Sunday, 6 December 2009

செக்ஸ் சாமியார் செய்த நன்மைகள்.

சமீபத்தில் ஒரு சாமியார் கோயில் கருவறைக்குள் பெண்களை அழைத்து வந்து சல்லாபித்திருந்தார் என்ற செய்தி வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் அந்த வீடியோ காட்சி ஒன்றை தோழி மெயிலுக்கு அனுப்பியிருந்தாள். அதை பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியோ வேதனையோ ஏற்படவில்லை. ஏனெனில் நான் சாமியார்களையோ பாதிரியார்களையோ கடவுளின் மினி தூதர்கள் என்று பாவிக்கும் மனப்பான்மை உடையவள் அல்ல. பல்வேறு பெண்கள் சாமியார்களை பாதிரியார்களை கடவுளின் மினி அவதாரங்களாக பாவிப்பதும் அவர்களின் காலில் விழுவதும் அவர்களிடம் மண்டியிடுவதும் சாமியார்களின் சொல்லே மந்திரம் என்று திரிகிறார்கள். நான் அப்படி அல்ல. நான் சாமியார்களும் ரெத்தமும் சதையுமால் ஆன மனிதர்கள் என்பதை உணர்ந்தவள். அதனால் எனக்கு அதை பார்த்தவுடன் அதிர்ச்சியோ ஆச்சரியமோ ஏற்படவில்லை.

சாதாரண மனிதர்களான இவர்கள் மத தொண்டாற்றுகிறார்கள். நாம் எப்படி அன்றாடம் வேலைக்கு போய் சம்பாதிக்கிறோமோ அது போல் இவர்கள் மத தொண்டின் மூலம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் போதைனை செய்கிறார்கள் மந்திரம் சொல்கிறார்கள். அதனால் அவர்கள் எல்லாம் உத்தமர்கள் செக்ஸ் ஆசையை துறந்தவர்கள் என்றெல்லாம் கற்பனித்துக்கொண்டு நம் பெண்கள் சாமிகளுக்கு சிகப்பு புடவை கட்டிக்கொண்டு பூஜை செய்வதும் அம்மா...ஆத்தா...சாமி என்று காலில் விழுவதுமாக கிட்ட தட்ட மத குருக்களை கடவுளாகவே ஆக்கிவிட்டிருக்கிறார்கள். நான் அப்படி பட்ட மூட நம்பிக்கைகளுக்கு அடிமையானவள் அல்ல.

அந்த சாமியாருக்கு செக்ஸ் ஆசை வந்ததில் தவறில்லை. அவரும் மனிதர் தானே. அடுத்து அவர் வேசிகளை அழைத்து அவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களோடு சல்லாபிக்கிறார். அதிலும் தவறில்லை என்றே சொல்லியாக வேண்டியிருக்கிறது. காரணம் பெண்களில் இன்னும் பல பேர் பணத்திற்காக தங்கள் உடலை விற்கும் கேவலத்தை செய்யும் பொருளாதார பலவீனர்களாகவே இருக்கிறார்கள். ஒரு வகையில் அப்படி செய்யவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் பெண்களுக்கு சாமியார் உதவினார் என்று கூட கொள்ளலாம்.

ஆனால் அவர் செய்தவற்றில் தவறு என்று நான் கணிப்பது பல பேர் நம்பும் கடவுளின் கருவறையில் அந்த காரியங்களை அரங்கேற்றியது பிறகு அதை வீடியோ எடுக்கும் வக்கிரமும் தான்.

மற்றபடி பலர் ஆச்சரியப்படுவது போலவும் குய்யோ முய்யோ என்று கத்துவதும் போலவும் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பது என் கருத்து. நீங்கள் சேற்றை வாரி அக்குளில் பூசிக்கொள்கிறீர்கள். பிறகு அது நாறுகிறது என்று சொல்வதில் பிழை உங்கள் பக்கம் தான் இருக்கிறது. சாமியார்களை நீங்கள் மினி டெமி காட் என்ற வகையில் வைத்து பார்த்தது உங்கள் தவறே அன்றி சாமியாருடையது அல்ல. சாமியார் ஒரு சாமானிய வாழ்க்கை வாழ பிரியப்பட்டார். அதையே அவர் செய்தார். ஆனால் அவரை கடவுளாக பாவித்து வணங்கி வந்த நாம் தான் கேனைகள் என்பதை இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள்.

