Sunday 1 November 2009

மாதவிடாய் பெண்கள் தீண்டத்தகாதவர்கள்

பெண்களுக்கு அழகே சக்தி.




என்னது பீரியட்ஸ் காலத்துல வெளிய ஒரு பாய் போட்டு குத்த வச்சுக்கணுமா?....அடி செருப்பால....


காலம் காலமாய் பெண் விடுதலைக்கு குரல் கொடுக்கிறேன் பேர்வழி என்று இங்கே நிறையே பேர் பெண் அடிமைத்தனத்தை பற்றி மட்டுமே மேலும் மேலும் பேசியும் எழுதியும் இருக்கிறார்கள். அவர்கள் மேல் எனக்கு ஒரு வகையில் பெருத்த கோபம் உண்டு. அவர்கள் ஓயாமல் பெண் அடிமையாய் நடத்தப்படுகிறாள் என்று பரிதாபப்பட்டும் கோபப்பட்டும் எழுதுகிறார்கள். நீங்களே யோசித்து பாருங்கள். ஒரு பெண் குழந்தைக்கு விபரம் தெரியும் நாள் முதல் அதனிடம் "நீ ஒரு அடிமை...உன் இனம் ஒரு காலத்தில் அடிமையாய் நடத்தப்பட்டது....நீயும் அடிமை இனத்தின் ஒரு நீட்சி" என்று கூறுவதன் மூலம் அந்த பிஞ்சு மனதில் ஒரு வகை தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடுகிறார்கள். அந்த பிஞ்சு மனதில் அடிமை விதையை அவர்களே ஊன்றிவிடுகிறார்கள்.

இவர்கள் ஆணின் இரக்கத்தால், பெண் விடுதலை அடைய வேண்டும் என்ற வகையில் எழுதவும் செய்கிறார்கள். ஆனால் நான் பெண் அடிமை என்ற கருத்தையே முன்வைக்க போவதில்லை. பெண் ஆண்களுக்கு சமமானவள் என்ற வாதத்தையும் பின்னுக்கு தள்ளி பெண் ஆணை விட உயர்ந்தவள் என்கிற ரீதியில் தான் பார்க்கிறேன்.

பெண்கள் தங்கள் அழகாலும் அறிவாலும் ஆண்களை தங்களுக்கு சேவகர்களாக ஆக்கிக்கொள்ள முடியும் என்பதை தான் நான் அழுத்தமாக எடுத்துரைக்க விரும்புகிறேன். பெண் அடிமைத்தனம் என்னும் அழுக்கான பழைய புராணத்தை பாடிப்பாடி ஏன் பெண்ணை இன்னும் தலைகுனிய வைக்கிறீர்கள். அவளை நிமிர விடுங்கள்.

அதனால் நான் இங்கே பேசப்போவதெல்லாம் ஆணடிமைத்தனத்தை பற்றியே. அதனால் நிறைய பேர் கொதிப்படைகிறார்கள். அப்படி கொதிப்படைபவர்கள் எல்லாம் தங்கள் காதலி மனைவி என்று வரும்போது உள்ளாடைகளை கசக்கவும் தயாராய் இருப்பார்கள் என்பதை வாழ்வியல் நடைமுறை கூறும். பெண்களின் ஆடைகளை துவைபப்தில் இருக்கும் சுகம் பற்றி எனக்கு வந்த ஒரு கடிதத்தை அடுத்த பதிவில் பிழை திருத்தி நீங்கள் வாசிக்க தருகிறேன்.

பெண்களே யோசித்து பாருங்கள்...ஒரு காலத்தில் கலாசாரம் பண்பாட்டு மத காவலர்கள் நமக்கு இயற்கையாய் வரும் மாதவிடாய் காலத்தில் நாம் ஏதோ தீட்டுபட்டவர்கள் போல் வீட்டின் வெளியே ஒரு பாய் விரித்து படுத்துக்கொள்ள வேண்டும் என்று கீழ்த்தரமான சட்டங்களை கொண்டு வந்தார்கள். இது எல்லாம் பெண்களின் அறிவும் அழகும் ஓங்கி நின்றால் அவர்களின் பின்னால் ஆண்கள் அலைய வேண்டிவரும் என்று பயந்த கோழை கூட்டத்தால் உருவாக்கப்பட்டது. ஆண்களே……இப்படியெல்லாம் அடக்கி வைத்தால் பெண் எப்போதும் தலை குனிந்தே வாழ்ந்து விடுவாள் அவளை உங்கள் சுகங்களுக்கு உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று தானே நீங்கள் இது போன்ற மனிதாபிமானம் இல்லாத சட்டங்களை உருவாக்கினீர்கள்.

