இதை எல்லாம் வைத்து பார்க்கிற போது புடவை என்பது சமுதாயத்தில் கேலி சின்னமாகவும் கோழைகள் அணிய வேண்டியதாகவும் ஒரு ஆணை அவமானப்படுத்த சிறந்து யுத்தியாகவும் கையாளப்பட்டிருக்கிறது. எனக்கு இவைகளை கேட்கிற போதும் பார்க்கிற போதும் கோபமும் கொஞ்சம் சிரிப்பும் வரும். யோசித்து பாருங்கள் நம் நாட்டின் மிக உயரிய பதவியில் இருக்கும் மாண்புமிகு குடியரசு தலைவர் அணிந்திருப்பதும் சேலை தான். அப்படி ஒரு மாபெரும் பொறுப்பிலிருக்கும் பெண் அணிந்திருக்கும் ஒரு ஆடையை ஒரு ஆண் அணிவது அவனை எள்ளலுக்கும் கேவலத்திற்கும் ஆளாக்கும் என்கிற கருத்து தான் என்னை கோப்பப்பட வைக்கிறது.
திருநங்கைகள் படும் பாட்டை நான் பார்த்திருக்கிறேன். ஒரு ஆண் ஒரு பெண்ணின் உடையை அணிந்து பார்க்க பிரியப்படுகிறான் என்பதாலேயே அவன் எத்தகைய ஒரு நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகிறான் என்பது வருத்ததிற்கு உரியது. நான் ஹோமோ செக்ஸுவல்ஸ் பற்றி பேசுவதாய் பாமரத்தனமாய் நினைக்கவேண்டாம். ஹோமோ செக்ஸ் என்பது வேறு. பெண்களின் ஆடையை அணிய பிரியப்படும் எல்லா ஆண்களும் ஹோமோ செக்ஸுவல்ஸ் இல்லை. எனக்கு தெரிந்த ஒரு தோழியின் கணவருக்கும் இந்த ரகசிய ஆசை இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் திருமணம் ஆகி தாம்பத்தியத்தில் எந்த வித நெருடலோ இல்லாமல் குடும்பம் நடத்தி வருகிறார்கள்.
ஆனால் சமுதாயத்தில் இன்னும் பெண்களையும் பெண்கள் அணியும் ஆடைகளையும் கேலி பொருட்களாக பார்க்கும் பண்பு நிறைந்திருப்பது வருத்தமே. இது முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு.
புடவை என்பது ஒரு அசாத்திய உடை. அது நம் நாட்டின் கலாசாரத்தை பறைசாற்றும் உடை. புடவையில் இருக்கும் கவர்ச்சியும் ஆளுமையும் வேறு எந்த உடையிலும் இருப்பதில்லை என்பது என் கருத்து. மேலும் நாம் அணியும் ஜீன்ஸ் சுடிதார் கூட ஒரு வகையில் ஆண்களின் உடை அலங்காரத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்டது என்பதே உண்மை. ஆனால் புடவையும் ஸ்கர்ட் பாவாடையும் அப்படி அல்ல. அது பெண்மையை பறைசாற்றும் பெண்களுக்கு ஒரு தனித்தன்மையை தரும் ஒரு மரியாதையை தரும் உடை. நம் பாரத மாத பெருமையாக போர்த்தியிருக்கும் உடை.
பாரத மாதாவை கை எடுத்து வணங்கும் நீங்கள் அந்த உடையை பற்றி எத்தனை ஒரு கீழ்த்தரமான தீர்மானம் வைத்திருக்கிறோம் என்பது உங்களை எல்லாம் ஆணாதிக்க வெறியர்கள் என்றே காட்டுகிறது.
புடவை கட்ட பிரியப்படும் ஆண்களை வெறுக்காதீர்கள். நீங்கள் அணியும் ஒரு உடையை ஒரு ஆண் அணிய பிரியப்படுகிறான் என்பது உங்களுக்கு பெருமையான விஷயம் அல்லவா. நீங்களே முன் வந்து அந்த ஆணை ஊக்குவிப்பதில் எந்த தவறும் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. ஒரு ஆண் தானாக முன் வந்து புடவை கட்ட பிரியப்படுகிற போது அவனை அந்நியனாய் பார்க்காதீர்கள். உங்கள் கணவரோ பாய் பிரண்டோ அப்படி ஒரு ஆசையை உங்களிடம் தெரிவித்தால் உடனே அவனை ஏதோ கேலி செய்து அவனுடைய மன ஆரோக்கியத்தை கெடுக்காதீர்கள். பெண்கள் நாமே நம் உடையை அணிய பிரியப்படும் ஒருவரை பழித்தால் ஆண்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்.
