Tuesday, 6 July 2010

போலி பெண்ணியவாதிகளின் ஆபாச நடனம்.சமகாலத்தில் பெண் போலி பெண்ணியவாதிகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளாள்.

இந்த போலிகள் வலை உலகிலும் வலம் வருகின்றன.

ஒரு பெண் சைக்கிளில் போய்க்கொண்டிருக்கிறாள். வெட்டியாய் மூன்று ஆண்கள் தெருவில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு நாய் குறுக்கே வர பெண் தடுமாறி கீழே விழுகிறாள். அவ்வளவு தான். அந்த மூன்று பேரும் அவளை தூக்குவதென்ன....அந்த நாயை விரட்டுவதென்ன...சைக்கிளை நிமிர்த்தி வைப்பதென்ன....அவளது கீழே விழுந்த பொருட்களை குனிந்து எடுப்பதென்ன. இதை எல்லாம் கூட ஒரு மனிதாபிமானத்தின் அடிப்படையில் என்று சொல்லலாம். அந்த பெண் எழுந்து சைக்கிளை மிதித்தபடி தன் வேலையை பார்த்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். ஆனால் போலிகளோ அங்கேயே நின்றுகொண்டு அங்கு சுற்றி திரியும் நாய் மீது கல்லடிப்பதென்ன....நாய் ஒழிப்பு பிரசாரம் நடத்துவதென்ன...

கூடவே வீட்டு நாய்களையும் சேர்த்து வைத்து வசைபாடுவதென்ன...

"பெண்களுக்கு எதிராக தீங்கு செய்த நாய்கள் மண்டி போட்டு மன்னிப்பு கேட்கவேண்டும்" என்று போராடுவதென்ன...

போயா போ போய் வேலையை பாரு.

பெண்ணுக்கு தன்னை சீண்டும் மிருகத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் அதை முட்டி மோதி எப்படி ஜெயிக்க வேண்டும் சாக்கடையிலிருந்து எப்படி விலகி நடக்கவேண்டும் தொடர்ந்து தான் வாழ்க்கையை எப்படி வெற்றிகரமாய் இயக்கவேண்டும் என்பதெல்லாம் தெரிந்தே இருக்கிறது. பெண்ணியம் பேசுவதென் மூலம் கை தட்டோ அல்லது உள்ளுக்குள் கொப்பளிக்கும் ஒரு வித ஆனந்த களிப்புக்கோ சுய இன்பத்திற்கோ வேண்டுமானால் உங்களின் பெண்ணிய பேச்சுக்கள் பயன்படலாம். ஆனால் பெண்ணுக்கு இது எந்த வகையிலும் உபயோகப்படப்போவதில்லை. இன்றைய காலகட்டத்தில் அதை அவள் எதிர்பார்ப்பதும் இல்லை.

ஒரு வேளை ஐம்பது வருடத்திற்கு முன்பு இப்படி கூப்பாடு போட்டிருந்தால் உங்களுக்கு சிலை வைத்திருப்பார்கள். இன்றைய காலகட்டத்தில் பெண்ணியம் பேசுவதை பெண் விரும்புவதில்லை. காலம் காலமாய் நம்மை அடிமையாய் வைத்து ஆண்டு முடித்த ஆண்கள் பேசும் பெண்ணியத்தை அவள் அவ்வளவாக நம்பப்போவதில்லை. ஒரு வேளை பெண்ணிய செயல்பாடுகளை பார்த்து வேண்டுமானால் உங்களை பெண்ணிய வாதியாக ஏற்றுக்கொள்ளலாம். வெருமனே வலைபதிவில் குதறுவதை விட்டுவிட்டு முதலில் ஆண்களே உங்களுக்கு உபயோகமானதை செய்யுங்கள்.

வீணாக தூ...தூ...என துப்பி எச்சில் ஆறு ஓடவைப்பதோ....

மாஸ்டர்பேஷன் என்று சொல்லி விந்தாறு ஓடவைப்பதோ...

ஜாதி ஜமுக்காளம் என்று சொல்லி வீண் பிரிவினை தோற்றுவிப்பதோ

பெண்ணுக்கு எந்த வகையிலும் உதவியாக இருக்கப்போவதில்லை.

