Wednesday 1 June 2011

மனைவியின் ஆடைகளை துவைக்க வழிமுறைகள்(1)

மனைவியின் ஆடைகளை கணவன் துவைப்போது போன்ற காட்சிகள் எப்போதும் சினிமாவில் காமெடி மயமாகவே சித்தரிக்கப்படுகின்றன. அதே நேரம் ஒரு பெண் கணவனின் துணியை துவைப்பதோ தண்ணீர் சுமந்து வருவதோ வீட்டில் கழிவறையை சுத்தப்படுத்துவதோ இயல்பான காட்சிகளாக வடிக்கப்படுகிறது. மனைவியின் துணிகளை கணவன் துவைத்துப்போடுவதில் என்ன காமெடி இருக்கிறது என்று கேட்கிறார் என் தோழியின் கணவர்.

"என் மனைவி என்னை விட அதிகம் சம்பாதிக்கிறார். அதிகம் படித்தவர். ஒரு அலுவலகத்தில் பத்து பேரை கட்டி மேய்க்கும் மேலாண்மை அதிகாரியாக பணி புரிகிறார். அவர் தினமும் நேர்த்தியாக உடை உடுத்துவது அவசியம். ஒரு காலத்தில் பெண்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்தார்கள். அப்போது அவர்களை நாம் கண்ட மேனிக்கு வேலை வாங்கினோம். இப்போது அவர்கள் படிப்பிலும் அறிவிலும் வேலை வாய்ப்பிலும் சம்பாத்தியத்திலும் நம்மை மிஞ்சி அசுர வேகத்தில் முன்னேறிவருகிறார்கள். இந்த சமுதாய சூழ்நிலையில் மனைவிமார்கள் துணி துவைப்பது போன்ற காட்சிகள் தான் உண்மையில் காமெடி காட்சிகளாக சித்தரிக்கப்பட வேண்டியவை.மேலும் கணவரை விட அதிகம் படித்திருந்தும் அதிகம் சம்பாதிக்கும் வேலையில் இருந்தாலும் வீட்டு வேலைகளை பெண்கள் தான் செய்யவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது எத்தனை பெரிய கொடுமை.ஆண்கள் பெண்களின் ஆடைகளை துவைத்துப்போடுவது தான் யதார்த்தம்."

அவர் சொல்வது எத்தனை நிதர்சனம்.

ஒரு ஆராய்ச்சி கூடத்தில் உயர் அதிகாரியாக பணிபுரியும் மற்றொரு தோழியிடம் கேட்டபோது "பெண்களை அடிப்பது ஆபாசமாய் பேசுவது அதே போல் பெண்களை வீட்டு வேலை செய்ய பணிப்பது சில நேரங்களில் வீட்டில் மனைவியிடம் எதிர்த்து பேசுவதை கூட வன்கொடுமை சட்டத்திற்கு கீழ் கொண்டு வரவேண்டும்" என்று ஆதங்கத்தோடு தெரிவித்தார். உண்மையில் பெண்கள் இன்று படும் பாட்டை பார்க்கிற போது இது போன்ற சட்டங்கள் வந்தால் தான் பெண்கள் தங்கள் முன்னேற்ற பாதையில் இன்னும் பல சாதனைகளை செய்ய முடியும் என்று நம்புகிறேன்.

பிரபல பதிவர் ஒருவர் பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் போதெல்லாம் இவ்வாறு சொல்வார். அதாவது மாணவர்களை வீட்டில் எப்போதும் பருப்பு வாங்கிட்டு வா அப்பளம் வாங்கிட்டு வா என்று அடிக்கடி கடைக்கு அனுப்புகிறார்களாம். அதனால் தான் அந்த சீமான்களால் அதிக அளவில் தேர்ச்சி பெற முடியவில்லையாம். அடடே என்ன ஒரு கண்டுபிடிப்பு!!!