பெண்களை குழந்தை பெற்றுத்தரும் ஒரு எந்திரம் போல் பயன்படுத்தி வந்த காலமும் உண்டு. குழந்தை பெற்றுக்கொள்வதால் பெண்களின் அழகு குறைபடும் என்று நம்பிவிடவேண்டாம். உங்கள் அழகின் மீது தகுந்த அக்கரையும் பராமரிப்பும் செலுத்தினால் போதும் நீங்கள் குழந்தை பெற்றுக்கொண்ட பிறகும் இளமையாய் தோன்றலாம். எப்போதும் உங்கள் அழகின் மீதும் கல்வி, படிப்பு இவற்றின் மீதே உங்கள் கவனம் இருக்கட்டும். குரங்கு போல் புட் போர்ட்டில் தொங்கிக்கொண்டு வரும் ஆண்களின் குரங்கு சேட்டைகளை நம்பி உங்கள் மனங்களை அலைய விடாதீர்கள். அவர்களெல்லாம் ஒயின் ஷாப்பில் மது அருந்துவதை வீரம் என்றும் கெட்ட வார்த்தையில் உளறுவதை தைரியம் என்றும் ஆண்மை என்றும் ஆண் தன்மை என்றும் நம்பி அறிவிலியாய் திரிபவர்கள். அதனால் பெண்களே உங்கள் கல்வியும் அழகும் சீராக இருந்து ஆண்களை ஆட்சி செய்யும் ஆவல் இருந்தால் உங்களுக்கு சேவை செய்ய ஆண்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள்.அழகான அறிவுடைய பெண்களுக்கு சேவை செய்வதில் தான் தங்கள் வாழ்வு பூரணம் அடைகிறது என்கிற உண்மையை ஆண்கள் உணரத்தொடங்கிவிட்டார்கள். என்ன ஆண்களே சரி தானே?

குழந்தை பெற்றுக்கொள்வதில் உங்கள் சம்மதம் இன்றி எதுவும் நடந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மாமனார் மாமியார் புருஷன் இவர்களுக்காக நீங்கள் குழந்தை சுமக்க போனால் உங்களுக்கும் கழுதைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. தாய்மை என்பதை முதலில் நீங்கள் நேசிக்கவேண்டும். மனதளவில் அதன் மீதான தாகம் வரவேண்டும். மனம் தாய்மையை தரிக்க தயாராகவேண்டும். அதன் பின்பே நீங்கள் விரும்பும் பட்சத்தில் மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் அந்த காலகட்டத்தில் கணவன் உங்களிடம் இன்னும் அன்பாகவும் சேவைகளை சரிவர செய்பவராகவும் உங்களுக்கு கீழ்படிபவராகவும் இருத்தல் அவசியம்.

பிறகு எனக்கு நிறைய கடிதங்கள் வருகின்றன. அதில் ஒரு கடிதத்தில் ஒருவர் தனக்கு பெண்களின் பாதங்கள் மிகவும் பிடிக்கும் என எழுதியிருந்தார். என் பிளாகில் உள்ள புகைப்படத்தில் வருவது போல் தன் தோழிக்கு அவர் சேவகம் செய்வதை பெரிதும் விரும்புவதாக கூறினார். மேலும் பெண்களின் பாதத்தை தொட்டு வணங்கி வழிபடுவதில் ஒரு வித தெய்வீக நிலையை அவர் அடைவதாய் குறிப்பிட்டிருந்தார். மேலும் சாலையில் நடக்கிற போதே எந்த ஒரு பெண்ணை பார்க்கிற போதே அவர் முதலில் பார்ப்பது அவளின் பாதங்களை தானாம். ஒவ்வொரு வகை பாதங்களிலும் ஒவ்வொரு சங்கதி இருக்கிறதென்கிறார்.


