Thursday 10 September 2009

என்னை பழித்த நல் உள்ளங்களுக்கு...

கடந்த பதிவுக்கு ரோஷ்மா என்ற பெண்ணோ ஆணோ அனானி வேடமிட்டு என்னை கண்டபடி திட்டி தீர்த்தார். அவரை ஒன்றும் குறை சொல்வதற்கு இல்லை. நான் சொல்ல வரும் கருத்துக்களை குறித்த புரிதலும் அந்த கருத்துக்கள் யாருக்காக சொல்லப்படுகின்றன என்ற அறிவும் இல்லாமல் இருப்பது தான் காரணம். எனவே மேலும் நான் தொடர்ந்து எழுதுவதற்கு முன் சில விஷயங்களை தெளிவுபடுத்துவது நல்லது என நினைக்கிறேன்.

முதலில் என் எழுத்தோடு என் தனிப்பட்ட வாழ்கையை ஒப்பிட்டு பார்க்கும் பாமர தனத்தை விடுங்கள். எழுத்தை எழுத்தாக பாருங்கள். அதில் இருக்கும் கருத்துக்களை விவாதியுங்கள். நான் கணவனுக்கு அடங்கிய ஒரு ஆல்பா பீமேலாக இருந்து கூட இது போன்ற கருத்துக்களை எழுதலாம். கொலை பற்றி கதை எழுதுபவன் கொலை செய்திருக்க வேண்டும் என நினைப்பது பாமரத்தனம்.

நான் சொல்ல வரும் கருத்துக்களை பற்றிய சில அடிப்படை விஷயங்களை பார்ப்போம்.
நான் பெரியாரோ பாரதியாரோ அல்ல. அவர்கள் எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே பெண் உரிமைக்காக போராடியவர்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் சமத்துவம். ஆண்கள் பெண்களை கலாசாரம் மதம் மூட பழக்க வழக்கங்கள் என்ற பெயரில் சர்வ சாதாரணமாக அடிமை படுத்தி வைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட அடிமை விலங்குகளை உடைத்தெறிய போராடியவர்கள் தான் அவர்கள். நான் சொல்ல வருவது பெண்மை என்னும் புனிதத்தை போற்றவேண்டும் வழிபட வேண்டும். பெண் இனி மேல் ஒரு போதை பொருளல்ல அவள் ஒரு வழிபாட்டு ஸ்தலம். அவள் வணக்கத்துக்கு உரியவள். அவள் ஆணுக்கு சமமானவள் அல்ல. அவனை விட ஒரு படி உயர்ந்தவள் என்பது தான் என் கருத்தும் நம்பிக்கையும். காலம் காலமாக அடிமை பட்டு கிடந்த ஒரு இனம் இன்று சம வாய்ப்புகள் வழங்கப்படுகிற பொழுது சர்வ சாதாரணமாக ஆண்களை மிஞ்சி நிற்க முடிகிறதென்றால் அது நிச்சயம் உயர்ந்த இனம் தானே. நான் சொல்ல வரும் கருத்து இது தான். ஆண்களை விட பெண்கள் உயர்ந்தவர்கள். பெண்கள் போதை பொருள் அல்ல வழிபாட்டு பொருள்.





பெண்மையை அதன் புனிதத்தன்மையை போற்றி வழிபடும் தன்மையே ஆண்மை என்பது தான் என் கருத்து. இது நான் ஏதோ புதிதாக சொல்ல வந்த கருத்தும் அல்ல. பல நூற்றாண்டுகளாய் இந்த உலகத்தில் போற்றப்பட்டு வரும் ஒரு மேலான ஒழுக்கம். நம் தமிழர்களுக்கோ இந்தியர்களுக்கோ இது வியப்பை தரலாம். தரும். காரணம் நாம் தெருவில் ஒருவன் யார் மீதாவது மோதிவிட்டால் உடனே இருக்கும் வேலையை எல்லாம் விட்டுவிட்டு அவனை காட்டு மிராண்டித்தனமாக அடிக்க புறப்படும் காட்டு கூட்டம். அவர்களிடம் ஒழுக்கத்தையோ அறிவையோ பண்பாட்டையோ எதிர்பார்க்க முடியாது. அப்படி பட்ட ஒரு காட்டுவாசி கூட்டத்துக்கு பெண்மையின் மேன்மையை போற்ற தெரியாது. வெறும் ஐந்து நிமிட சுகத்துக்காக பெண்ணை வன்புணர்ந்து அதை ஏதோ பெரிய வீர தீர செயல் செய்தது போல் மீசையை தடவி விட்டபடி செல்லும் ஆண்கள் தானே இங்கே இருக்கிறார்கள்.

இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் கடவுளுக்கு சமமானவள். அவளை கடவுளாக வழிபட படைக்கப்பட்டவர்கள் தான் ஆண்கள். இது தான் என்னுடைய கருத்து. பெரியாரோ பாரதியோ சொன்ன பெண் உரிமை அல்ல. ஆண் பெண் சமத்துவமும் அல்ல.


யாருக்காக இதை எழுதுகிறேன்.
காலம் காலமாக அடிமைகளாகவே வாழ்ந்துவிட்ட நமக்கு தலை நிமிர்ந்து நடப்பது கூட அகங்காரமாக தோன்றலாம். அப்படி பெண்மையின் மேன்மை குறித்து சராசரி அறிவு கூட இல்லாமல் கோழைத்தனமாக ஆண்களை சார்ந்து அவர்களுக்கு கீழே வாழ விருப்பப்படும் மஞ்சள் பூசி தாலி சொருகி புடவை சுற்றிய அப்பாவி பெண்கள் சிறிதளவாவது தங்கள் இனத்தின் மேன்மையை உணரவேண்டும் என்பதற்காக இதை எழுதுகிறேன். சிலர் என் மீது கோபப்படலாம். படுங்கள். எந்த புதிய சித்தாந்தமும் சொல்லப்படுகிற போது பொது ஜனங்களால் கல்லடித்து துரத்தப்பட்டது என்பதை நான் சொல்ல தேவையில்லை.

யாருக்காக இதை எழுதுகிறேன்.
அதே போல் பெண்களை தெய்வமாக மதித்து அவர்களை போற்றி அவர்களின் அன்பிலும் அதிகாரத்திலும் வாழ்வதால் தங்கள் வாழ்வு மேன்மை பெறும் என ஆணித்தரமாய் நம்பும் லட்சாதி லட்சம் ஆண்களும் இங்கே இருக்கிறார்கள். நீங்களே சிந்தித்து பாருங்கள் ஆண்கள் காதல் என்ற பெயரில் ஒரு பெண்ணிடம் அடிமை பட்டு கிடப்பதை பெரிய கொடுப்பனையாக நினைப்பார்கள் அதுவே திருமணம் முடிந்தவுடன் ஈகோ தலை தூக்கும். நான் புருஷன் என்ற அகங்காரம் வரும். பெண்ணை ஆழவேண்டும் என்ற முடியாத ஆசைக்கு வலை வீசுவதால் சிக்கல்கள் வரும். ஆண்களில் இது போன்ற கீழ்த்தரமான ஈகோவை தூக்கி எறிந்து பெண்களை வழிபாட்டு பொருளாக பாவிக்க தெரிந்த உன்னத ஆண்கள் இங்கே நிறையே பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் தான் நான் இதை எழுதுகிறேன்.

பெண்களின் ஆடையை அணிந்து பெண்ணாக வாழ விருப்பப்படும் ஆண்கள் புராண காலம் தொட்டு இருந்து வருகிறார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் அப்படிப்பட்ட ஆண்களை நாம் பழிப்போம். அவர்களை கேலி பேசுவோம். இன்று எவ்வளவோ சமுதாய மாற்றம் வந்துவிட்டது. இன்று அவர்களை மரியாதையோடு திருநங்ககைகள் என்று அழைக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என தீர்மானிக்க அதிகாரம் உண்டு. எனவே நான் எழுதும் இந்த கருத்துக்களை நீங்கள் படித்து தான் ஆகவேண்டும் என்று நான் நிர்ப்பந்திக்கவில்லை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் படியுங்கள். இல்லையேல் தயவு செய்து என் பக்கங்களை நாடவேண்டாம். அப்படி படித்துவிட்டு சரியான புரிதலும் அறிவு முதிர்ச்சியும் இல்லாமல் என்னை பழிக்க வேண்டாம். என் பக்கங்களை எத்தனை பேர் படிக்கிறார்கள்...யாரும் படிக்கவில்லையே என்று நான் என்றைக்கும் வருத்தப்படுவது இல்லை.

