கன்னியாகுமாரியில் நடக்கும் கொடுமைகளில் வெளியே வந்திருக்கும் ஒரு கொடுமையை படிக்க இங்கே சொடுக்கவும்.
http://www.dinamalar.com/new/Incident_detail.asp?news_id=12935
தமிழக மாவட்டங்களின் அதிகமாக வரதட்சணை புழங்கும் மாவட்டம் கன்னியாகுமாரி. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இங்கு பெண்களின் படிப்பு விகிதம் ஆண்களை விட மிக மிக அதிகம். உதாரணத்துக்கு இங்கே அதிக வரதட்சணையோடு கல்லூரியில் மூன்று நான்கு டிகிரி வாங்கிய ஒரு பெண் பத்தாம் வகுப்பு படித்து பஸ் டயர் உருட்டும் வேலை பார்க்கும் ஒருவனை மணந்துகொள்ள நேர்கிறது. அதற்கும் மாப்பிள்ளையின் தாய் தந்தை பேசும் பேரத்துக்கு அளவில்லை.
படிப்பிலும் அறிவிலும் சிறந்து விளங்குபவள், மாதா கடவுளுக்கு சமமாக போற்றப்படவேண்டியவள் இந்த கன்னியாகுமாரி மாவட்டத்தில் அழுகிய மீனுக்கு இணையாக விலை பேசப்படுகிறாள். பெண் ஆதிக்கம் கொண்டு தான் இதை உடைக்க முடியும் என்பது என் கருத்து மட்டுமல்ல அது தான் உண்மையும் கூட.
நீங்கள் கூட இதை முயற்சித்து பார்க்கலாம்.
மேட்ரிமோனி வாயிலாக ஒரு கன்னியாகுமாரி பையனின் புரோபைலை எடுத்துக்கொள்ளுங்கள். அவன் பி.ஈ எனும் அதி புத்திசாலி படிப்பு படித்தவனாக இருந்தால் நல்லது. ஹரியர்ஸ் வைத்து ஏதோ ஒரு குப்பை காலேஜில் பி.ஈ வாங்கிவிட்டால் இவர்கள் எல்லாம் ஐ.ஐ.டி யில் படித்த மேதாவிகள் என நினைப்பு. பிறகு அவன் சாப்ட்வேர் நிறுவனத்தில் இரா பகலாக உழைத்து இருபது முதல் முப்பதாயிரம் சம்பளம் வாங்குபவனாக இருக்கவேண்டும். செய்வது என்னவோ அடிமை வேலை இருந்தாலும் சாப்ட்வேர் எம்.என்.சி கூடவே என்ஜினியர் அட்ரா சக்க....
பிறகு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் நம்பருக்கு போன் செய்து உங்களுக்கு ஒரு மகள் இருப்பதாகவும் அவளும் பி.ஈ அல்லது அதற்கும் மேல் படித்தவள் என்றும் உங்கள் மகனின் புரோபைல் எங்களுக்கு பிடித்திருக்கிறது என்றும் சொல்லுங்கள். உடனே அந்த பையனின் தகப்பனாரிடமிருந்து கீழ்கண்ட கேள்விகள் வரும்.

வரதட்சணை வாங்கி திருமணம் செய்துகொள்ளும் ஆண்களை நீங்கள் கால் மேல் கால் போட்டுக்கொண்டு சுண்ட விரலை அசைத்து அருகில் அழைத்து உங்களின் பாதணிகளின் அடிப்பகுதியில் இருக்கும் அழுக்கை துடைத்துவிட சொல்வதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.அவர்களும் மண்டி போட்டு துடைத்துவிட வேண்டும். நமக்கு உபயோகம் இல்லாத பொருளை எதற்காக நாம் விலை கொடுத்து வாங்கவேண்டும்
பொண்ணுக்கு என்ன செய்வீங்க? (டேய் கெழ நாயே...போற வயசுல உனக்கு
ஏன்டா இந்த ஆசை. பையனுக்கு பொண்ண புடிக்குமா? பொண்ணுக்கு பையனை புடிக்கும? பெண் எப்படி பட்டவள்...குடும்பம் எப்படி அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. முதலில் கேட்கும் கேள்வி பொண்ணுக்கு என்ன செய்வீங்க. அதாவது என்னுடைய என்ஜினியர் ஆண் மாட்டுக்கு என்ன விலை என்று கேட்காமல் பெண்ணுக்கு என்ன செய்வீர்கள் என்று தான் முதல் கேள்வி இருக்கும். குறைந்தது ஒரு கோடி எதிர்பார்ப்பார்கள்.