ஒவ்வொரு வகை பாதங்களிலும் ஒவ்வொரு சங்கதி இருக்கிறதென்கிறார்.பெண்களின் பாதங்களின் மூலம் அவர்களின் மனநிலையையும் டாமினேட்டிங் சம்பிசிவ் கேரக்டர்களையும் தெரிந்துகொள்ள முடியும் என்றும் பெண்களின் பாத அமைப்பும் அவர்கள் பாதங்களை வெளிக்காட்டும் முறையிலும் ஸ்டைல் மேனரிஸம் இதிலெல்லாம் நிறைய சங்கதிகள் இருப்பதாய் குறிப்பிட்டிருந்தார். அவை பற்றி எனக்கு முன்னரே தெளிவான வாசிப்பும் புரிதலும் இருப்பதால் எனக்கு அது ஒன்றும் புதிதல்ல. மேலும் சில அழகான பெண் பாதங்களின் புகைப்படங்களையும் அனுப்பியிருக்கிறார்க். சில உங்களுக்காக. எந்த பாதம் என்ன செய்தி சொல்கிறதென்று பின்னூட்டமிடுங்கள்.













23 comments:

Anonymous said...

நான் ஒரு பெண்ணை ஆறு வருடமாக விரும்புகிறேன் .அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறேன்.அவளும் என்னை விரும்புகிறாள்.அவள் பாதகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் .நான் அவளை முதன் முதலில் தொட்ட இடமும் பாதம் தான் ,அதை நான் விரும்புகிறேன்.நான் அந்த விருப்பத்தை அவளிடம் எப்படி சொல்லுவது .அதை அவள் எப்படி ஏற்றுகொல்வாலோ என்கிற பயம் எனக்கு. அவள் என் மாமன் மகள்.

சக்திவேல் said...

தோழி வின்ஸி அவர்களே. பென்னின் பாதத்தை முத்தமிட்டு ஆராதிப்பது, உள்ளாடைகளை துவைப்பது இதெல்லாம் சாதாரனமானவைகளே. காம மயக்கத்தில் எதையும் செய்ய எல்லா ஆன்மகனும் தயார்தான், சாத்திய அறைக்குள் எதையும் செய்பவர்கள்தான் இவர்கள். ஆனால் பிரச்சினை என்னவென்றால் அறைக்குவெளியே பெண்க‌ள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதுதான்.

நடிகை ஸ்ரீப்பிரியா அவர்கள் அழகாகச்சொல்லியிருந்தார், கடவுளின் படைப்பிலே அறிஞனும் மனிதந்தான், மூடனும் மனிதந்தான் நடிகையும் மனிதனே. மனிதனை மனிதனாக மதிக்காமல் போனாலும் பர‌வாயில்லை, மிதிக்க அல்லவா செய்கிறார்கள் இங்கே.

பெண்னானவள் மனித இனத்தைசேர்ந்தவள் என்பது மறுக்கப்பட்டு, மிகக்கேவலமாக நடத்தப்படுகிறர்களே!. பிள்ளைபெற்றெடுத்து வளர்க்கும் பொறுப்பிலேயே பொழுதுகளை வீனடித்து. அப்பிள்ளை நல்லபடியாக வளர்ந்தால் அப்பாவைப்போல என்றும், தறுதலையாக வளர்ந்தால் அம்மவின் வளர்ப்பு என்று பொல்லாப்பினை வாங்கி, பாசம், தாலி என்ற மாயைகளுக்குள் கட்டுன்டு, எது நிஜமான வாழ்க்கை எது நிம்மதியான வாழ்க்கை என்று அறிந்துகொல்லாமலே மற்றும் எதையெல்லாம் தியாகம் செய்தோம் அதன் மதிப்பு என்ன என்று தெரியாமலேயே வாழ்ந்து முடிக்கின்றாளே, அதை நினைத்துதான் வேதனையாக இருக்கு.

எங்கள் கிராமத்தில் பெண்க‌ள் படும்பாட்டை கன்டால் கல்லும் கரைந்தழுகும். சிறுவயதில், எங்கள் வீட்டுக்கருகில் உள்ள சாக்கடையில், ஒரு பென்குழந்தையின் இறந்த உடலை கன்டு அப்படி அழுது துடித்தேன், இன்னமும் நடந்து கொன்டுதான் இருக்கு. அதுக்கு எங்கள் இயக்குநர் பாரதிராஜா சொன்ன காரனமும் சமயத்தில் சரிதான்ன்னு தோனுது.

