரும்பினால் வெளியில் சென்று போராடுங்கள் என்று சொல்ல மாட்டேன். கலாச்சார மாற்றம் ஒன்றே இவைகளை ஓரளவுக்கு மாற்றும். நீங்கள் எந்த நாட்டில் இவை அனைத்தும் நல்லதாக 100% நடக்கிறது என்று நினைக்கிறீர்கள்? எந்த நாட்டிலும் இல்லை என்று நீங்கள் சொன்னால், நாசா ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொண்டு அடுத்து அவர்கள் அனுப்பும் விண்கலத்தில் சென்று செவ்வாயை அடைந்து மகிழ்ச்சியாக சுய இன்பம் செய்து வாழுங்கள்.

யோனி ஆராய்ச்சியாளன். said...

முடிந்தால் கலாச்சார மாற்றம் ஏற்படுத்துங்கள். அல்லது விரல்கள் தேய தேய ப்லாகுங்கள். அல்லது அதுவே மாறிவிடும் இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் சில நூற்றாண்டுகளில். பெண்ணடிமை பதிவை தவிர உங்கள் வலைப்பூவில் எழுத ஒன்றுமே இல்லையா? வாரமலரில் வெளியிடுவது போல மொக்கையாக ஒரு கவிதை எழுதுங்கள்.அல்லது எல்லோரும் யூகிக்கும் படியான ஒரு சிறுகதையை எழுதுங்கள். அல்லது ஏதாவது ஒரு மொக்கை படத்தை பார்த்து விமர்சனம் எழுதி கிழியுங்கள். உங்களுக்கு ஆயிரம் வருடம் வாழ்நாளை கொடுக்க ஆண்டவனை வேண்டிகொள்கிறேன். பெண்களுக்காக உங்கள் குரலை கணீரென்று கொடுத்து கொண்டே இருங்கள். துப்பட்டாவை தூக்கி எறியுங்கள் என்று சொன்னதை முழுமனதோடு ஆமோதிக்கிறேன். ஹீ ஹீ. பெண்களின் விடுதலை உங்கள் உடைகளுக்கு கொடுக்கும் விடுதலை மூலமாகவே முடிவுக்கு வரும். அதை விட்டுவிட்டு ஆண்களை புடவை கட்ட சொல்வது. அல்ப சிந்தனை. சிறுபிள்ளை போல யோசிக்கிறீர்கள். நீங்கள் பேசுவது கார்ட்டூன் காமெடி போல உள்ளது. காமெடி but நோ லாஜிக். நீங்கள் சொல்லுவது எல்லாம் உங்களை போன்ற ஒரு பெண்ணிடமோ அல்லது என்னிடமோ சொன்னால் கொஞ்ச நேரம் வாய்விட்டு சிரிக்கலாம்.

யோனி ஆராய்ச்சியாளன். said...

நீங்கள் சொன்னது கூட பல்லாயிரம் ஆண்டு கழித்து நடக்கலாம். ஆனால் உடனடியாக ஆண்கள் பெண்களுக்கு அடிமையாக மாறிவிட மாட்டார்கள். ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்பட்ட பின்னே சிறிது/பல காலம் கழித்து நீங்கள் சொன்னது நடக்கும். ஒரு பக்கம் அதிக எடை உள்ள தராசில், அடுத்த பக்கம் இன்னும் அதிகமான எடையை வைக்கும் போது, சமநிலைக்கு வந்த பின்னே சரியும். அதனால் சமநிலை தான் அடுத்த நிலை. சம நிலைக்கு வர முயற்சியுங்கள். அப்புறம் அடிமையாக்க யோசிக்கலாம். கொஞ்சமேனும் புரிந்ததா?
எந்த ஒரு புரட்சியையும் உங்கள் வீட்டில் இருந்து ஆரம்பியுங்கள் என்று ஞானிகள் சொல்லி இருக்கிறார்கள். முதலில் உங்கள் தந்தைக்கு புடவை கட்டுங்கள். அப்புறம் உங்கள் அண்ணன் தம்பிகளுக்கு. கடைசியாய் கணவரிடம் வாருங்கள். கண்டிப்பாக ஏற்று கொள்வார்கள்.

இருந்தாலும் உங்கள் வலைப்பூ படிக்க ஆர்வமாக தான் உள்ளது. நீங்கள் சொல்லும் சிந்தனை. அதற்கு மற்ற ஆண் மக்கள் மற்றும் பெண்கள் தரும் ஆதரவு. இன்னும் சிலபேர் எதிர்த்து சொல்லும் வசை மொழிகள். ஆகா. படிக்க படிக்க ஆனந்தம். இனி நானும் உங்களை தொடர்கிறேன் ஆனானியாக. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Anonymous said...

அடுத்த பதிவு எப்போது?

Padmini said...

I fail to understand why do you always want to go to extremes. If there are men who are only interested in yonis, there are women who are nymphs. They are outliers in any population. We should look at the normal population and not the outliers.

akkuraan tamil said...