நேற்று கண்ட காட்சி. ஒரு பெண் சாலையில் சிவனே என்று நடந்து போய்க்கொண்டிருக்கிறார். பருப்பு அரிசி வாங்க கடைக்கு ஓடி ஓடி உழைத்து கிடைக்கும் நேரத்தில் படிக்கும் ஆண் குஞ்சுகள் எல்லாம் பத்து பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தான் பின்னால் வருவதும் சத்தமிடுவதும் ஊளையிடுவதுமாக என்ன அருமையாக தெருவில் அந்த பெண்ணை கேலி செய்தவாறு தங்கள் வேதியில் அறிவியல் புத்தகத்தை திறந்து படித்து திண்டாடுகிறார்கள்.

அன்பு நண்பரே நீங்கள் யோசித்து பாருங்கள். பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக அளவில் தேர்ச்சி பெறும் எம் குல மாணவிகள் எல்லாம் அடுத்த ஐந்தாண்டுகளில் அதே மிதமான முன்னேற்றத்தை ஆண்களுக்கு நிகராக பெற முடிகிறதா. பத்தாம் வகுப்பிலோ பிளஸ் டூவிலோ ஒரு மாணவனை விட அதிக மதிப்பெண் பெற்ற மாணவியை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பத்து வருடம் கழித்து இருவரின் நிலையும் என்ன என்று பாருங்கள். பிளஸ் டூவில் மாணவனை படிப்பில் வீழ்த்திய மாணவி தொடர்ந்து தன் வாழ்க்கையில் அந்த மாணவனை கல்வியிலும் அறிவிலும் வாழ்க்கை முறையிலும் வீழ்த்த முடிகிறதா?

அது தான் எங்களின் வாழ்க்கை. மாணவர்கள் பருப்பு அரிசி வாங்க கடைக்கு போவதால் அதிகம் தோல்வியுறவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆண்கள் எப்போதும் போலத்தான் படிக்கிறார்கள். பெண்கள் நாங்கள் தான் எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் கொஞ்சூண்டு வாய்ப்பை பயன்படுத்தி எங்களை நாங்களே முன்னேற்றிக்கொள்கிறோம். ஆண்களை விட பெண்கள் கல்வியில் பிரகாசிக்க முடியும் என்பதற்கு வருடா வருடம் சான்றுகள் வந்துகொண்டு தானே இருக்கின்றன. சொல்லப்போனால் உங்களை விட நாங்கள் தான் அறிவில் மேன்மக்கள். ஆனால் பிளஸ் டூவில் சாதிக்கும் நாங்கள் அடுத்தடுத்த கலாசார கட்டுப்பாடுகளில் சிக்கி சிதறுண்டு முப்பது வயதில் சமையல்காரியாகவும் கக்கூஸ் கழுபுவளாகவும் கணவனின் ஜெட்டி துவைத்து போடுபளாகவும் குழந்தையின் பீ அள்ளி கழுவி விடுபவளாகவும் மாறிப்போகிறோம். நீங்கள் ரொம்ப பாவம் அரிசி பருப்பு வாங்க கடைக்கு ஓடி ஓடியும் என்னவா முன்னேறுகிறீர்கள்?


சரி இனி மனைவியின் ஆடைகளை துவைத்து பராமரிப்பது பற்றி பார்ப்போம். இது என்னுடைய கற்பனை அல்ல. முழுக்க முழுக்க மனைவியின் ஆடைகளை தானே துவைத்துப்போடும் ஒரு அற்புத கணவரிடமிருந்து வாய் வழியாக கேட்டுப்பெற்ற தகவல்களை அவருடைய அனுமதியோடு இங்கே எழுதுகிறேன்.