ஆயிரம் பெரியார்கள் மற்றும், பாரதியார்கள் வந்தாலும் திருத்தமுடியாத அளவுக்கு ஆனாதிக்கம் இங்கே புரையோடியிருக்குது.
சினிமா மற்றும் மற்ற‍ஊடகங்களும் மனது வைத்தால் இந்நிலை மாறலாம். ஆனால் அவைகளும்தானே பாழாய்ப்போன ஆனாதிக்கத்தில் உள்ளன. மீட்ப்புக்கு வழி என்னன்னே தெரியலை. நல்ல கல்வியறிவு தீர்வைக்கொடுக்கும்ன்னு நினைக்கிறேன்.

Sanjai Gandhi said...

//பெண் ஆண்களுக்கு சமமானவள் என்ற வாதத்தையும் பின்னுக்கு தள்ளி பெண் ஆணை விட உயர்ந்தவள் என்கிற ரீதியில் தான் பார்க்கிறேன்.//

வலைப்பூ தலைப்பு புரியுது. :)

//அப்படி கொதிப்படைபவர்கள் எல்லாம் தங்கள் காதலி மனைவி என்று வரும்போது உள்ளாடைகளை கசக்கவும் தயாராய் இருப்பார்கள் என்பதை வாழ்வியல் நடைமுறை கூறும். //

அட ங்கொக்க மக்கா.. இது வேறயா? :))

//பெண்களின் ஆடைகளை துவைபப்தில் இருக்கும் சுகம் பற்றி எனக்கு வந்த ஒரு கடிதத்தை அடுத்த பதிவில் பிழை திருத்தி நீங்கள் வாசிக்க தருகிறேன்.//

இதுக்கெல்லாமா லெட்டர் போடறாங்க?

ரவி said...

இதுக்கெல்லாமா லெட்டர் போடறாங்க///


அதானே ??

:)))

லெமூரியன்... said...

எல்லாம் நல்ல சொல்லிட்டு கடைசில பெண்கள் அழகை பராமரிக்க வேண்டும்னு சொல்லிட்டீங்களே? அழகாய் இருக்கிறாய் ,தேவதை,நிலான்னு புகழ்ந்தே இந்த புள்ளைங்கள காரியம் முடிக்கிற வேலைதானே பெரும்பாலும் பசங்களோடது?? அப்படி இருக்கும்போது நீங்க அழகை பராமரிக்கச் சொல்றது மறைமுகமா ஒரு ஆணுக்காக தயாராகுனு சொல்ற மாதிரி எடுத்துக்க வேண்டியதிருக்கே???

கவிராஜன் said...

ஆண்கள் பெண்களின் உடை அணிவது
பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளேன். மேலும் ஒரு blog எழுதினால் சந்தோச படுவேன்.....

Free Radical said...

மிக நல்ல பதிவு.. இப்பொ எல்லாம் விஷ்பர், கேர்பிரீ எகபட்ட மெட்டர் வந்தாச்சு...
உங்க பதிவுகளைப் படிச்சு பார்த்தேன்..

சில இடங்களில் சரியாகவும் சில இடங்களில் கொஞ்சம் Over Dose ஆகவும் தெரிகிறது..

நடக்கட்டும்... நடக்கட்டும்...

Anonymous said...

வின்சி ..மாதவிடாய்க்கும், human energy field க்கும் தொடர்பு உண்டு.. நீங்கள் நினைப்பது போல் தீண்டாமை அல்ல ..

அருண்

Anonymous said...

வின்சி..நீ ஒரு அரிப்பெடுத்து திரிகின்ற வேசை என்று உனது எழுத்துக்களின் மூலம் அறிய முடிகின்றது.நிஜவாழ்க்கியில் பத்தினி போன்று நடித்துக்கொண்டு எழுத்துக்களின் மூலம் கற்ப்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்..

Keddavan said...

மனநோயினால் பாதிக்கப்பட்டு வாயக்கு வந்ததை எல்லாம் பிதற்றிக்கொண்டிசுக்கும் தோழி வின்சி..உங்கள் காதலனுக்கு நீங்கள் எழுதும் பதிவுளை காட்டி இருக்கின்றீர்களா.?..அதைசெய்யும் தைரியம் உங்களுக்கு இருக்கின்றதா?.இந்த பிதற்றல்களை படித்தபின்பும் அவன் உங்களை ஏறெடுத்து பார்த்தால் அவர் தான் உண்மையான ஆண்மையற்றவராக இருக்கு வேண்டும்.அதன் பின்பு அவனை உங்களின் காலில் விழுந்து கிடக்க வையுங்கள்..

ரவி said...