இந்த கருத்துக்களில் உடன்பாடு இல்லாதவர்கள் தயவு செய்து என் பக்கங்களுக்கு வரவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

வாசகர் கேள்விகளுக்கு பதில்கள்.
1. இவ்வளவு நல்ல கருத்துக்களை சொல்லும் நீங்கள் ஏன் உங்கள் பிளாகில் ஆபாசமான படம் வைத்திருக்கிறீர்கள்?

எத்தனை வன்மம் பாருங்கள். ஒரு பெண்ணின் பாதங்களை தொட்டு வணங்குவதோ அல்லது தசைகளை நெருடி ஓய்வு கொடுப்பதையோ ஒரு ஆண் செய்வது போன்ற காட்சி ஆபாசமாக தெரிகிறது. இதே ஒரு ஆணின் காலில் ஒரு பெண் விழுவது போல் எத்தனை காட்சிகள் சினிமாவில் பத்திரிகையில் தொலைக்காட்சியில் வருகிறது. என்றாவது அது ஆபாசம் என்று நீங்கள் ஒதுக்கியதுண்டா. ஆண்களுக்கு கால் அமுக்கி விடுவதும் முதுகு தேய்த்து விடுவதும் ஒரு பெண்ணின் அன்றாட வேலைகளில் ஒன்று என கருதியும் அவை ஆபாச வர்க்கம் இல்லை என்ற உறுதியும் இருக்கும் உங்களுக்கு இது போன்ற படங்கள் ஆபாசமாக தெரியும். தொப்புளில் பம்பரமும் ஆம்லேட்டும் போடுவது போல் படம் போட்டால் இழித்துக்கொண்டு வருவீர் தானே.

5 comments:

anandrajah said...

//அவள் ஒரு வழிபாட்டு ஸ்தலம். அவள் வணக்கத்துக்கு உரியவள். அவள் ஆணுக்கு சமமானவள் அல்ல. அவனை விட ஒரு படி உயர்ந்தவள் என்பது தான் என் கருத்தும் நம்பிக்கையும். //
மன்னிக்கணும்... இப்படி சொல்லி சொல்லி தான் கருவறைக்குள்ளும் சமையல் அறையிலும் பெண்களை வைத்திருக்க விரும்பியது "ஆரிய" கலாச்சாரம். நீங்களும் அதையே வழி மொழிகிறீர்களே...!! திராவிட கலாச்சாரம் பெண்ணை முன்னிருத்திதான் சமூக வாழ்க்கையை அமைத்து கொண்டது.. ஆனால், பின் வந்த "ஆரிய" கலாச்சாரம் கண்டு அதையே.. தமதாக்கி கொண்டனர் நம்மவர்கள். உங்கள் எழுத்து.. திராவிட கலாச்சாரம் பற்றி படித்து அறிந்தவர்களுக்கு புதிதல்ல..
இன்றும் "கேரளா"வில் பெண்தான் "முடிவெடுக்கும்" தலைமையகம்.
ஆனந்த் ராஜ்.

VINCY said...

பெண்கள் வழிபாட்டு பொருளாக மாறுகிற பொழுது முடிவுகள் எடுப்பது ஆட்சி செய்வதும் அவளாகவே இருப்பாள் என்பது தான் என் கருத்து. பெண் சொல்வதை கண்ணும் கருத்துமாக கேட்டு பின் பற்றுபவன் தான் ஆண்.

Unknown said...

கலக்கல் வின்ஸி. பாதிக்கப்பட்ட பெண்கள் இதுபோல இறங்கினால் தான் ஆணாதிக்கவாதிகள் ஒழிவார்கள்.

அன்புடன்,
காயத்ரி

Arjun said...

sariaaga sonninga Madam Vincy unga opinion 100% correct.

nallathambi said...

Hi Vincy,

Arumai,,,

Nallathambi