அவ்வப்போது சாமியார்களின் சிற்று லீலைகள் வெளிவருவது உண்மையில் ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
ஆனால் பிரேமானந்த தொடங்கி எத்தனை சாமியார்கள் உள்ளே போனாலும் மன பிராந்து பிடித்த நம் மக்கள் இன்னும் சாமியார்களை வெறும் மத போதைகம் செய்து வயிற்றை கழுவும் நம்மை போன்றதொரு தொழிளாலி என்று பார்க்காமல் கடவுளாகவும் வேத வாக்கு சொல்பவராகவும் அற்புதம் செய்பவராகவும் நம் கஷ்டங்களை எல்லாம் போக்க வல்லவராகவும் கிட்ட தட்ட கடவுளின் அவதாரமாகவும் பார்க்கிறார்கள். அதை நிறுத்திக்கொண்டால் நல்லது.

இல்லையேல் உங்கள் சேறு பூசிய அக்குள் நாறத்தான் செய்யும் அதற்கு சேறு ஒன்றும் செய்ய முடியாது.

ac

8 comments:

என்ன கொடும சார் said...

அந்த படத்தை தவிர்த்திருக்கலாம்.. இதைப்பற்றி எழுதுவது ஒருவகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அதைவிட அதிகமாக இன்னும் பலர் அந்த வீடியோவை தேடிப்பார்க்கவைக்குமல்லவா.. என்து வலைப்பூவுக்கும் வருகை தர அழைக்கிறேன்.. http://eksaar.blogspot.com/

arun said...

ungalidam pidithathe intha karuthu thaan. Pengal pakkam thavaru irunthaalum kandikkirigal. Athai othukkolla maruppathu illai. Ungal post anaithum arumayaga ullathu. Niraya eluthungal.

KATHIR = RAY said...

Vanthu parunga vaaltha sollunga
http://kannivirgin.blogspot.com/2008/09/blog-post.html

Anonymous said...

i agree wit u....

என் நடை பாதையில்(ராம்) said...

எல்லாத் தவறுக்கும் காரணம் நாம் தான். மற்றவர் மேல் குறை கூற யாருக்கும் தகுதி இல்லை. ஏமாறுபவர்கள் இருந்தால் ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான்செய்வார்கள்.

அண்ணாமலையான் said...

நாம் கடவுளையும் புரிந்து கொள்ள்வில்லை, கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளுவதில்லை. அய்யர் “கருவறை என்பதை வேறு விதமாக புரிந்து கொண்டு விளக்கம் தேடீயிருக்கிறார் என்பது தெரிகிறது”

KASBABY said...

சரியான கருத்து.மனிதன் எல்லாம் உணர்ச்சிகளுக்கு அடிமை.பூசாரிக்கு மட்டும் உணர்ச்சி இல்லையா என்ன.ஆனால் அந்த பெண் விபசாரியோ/இல்லையோ இதில் பிரசினை என்பது,பலரும் இருக்கும் இடத்தில செய்த நம்பிக்கை துரோகம் தான்.ஏனெனில் இவனோ பூசாரி மட்டுமே,எத்தனையோ சாமியார்கள்,கடவுளின் அவதாரம் என்று சொல்லுபவர்களும்,பெண்களுடன் சல்லாபித்து வீடியோ-வும் எடுத்து வைத்துள்ளனர்.முடிந்தால் இணைய தளங்களில் தேடி பாருங்கள்.....அவை எண்ணிலடங்கா,.......

Anonymous said...

இன்றுதான் உங்கள் வலைப்பதிவை பற்றி சுகுணா திவாகர் அவர்களின் வலை பதிவு மூலம் அறிந்தேன். இனி தொடர்ந்து உங்கள் வலைப்பதிவை தொடர்வேன். உங்கள் கருத்துக்கள் மறுத்து பேச முடியாத அளவிற்கு உள்ளது. வாழ்த்துக்கள்.