மனநோயினால் பாதிக்கப்பட்டு வாயக்கு வந்ததை எல்லாம் பிதற்றிக்கொண்டிசுக்கும் தோழி வின்சி..உங்கள் காதலனுக்கு நீங்கள் எழுதும் பதிவுளை காட்டி இருக்கின்றீர்களா.?..அதைசெய்யும் தைரியம் உங்களுக்கு இருக்கின்றதா?.இந்த பிதற்றல்களை படித்தபின்பும் அவன் உங்களை ஏறெடுத்து பார்த்தால் அவர் தான் உண்மையான ஆண்மையற்றவராக இருக்கு வேண்டும்.அதன் பின்பு அவனை உங்களின் காலில் விழுந்து கிடக்க வையுங்கள்./////////////


நான் ஏண்டா நைட்டு பண்ணெண்டு மணிக்கு சுடுகாட்டுக்கு போறேன். என்று கேட்டால் என்ன செய்வீங்க சார் :)))

பெண்கள் உங்கள் டவுசரை கழட்டுவது போல எழுதினால் ஏன் உங்களுக்கு பின்னால் வெண்ணீர் ஊற்றியமாதிரி ஆகிறது என்பதை விளக்குமாறு (துடைப்பம் அல்ல) பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ரவி said...

வின்சி..நீ ஒரு அரிப்பெடுத்து திரிகின்ற வேசை என்று உனது எழுத்துக்களின் மூலம் அறிய முடிகின்றது.நிஜவாழ்க்கியில் பத்தினி போன்று நடித்துக்கொண்டு எழுத்துக்களின் மூலம் கற்ப்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்./////////

அனானி

நீ ஒரு சொறிபிடித்து அலைகின்ற டாமி என்று உனது எழுத்துக்களின் மூலம் அறிய முடிகிறது. நிஜவாழ்க்கியில் ஆம்பளை போன்று நடித்துக்கொண்டு எழுத்துக்களின் மூலம் கற்ப்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்.


கட் அண்ட் பேஸ்ட். சில வார்த்தைகளை மாற்றியிருக்கிறேன்.

ரவி said...

வின்ஸி மேடம். நீங்கள் பின்னூட்டத்துக்கு ரிப்ளை செய்யாததால் நான் மிமிக்ரை செய்யவேண்டியதா போச்சு.

அடுத்த பதிவு எப்போ ?

VINCY said...

செந்தழல் ரவி உங்களுக்கு மிக்க மிக்க நன்றி. பல கேள்விகளுக்கு நீங்கள் விடை சொன்ன விதம் சூப்பர். மேலும் ஆண்களுக்கு ஏன் என்று தெரியவில்லை அவர்களை பற்றிய உண்மையை சொன்னால் உடனே பொத்துக்கொண்டு வருகிறது. எனக்கு அப்போதெல்லாம் சிரிப்பு தான் வரும். அடுத்த பதிவு விரைவில். இந்த வாரத்தில்.

VINCY said...

//நிஜவாழ்க்கியில் பத்தினி போன்று நடித்துக்கொண்டு எழுத்துக்களின் மூலம் கற்ப்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்..//

யப்பா நான் பத்தினியின்னு யாருப்பா சொன்னது. என்ன கட்டிக்கபோறவன் கிட்ட முதல்ல சொல்ல போறதே நான் ஒரு பத்தினி இல்லேங்குற உண்மையை தான். ஆமா "பத்தினி"ங்குறவங்க யாரு. சுதந்திர போராட்ட தியாகிய. இல்ல மின்சாரம் டெலிபோன் போன்ற அறிவியல் சாதங்களை கண்டு பிடித்த விஞானியா. இல்லை பல புத்தகங்கள் எழுதிய அறிவு ஜீவியா? இல்லை பெரிய பிசினஸ் மேக்னட்டா? புருஷன் எத்தன பேரோட படுத்தாலும் சரி சாகுற வரைக்கும் அவன் ஒருத்தனுக்கே காட்டி படுக்குறவளுக்கு பெயர் தானே பத்தினி. அப்படியானால் சத்தியமாக...உங்கள் மேல் சத்தியமாக அந்த வேஷத்தை நான் ஏற்று நடிக்க விரும்பவில்லை. நான் பத்தினி வேஷம் போட விரும்பவில்லை ஐயா....வேறு யாரையாவது பாருங்கள்.

VINCY said...