ஆண் வர்க்கம் முட்டாள்களின் மந்தை என்பதை நாங்கள் எப்போதோ புரிந்துகொண்டுவிட்டோம். உங்களை நீங்களே மீண்டும் மீண்டும் முட்டாளாக்கி காட்டவெண்டியதில்லை.

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்க்க நாங்கள் துணிந்துவிட்டோம். உதவிக்கு அழைத்தால் மட்டும் விருப்பமுள்ளவர்கள் வரலாம். அதை விட்டுவிட்டு வீணாக வாண்டடா வந்து எங்கள் கால்களை வருடியபடி நிற்கவேண்டாம் என்று பெரும் சிரிப்புடன் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

துணிந்து போராட திராணி இல்லாமலா இன்று பெண்கள் ஆண்களே வியந்து பார்க்கும் உயரத்திற்கு நகர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

என்வே பதிவுலக போலி பெண்ணியவாதிகளே உங்கள் காபரே நடனத்தை நிறுத்திவிட்டு மனைவிகளுக்கு காய் கறி வாங்கி கொடுங்கள் துணி துவைத்து போடுங்கள் சமைத்து பாருங்கள் முடிந்தால் அவளின் கை கால்களை பிடித்து விடுங்கள். அதன் மூலம் உங்கள் மனைவியருகாவது உபயோகமாய் இருங்கள்.

வெறுமனே இங்கு வந்து துப்பி தீர்க்காதீர்கள். உங்களின் துப்பு கலாசாரம் வீதிகளை அசிங்கப்படுத்துவது போல் வலைத்தளங்களையும் நாறடிக்கிறது.

DISC: பெண்ணியவாதிகள் யாராவது இருந்தால் இதை தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டு போடவும்.Just for fun.

பெண்: சார் நீங்க பெண்ணியவாதி தானே?
ஆண்கள் :( கோரஸாக) ஆமாங்க மேடம்.
பெண் : டென்னிஸ் விளையாடிகிட்டு இருந்தேன் அந்த சந்துல பால் விழுந்திடிச்சு கொஞ்சம் எடுத்து கொடுங்களேன்.
ஆண்கள்: நீங்க விளையாடுவீங்க நீங்க பந்து பொறுக்கி போடணுமா? (ஆணாதிக்கம்)
பெண்: ஆக்சுவலா நானும் என் பாய் பிரண்டும் தான் விளையாடிட்டு இருந்தோம். பந்த அடிச்சது அவன் தான்.
ஆண்கள் உடனே தள்ளுமுள்ளு ஆகும் அளாவுக்கு கூட்டமாய் புறப்பட்டுவிட்டார்கள். பந்தை பொறுக்க.....அந்த கூட்டத்தில் பேசிக்கொண்டவை....

"இது எவ்வளவு பெரிய தடித்தனம் ஒரு பெண் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது பந்தை அடித்து குழியில் போடுவதா?"

"பந்தை அடித்து குழியில் போட்டது அவளுக்கு எதிரான வன்புணர்ச்சி"

"சீ தூ....கோழையே பந்தை அடித்து பாதாளத்தில் போய்ட்டாயே?"

"மன்னிப்பு கேள்"

அடப்பாவிகளா இதுக்கு நாமளே போய் பந்த எடுத்துட்டு வந்திருக்கலாமே....

5 comments:

வால்பையன் said...

//"பந்தை அடித்து குழியில் போட்டது அவளுக்கு எதிரான வன்புணர்ச்சி"//


ஹாஹாஹா!

இது எதோ பைத்தியகாரதனமா தெரியுதே!

மதார் said...

நாம பெரிய மைக் வச்சு கத்தினாலும் இவங்க கத்தலை விட மாட்டாங்க .தப்பு சில பெண்களிடமும் இருக்கு .ஊசி இடம் குடுக்காமல் நூல் நுழையாது .

Cable Sankar said...

super

பித்தனின் வாக்கு said...

ENNAMO SOLRINGA. SARINGA nan veetuku pal card vanga poganum. bye

Karthik T said...

ஆண்களை இப்படி எல்லாம் மாற்றினால் பெண் சுதந்திரம் கிடைத்தவிடும் என்பது கூறு கெட்ட முட்டாள்தனம் , பெண் சுதந்திரம் பற்றி ஆண்கள் தெரிந்த அளவு கூட பெண்களுக்கு தெரியாது என்பது உண்மை