இங்கே பெரும்பாலான அண்களுக்கு புடவை பாவாடை போன்ற பெண்களின் ஆடைகளை அணிந்து பார்க்க ரகசிய ஆசை உண்டு. ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் தாங்கள் கேலி பொருளாய் ஆகிவிடுவோமா என்கிற அச்சம் தான் அவர்களை தவிர்க்கிறது. திரைப்படங்களில் ஒரு ஹீரோவின் சட்டையை விரும்பி அணிந்துகொள்ளும் ஹீரோயின்களை நாம் பாராட்டுகிறோம். அது காதல் என்று மயங்குகிறோம். ஏன் ஒரு ஆண் தன் மனைவியின் காதலியின் உடையை அணிந்து பார்க்க பிரியப்படும் பொழுது நாம் அவர்களை அந்நியமாய் பார்க்கிறோம்.

பெண்களே நீங்களும் உங்கள் குறுகிய பார்வையை மாற்ற வேண்டும். பெண்களின் உடையை ஆணிந்து பார்க்க பிரியப்படும் ஒரு ஆணை நீங்கள் ஊக்குவிக்காத போது நீங்களும் மறைமுகமாக ஆணாதிக்கத்துக்கு துணை போகிறீர்கள்.உங்கள் பாய் பிரண்ட் அல்லது உங்கள் கணவர் அணியும் லுங்கியை நீங்கள் தனிமையில் இருக்கிற போது அணிந்துகொள்வதில் உங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் உங்கள் கணவர் உங்கள் உள்பாவடையை அணிந்துகொண்டு வீட்டில் தனிமையில் உலா வந்தால் அவரை ஏன் வித்தியாசமாக பார்க்கிறீர்கள். ஒரு வேளை இந்த ஆணாதிக்க சமுதாயம் காலம் காலமாய் உங்களுக்கும் அப்படியே கற்பித்திருக்கலாம். இப்போது மாற்றிக்கொள்ளுங்கள் தோழிகளே.
என்னுடைய கருத்துக்கள் இது தான்.
1. புடவையை அவமான சின்னமாக சித்தரிப்பது நகைப்புக்குரியது. புடவை ஆளுமையின் வெளிப்படு. புடவை கட்டும் ஆண் ஒரு கோழை என்று நீங்கள் நினைத்தால் அந்த புடவையை காலம் காலமாக கட்டிக்கொள்ளும் பெண் வர்க்கத்தை தான் நீங்கள் மகா கோழைகளாக நினைக்கிறீர்கள் என்று அர்த்தம் . அந்த நிலைப்பாட்டை மாற்றுங்கள்.
2. பெண்களே நம்மை சுற்றியிருக்கும் ஒரு ஆண் பெண்களின் உடையை அணிந்து பார்க்க பிரியப்பட்டால் அவனை அந்நியனாய் பார்த்து கேலி பேசாதீர்கள். மாறாக அவனுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள். அவனது அந்த விருப்பத்தை ஊக்குவியுங்கள். பெண்களின் உடை எந்த விதத்திலும் கீழ்த்தரமானது அல்ல. அதை அணிவதால் அவனுடைய ஆண் தன்மை மாறிவிடபோவதில்லை என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டு அது போன்ற ஆண்களை நேசியுங்கள்.
3. ஆண்களே. உங்கள் ஆணாதிக்க போக்கை நீங்கள் திருநங்கைகளை இத்தனை நாள் படுத்திய பாட்டிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. இனி மேலாவது திருந்துங்கள்.
4. தன் மனைவியோ காதலியோ அவர்களுக்கு முன் புடவையிலோ பாவாடையிலோ நிற்பதில் ஒரு வித எக்ஸ்டசி இருப்பதாய் ஆண்கள் சொல்லி கேட்டும் படித்தும் இருக்கிறேன். எனக்கு அதை அனுபவிக்க வாய்ப்பில்லை. ஒருவேளை நான் ஆணாக இருந்திருந்தால் நிச்சயம் அதை செய்திருப்பேன். பெண்ணாக இருப்பதால் அப்படி விருப்பப்படும் ஆண்களை நான் ஆதரிக்கிறேன்.

ஆண்களே உங்கள் போலி ஈகோவை தூக்கிவீசிவிட்டு உங்கள் மனதில் இயல்பாக எழும் ஆசைகளை பூர்த்தி செய்துகொள்ளுங்கள். என்ன ஒரு அறுபது வருடம் இந்த உலகில் வாழ்ந்துவிட்டு மடிய போகிறோம். நாம் வாழத்தான் வாழ்க்கை நம்மில் சமுதாயம் வாழ அல்ல.
முன்னரே ஆண்கள் புடவை கட்டுவதை பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதன் பொருட்டு எனக்கு நிறைய கடிதங்கள் வந்தன். நிறைய பேர் இந்த தலைப்பில் எழுத சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் ஒரு ஆணின் மன நிலையை புரிந்துகொள்வதில் நான் இன்னும் சிறுமியாகவே இருக்கிறேன். ஆண்களின் இந்த இயல்பான இச்சையை பற்றி அறிந்துகொள்ள நானும் ஆவலோடு இருக்கிறேன். மேலும் இந்த தலைப்பை பற்றி உங்கள் சந்தேகங்களையும் கருத்துக்களையும் ரகசியங்களையும் என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள். கேட்க ஆவலாய் உள்ளேன்.
பெண்களும் இது தொடர்பாக கருத்து சொல்லலாம்.
vincyontop@gmail.com