//ஆயிரம் பெரியார்கள் மற்றும், பாரதியார்கள் வந்தாலும் திருத்தமுடியாத அளவுக்கு ஆனாதிக்கம் இங்கே புரையோடியிருக்குது.
சினிமா மற்றும் மற்ற‍ஊடகங்களும் மனது வைத்தால் இந்நிலை மாறலாம். ஆனால் அவைகளும்தானே பாழாய்ப்போன ஆனாதிக்கத்தில் உள்ளன. மீட்ப்புக்கு வழி என்னன்னே தெரியலை. நல்ல கல்வியறிவு தீர்வைக்கொடுக்கும்ன்னு நினைக்கிறேன்.//

பெண்கள் தான் இதற்கு தீர்வு காணவேண்டும். இங்கே நான் பெண்களை உயர்வாகவும் ஆண்களை தாழ்வாகவும் எழுதினால் எத்தனை பேருக்கு கோபம் வருகிறது. அதற்கு காரணம் ஆண்கள் இப்போது வகிக்கும் பொய்யான ஒரு ஆதிக்க மேடை சீக்கிரமே அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிடுமோ என்ற பயம் தான். பெண்கள் தான் துணியவேண்டும். சமுதாய அத்துமீறல்களை கேள்வி கேட்கவேண்டும்.

Sanjai Gandhi said...

//என்ன கட்டிக்கபோறவன் கிட்ட முதல்ல சொல்ல போறதே நான் ஒரு பத்தினி இல்லேங்குற உண்மையை தான்.//

வின்சியின் கணவர் செய்யும் சேவைகள்


உள்பாவாடையின் உள் சுகந்தத்தில் அவர் கிறங்கியிருந்தார். அதை மறு படி மறுபடி பிடித்து தன் மனைவின் மிக அருகில் ஒட்டிக்கொண்டிருந்த அந்த

வின்சியின் கணவர் - ஆணடிமை தொடர்.
ஆடையின் அழகை ரசித்தார். அவருக்கு தெரியும் அவர் வணங்குவார். கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த தாலியை எடுத்து கண்ணில் ஒத்திக்கொண்டார்.


மச்சி, தப்பு பண்ணுங்க.. ஆனா அதை கரெக்டா பண்ணுங்க.. ஹ்ம்ம்.. நடக்கட்டும்.. :)

VINCY said...

தோழரே அது ஒரு கற்பனை கதை என்பது இன்னுமா உங்களுக்கு விளங்கவில்லை. சரி போகட்டும்...

கவிராஜன் said...

ஆண்கள் பெண்களின் உடை அணிவது
பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளேன். மேலும் ஒரு blog எழுதினால் சந்தோச படுவேன்.....

Kovai Senthil said...

சபாஷ்! அருமையான பதிவு வாழ்த்துகள் தோழி...

Anonymous said...

இந்த அழகான ஹை ஹீல்ஸ் அணிந்த பாதங்கள் பார்க்கும்போது எனக்கு தோன்றுவது ஐயோ பாவம் என்பதுதான்

பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி மேடு பள்ளம் இல்லாத ப்ளாட்டான செருப்பை அணிவதே நல்லது. அரை இன்ச் அளவுக்குப் பின்னங்கால் உயரம் அதிகம் இருந்தால் பரவாயில்லை. ஆனால், இரண்டு இன்ச், மூன்று இன்ச் உயரத்துக்கும் அதிகமாக ஹை ஹீல் செருப்பு போட்டால் நிச்சயம் பல பிரச்னைகள் வந்து சேரும்.

முக்கியமாக, இடுப்பு வலி வரும். குதிகால் உயரமான செருப்புகளப் போடும்போது, நம் உடல் எடை முழுக்க பூமியில் நிற்காது. எடைய நம் இடுப்பிலும், கால் பகுதியிலும் முட்டுக் கொடுத்து நமக்கு நாமே தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் இடுப்பு வலி, தொடைக்குக் கீழே கால் பகுதிகளில் வலி வந்து உயிரை எடுக்கும்.

மேலும், குதிகால் செருப்பு போட்டு நடக்கத் தெரியாத காலத்தில், கொஞ்சமாக கால் இடறினால்கூட, கால் பகுதியில் பாதிப்பு பலமாக இருக்கும்.

ஸ்டைல் என்பது நம்முடைய உடையிலும், செருப்பிலும் இல்லை. நம் மனசிலே இருக்கணும்.