இப்படி கோடி கணக்கில் பணம் சேர்த்து வைக்காத அப்பாவி பெண்கள் ஏதாவது கூலி வேலை செய்பவனோடு குடும்பம் நடத்த வேண்டியிருக்கும். பல குடும்பங்களில் பெண் பள்ளியில் ஆசிரியையாக இருப்பாள் ஆண் கூலி வேலைக்கு போவான். வரதட்சணை மட்டும் பத்து முதல் இருபது லட்சம் கேட்பான்.
இன்னும் சில கிழ அப்பாக்கள் ஒரு கோடி இருந்தால் பேசுங்கள்...இரண்டு கோடி இருந்தால் பேசுங்கள் என்பார். நீங்கள் அவரிடம் சம்மந்தம் பேச போனால் அவர் கேட்கும் முதல் கேள்வியே இது தான். எப்படி இருக்கிறது பாருங்கள்.
ஆக இப்படி வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய சக்தி உள்ள பெண்கள் செய்து கொள்ளுங்கள். ஆனால் செய்துகொண்ட பின் ஒன்றை மட்டும் மனதில் நிலைநிறுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு கோடியோ இரண்டு கோடியோ அல்லது பல லட்சமோ கொடுத்து அந்த ஆண் மாட்டை விலைக்கு வாங்கியிருக்கிறீர்கள். மாட்டை வாங்கி கயிறு கட்டி இழுத்துக்கொண்டு வருவோம். ஆனால் ஆணாதிக்க சமுதாயத்தில் மாடு ஓனருக்கு கயிறு (தாலி) கட்டுகிறது. பரிதாபம்.
இப்படி வரதட்சணை கொடுத்து ஒரு வீட்டில் நீங்கள் வாழ போகிற போது அந்த வீட்டிலிருக்கும் மாமனார் மாமியார் மற்றும் உங்கள் கணவன் உங்களுக்கு அடிமை பிராணிகளாக இருக்க நீங்கள் எதிர்பார்ப்பதில் தவறேதும் இல்லை. வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் மாமனார் வீட்டில் கீழ்கண்டவற்றை எதிர்பார்க்கலாம்.
வரதட்சணை கொடுத்து வாங்கிய மாடு வீட்டு வேலை செய்யட்டும். எஜமானிக்கு சேவை செய்வது தானே அவனுக்கு அழகு. பின்னே ஒரு கோடிக்கு அவனை வாங்கிவிட்டு நாம் அவன் ஜெட்டியை துவைத்து போடுவது எவ்வகையில் ஞாயம். கணவனே கண் கண்ட தெய்வம் என்றா சொல்கிறாய் தாயே ஒரு கோடி இல்லையென்றால் உனக்கு கணவனே இல்லை.
உங்கள் மாமனார் உங்கள் உள்பாவாடையை துவைத்து போடட்டும். உங்களிடமிருந்து ஒரு கோடி இரண்டு கோடி என்று பேரம் பேசி தன் மகனை விற்றிருக்கிறார். புரோக்கர் வேலை பார்த்திருக்கிறார். உங்கள் கணவனின் சேவையில் ஏதேனும் குறைபாடு இருந்தால் உடனடியாக உங்கள் மாண்புமிகு மாமனாரை அணுகுங்கள்.
வரதட்சணை ஒழிப்பது கடினம் என்றாலும் இப்படி வரதட்சணை கொடுத்து மாட்டை வாங்கிவிட்டு அந்த வீட்டில் நீங்கள் போய் தொழுவத்தில் உட்கார்ந்துகொள்ளாதீர்கள் பெண்களே. ஆளவேண்டியது நீங்கள்.