அய்யோ! படிக்க சகிக்கவில்லை. வக்கிரப்புத்தியோடு சிந்திக்கும் நீங்கள் எழுத லாயக்கற்ற மனுசி. பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுக்க நாகரிகமாக சிந்திக்க தெரியவில்லையென்றால் எதற்க்காக வலைப்பக்கம்///!!!!?? தலைப்பூவோடு நிறுத்தி கொள்ளுங்கள்

Anonymous said...

dfsgdf

greatfemale fan said...

naan oru aanaaga irupadhaal solgiren, pen dhaan aanai vida uyarndhaval, idhu ella aangalukkum adimanadhil padhindha vishayam.... illai endru evanum marukka mudiyadhu karanam.. oru pennidam aan tholviyutraalo alladhu aanai pottu pen adikum kaatchiyai kaana nerndhalo.. aanmai chinnathil eluchi petru viduvom.. idhai yendha aanum maruka mudiyadhu.. so, oru pen aanai jeyipadhai sexuallaaga virumbum naam kandipaga pengaluku keel dhaan..

greatfemale fan said...

aangalum yen pengalum, aangal dhaan pennai vida udal balathil sirandhavargal enbadhal aandhaan pennaiyum ulagaiyum aala vendum endru kooruginranar... avargaluku en badhil.. yaanai manidhanai vida evlo balasaali pin yen adhu manidhanuku kattapattu velai seigiradhu... adhe poldhan udal balam adhigam kuraivu enbadhu veen vaadham.. pengal aatchi seidhaal kandipaga andha ulagam sandai sacharavu inri irukum.. nam naadu utpada pala naadugal raanuvathirku seiyum selavai kuraithale.. ulage naadugal anaithum subikshamaaga irukum

Anonymous said...

உனக்கு மொட்டு திறந்ததோ மூடியதோ தெரியவில்லை,அது தேவையும் இல்லை. ஆனால் அறிவு கண்கள் மட்டும் திறக்கவும் இல்லை, இனி திறக்குமா என்பதும் ஐயமே. அதனால் தான் உன் பார்வையில் மொத்த ஆண்களுமே யோனி வியாபாரிகளாக தெரிகிறார்கள். 'பெண்கள் மட்டும் தங்கள் உறுப்பை யாருக்கும் காட்டாமல் ஒருவனுககே அதை உரித்தாக்க வேண்டுமா?' என கேட்கிறாய். 'ஒருவனுக்கு-ஒருத்தி', 'ஒருத்திக்கு-ஒருவன்' என வாழ்வதில் உனக்கு விருப்பம் இல்லை எனில் உன் யோனியை வீதி வீதியாக போய் போகஸ் லைட் உதவியோடு வெளிச்சம் போட்டு கூட காட்டு. இதுவரை நீ பயணித்த கார்களின் ட்ரைவர்கள் எல்லோரும் உன் யோனி நினைப்பில் கிறங்கி இருந்தால், எப்போதோ உன் யோனியை போஸ்ட் மார்டம் கத்தி கூறு போட்டிருக்கும் என்பதை ஒருகணம் யோசித்தாயா?. உன் பாட்டியும், தாயும் சிந்திக்க, எதிர்க்க தயங்கிய பெண்ணடிமையை எதிர்த்து குரல் கொடுக்க உன்னை தயாராக்கியது உனக்கு கிடைத்த கல்வி. அதைகொண்டு, சமுகத்தில் இன்னும் தொக்கி இருக்கும் பெண்ணடிமை வாதிகளை சிந்திக்க செய், மாற செய். மாறாக, எவனோ ஒருவன் சாட்டிங்-ல் உன்னிடம் வழிந்ததால் ஆண் சமூகத்தை மொத்தமாக சாடும் உன் எழுத்தில் நிதானம் இல்லை. எழுத்தால் எவ்வளவு பெரிய மாற்றத்தையும் கொண்டு வர முடியும் என் அழுத்தமாக நம்பும் ரகம் நான். ஆனால், பெண்ணியம் பேசுவோர் வட்டத்தில் விரைவில் முதல் வரிசை ஆளாக கவனம் ஈர்க்க வேண்டுமென நீ படும் பிரயத்தனம் தான் உன் எழுத்தில் தெரிகிறது.

மனம் ஒன்றி வாழும் தம்பதிகளில் தங்கள் மனைவியின் உள்பாவாடை என்ன, குழந்தையின் ''பீ''துணி வரை துவைக்கும் கணவர்கள் உண்டு, உனக்கு தெரியுமா? சிந்தனையை விசாலப்படுத்து பாயசதுக்கும், பாய்சனுக்கும் வேறுபாடு உணரலாம். கீழ்தர சிந்தனையை கிறுக்கி எழுத்துகளின் மாண்பை எச்சில்படுத்தாதே. (இந்த பின்னுட்டத்தில் வரும் ஒருமை விழிப்பு உன்னுள் உதித்த நாராச அசிங்கங்களை கண்டு வெளிப்பட்ட கொதிப்பு)

நம்பள்கி said...

யோனி என்றால் அர்த்தம் என்ன?
இது தமிழ் வார்த்தையா? இல்லை என்றால் தமிழ்மணத்தில் வந்து தமிழில் எழுதும் போது தமிழில் எழுதுங்களேன்!

ஏன் எங்களுக்கு, [தமிழ் மட்டும் அறிந்த எங்களுக்கு] புரியும்படி யோனியை தமிழில் எழுதினால் என்ன? இப்படி எல்லோரும் இங்கு பின்னூட்டங்களில் திட்டுவதைப் பார்க்கும் போது அது ஒரு பீப் வாரத்தை தான் போல!

தமிழில் அதற்கு வார்த்தையே இல்லையா?