George

aadaadasdsd said...

"ஒரு காலத்தில் கலாசாரம் பண்பாட்டு மத காவலர்கள் நமக்கு இயற்கையாய் வரும் மாதவிடாய் காலத்தில் நாம் ஏதோ தீட்டுபட்டவர்கள் போல் வீட்டின் வெளியே ஒரு பாய் விரித்து படுத்துக்கொள்ள வேண்டும் என்று கீழ்த்தரமான சட்டங்களை கொண்டு வந்தார்கள்."

வணக்கம்! உங்களது பிளாக்கை எனது நண்பர் திரு.பாலா அவர்களது மூலமாக அறிந்தேன்! மேலே அடைக்குறிக்குள் இருக்கும் கருத்தில் எனக்கு முழுதும் உடன்பாடு இல்லை! அந்த காலத்துல இப்போ இருக்கற மாதிரி டெக்னாலஜி கிடையாது! அதுவும் இல்லாம மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கின் காரணமாக பெண்கள் மிகவும் சோர்வாக இருப்பார்கள்! இப்போ மாதிரி இல்லாம அப்போ எல்லாம் ஆண்கள் வயல் வேலைக்கும், பெண்கள் வீட்டுல எல்லா வேலையயும் பார்த்துட்டு இருந்தாங்க இல்லையா? இப்போ மாதிரி அப்போ எங்கங்க மிக்ஸி, கிரைண்டர் எல்லாம்? இடிக்கறதுக்கு machinum கிடையாது?
ஆண்கள் எப்படி வீட்டுக்கு வெளில கஷ்டப்பட்டு உழைச்சாங்கலோ அதே மாதிரி பெண்களும் வீட்டுக்குள்ள அம்மி, ஆட்டு கல், உலக்கை, உரல் போன்ற அட்வான்ஸ்டு டெக்னாலஜி devices நால ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சாங்க!
இதுலேர்ந்து அவங்களுக்கு பிரேக் குடுக்கணும்னா வேற வழியே இல்லைன்னு தான் இப்படி ஒரு பழக்கவழக்கத்தா கொண்டு வந்துருக்கணும்ங்கறது என்னோட எண்ணம்! அதுவும் இல்லாம அப்போ வயல் வேலைன்னா ஆள் வச்சு செஞ்சுக்கலாம் ஆனா வீட்டு வேலை?

அதுவும் இல்லாம அப்போ whispher, Carefree லாம் கிடையாது வேற? இந்த ரத்தப்போக்கு மூலமா நோய்கள் பரவாம இருக்கறதுக்காவும்ண்ணு வச்சுக்கலாம்!
இது தாங்க என்னோட தாழ்மையான கருத்து! ஏத்துக்கறதும் ஏத்துக்காததும் உங்களோட விருப்பம்!

P.S: இதுல கொடுமை என்னன்னா சில பழக்கவழக்கங்கள் ஓவர் ஆ பீரியட் ஒஃப் டைம் செல்லாது! அதே மாதிரி இந்த பழக்கவழக்கம் இப்போ வேலைக்கே ஆகாது - totally out of டைம். ஆனாலும் சில மக்கள் இன்னும் அத ஃபாலோ பண்றது தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு!

Muthukumar said...

சமிபத்தில் உங்களுடைய blogger என்னுடைய நண்பர் மூலமாக பார்க்க நேரிட்டது, ஆனால் ஒரு சில தலைப்புகளை (மாப்பிள்ளை பார்க்கும் படலம் , கோவில் அர்சகர் மற்றும் சில )தவிர மற்றவைகளை வாசிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை . ஆரோகியமான சிந்தனை உள்ள அனைவரின் கருதும் இதுவாகத்தான் இருக்கும் என நாம்புகிறேன். ஆண் மற்றும் பெண் இருவரில் ஆணைவிட பெண்ணின் ஆரோக்கியமற்ற சிந்தனைக்கு அவளை சார்த்த குடும்பம் மற்றும் சமுகம் மிக பெரிய விலை கொடுக்க வேண்டிருக்கும் . உங்களுடைய எழுத்துகளை அப்படியே யாரேனும் ஏற்றுகொண்டு நடைமுறைப்படிதினால் அது சற்று அபயகரமனதாகதன் இருக்கும் அதனால் என்னுடைய வேண்டுகோள் உங்களுடைய எழுத்துகளை சுய பரிசோதனை செய்து எழுதுங்கள்.