பிளவுஸ்:

பெண்களின் பல்வேறு ஆடைகளில் ஆண்கள் ரசித்து துவைக்கும் ஒரு ஆடை பிளவுஸ். காரணம் அதிலிருக்கும் ஒரு கிளுகிளுப்பு தான். பெரும்பாலான ஆண்களுக்கு தங்கள் மனைவிமார்களின் அக்குள் வாசம் முகர்ந்து பார்க்க பிடிக்கும். தினமும் இரவு தன் மனைவி வேலையிலிருந்து வீட்டுக்கு வந்து உடைகளை அறையில் அவிழ்த்து போட்ட பிறகு உள்ளே போய் பிளவுஸில் தன் மனைவியின் வியர்வை வாசத்தை முகர்வது தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார்.

பொதுவாக பிளவுஸ் அதிக நேரம் தண்ணீரில் ஊற வைக்கக்கூடாது. காரணம் சாயம் போய்விடும். பிறகு உங்கள் மனைவி காலையில் மேச்சிங்காக இல்லை என்று உங்களிடம் கோவித்துக்கொள்வார். எனவே பிளவுஸ் எப்போதும் அதிக நேரம் ஊற வைக்கக்கூடாது. அடுத்தது பெண்களை போல அவர்களின் ஆடைகளும் மிருதுவானவை. அதன் மேல் உங்கள் காட்டுமிராண்டி வன்புணர்ச்சி உணர்வுகளை வெளிப்படுத்தாதீர்கள். பிளஸை அடித்து துவைப்பது அறிவாளி எருமை மாடு மேய்க்க கூட லாயக்கில்லாதவன் என்பேன்.

பிளவுஸை சிறிது நேரம் ஊற வைத்த பிறகு மெதுவாக கல்லில் வைத்து குலுக்க வேண்டும். அதிலே வியர்வை போன்றவை கரைந்து போய்விடும். பிறகு சிறிய அளவில் மட்டுமே சோப்பு பயன்படுத்தவேண்டும். எங்காவது கரை தென்பட்டால் அங்கு மட்டும் அதிகமாக சோப்பு போடலாம். அல்லது மிதமான சோப்பும் நுரையுமே போதுமானது. பிரஷ் உபயோகிக்கலாம். ஆனால் தேவையான பிரதேசத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அக்குளில் கண்டிப்பாக பயன்படுத்தலாம். அதுவும் கை பகுதியை மறித்து உள் பகுதியில் தான் பிரஷ் போடவேண்டும். இரண்டு இழுப்பு போதும். எங்காவது கரை இருக்குமானல் கவனமாக அதை அகற்றுங்கள். திங்கட்கிழமை காலை நீங்கள் சமையல் செய்துகொண்டிருக்க உங்கள் மனைவி டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து "என்ன துவச்சிருக்கீங்க இங்க பாருங்க" என்று கறையை காட்டி பிளவுஸை உங்கள் முகத்துக்கு நேராக விட்டெறியப்போகிறார்கள் ஜாக்கிரதை.

நன்றாக அலசிவிடவேண்டும். அலசிய பிறகு கொக்கிகள் சரியாக இருக்கின்றனவா என்று கவனிக்கவேண்டும். சில கொக்கிகள் விரிந்திருந்தால் அவற்றை அமர்த்தி சரி செய்வது நலம். பிறகு நன்றாக பிழிந்து கொட்டை வெயில் கொண்டு காயப்போடுபவரா நீங்கள் அப்படியானால் உங்களுக்கு பன்றி மேய்க்கும் வேலை கூட கிடைக்காது. பிளவுஸ் எப்போதும் நிழலில் தான் உலர்த்தவேண்டும். எனவே வெயில் இல்லாத இடத்தில் காயப்போட்டு காய்ந்தவுடன் அருகிலிருந்து பத்திரமாக எடுத்துவிடுங்கள்.

எடுத்த பிறகு ஒரு முறை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு அயர்ன் செய்யவும். அயர்ன் செய்யும் போது அக்குள் பகுதியிலிருக்கும் சுருக்கங்கள் சுத்தமாக போய்விடவேண்டும். இல்லையென்றால் ஓரிரு முறை அப்படியே விட்டுவிட்டால் சுருக்கம் சேர்ந்துவிடும். அழகாக அயர்ன் செய்து உங்கள் மனைவியின் அலமாரியில் மடித்து வைத்துவிடுங்கள்.

விரும்பினால் அடுத்தடுத்த ஆடைகள் பற்றி அடுத்தடுத்த பதிவில்.




ஆண்களே நீங்கள் பிளஸ் டூவில் வாங்கிய மார்க்கை பார்த்தால் இது போன்ற பிளவுஸ் துவைக்க அறிவு போதாது தனியாக வகுப்பெடுக்கவேண்டும் போலல்லவா இருக்கிறது.

Monday 3 January 2011

யோனி ஆராய்ச்சி (திறக்காத மொட்டு)
















சமீபத்தில் ஒருவர் என்னோடு சாட் செய்தார். தன்னை பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டார். என் பிளாகை தொடர்ந்து படிப்பதாகவும் என்னுடைய கருத்துக்கள் பிடித்திருப்பதாகவும் சொன்னார். பிறகு என்னிடம் திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டார். நான் இல்லை என்றேன். உடனே அவரது பதில் என்ன தெரியுமா?

"வாவ்...திருமணம் ஆகவில்லையா? அப்போது நீங்கள் புதிய மொட்டு அப்படித்தானே? மன்னிக்கவும் திறக்காத மொட்டு. என்ன சரி தானே திறக்காத மொட்டு சரிதானே?"
என்று தொடர்ந்து பத்து முறை கேட்டு பதில் அனுப்பிக்கொண்டிருந்தார்.

இது தான் ஆண்களின் கம்பீரம். அதாவது இரண்டு கன்னத்தில் இரண்டு கையை முட்டு கொடுத்து நிறுத்தியபடி மண்டி போட்டு எப்போதும் நமது யோனியை ஆராய்வது தான் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை.

திறந்த மொட்டா? திறக்காத மொட்டா? அங்கே யார் யார் வந்து போகிறார்கள். அவர்கள் துப்பிவிட்டு போவது என்ன? அதன் வாசம் என்ன? சுவை என்ன? ஏன் அவர்களுக்கு எல்லாம் மொட்டு திறக்கிறது? இப்படி மண்டி போட்டு பெண்களின் மறைவு பிரதேசத்தை ஆராய்வது தான் ஆண்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை. அந்த மறைவு பிரதேசத்தை ஆராய்ந்து டாக்டரேட் பட்டம் பெற்றதன் விளைவு தான் கற்பு என்ற கர்மாந்திரம்.

அதாவது பெண்கள் மட்டும் தங்கள் உறுப்பை யாருக்கும் காட்டாமல் ஒருவனுககே அதை உரித்தாக்க வேண்டும் என்ற பாசிஸ சிந்தனை குறைந்தது பத்து தலைமுறை ஆண்கள் வேறு வேலை வட்டி இல்லாமல் பொழுது புலர்ந்து இரவு முழுதும் யோனியின் அருகே மண்டி போட்டு வேறு வேலை வட்டி இல்லாமல் யோசித்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பது இந்த திருமணமாகாது மொட்டின் கருத்து.

இப்படிப்பட்ட வம்சத்தில் வந்த ஆண் வர்க்கத்தை தான் நாம் வரதட்சணை கொடுத்து வாங்கி வைத்து குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறோம். வரிசையாக ஒரு ஆயிரம் யோனியை அடுக்கி வைத்தால் நாள் முழுத ஆராய்ச்சி செய்திகொண்டிருப்பேனே என்று உற்சாகமாக துள்ளி எழும் ஆண்களிடமிருந்து தான் இது போன்ற வக்கிரங்கள் வெளிப்படும். இவர்கள் கக்கூஸை ஆராய்வது போல் யோனியை ஆராய்ச்சி செய்துவிட்டு ஏதோ தாங்கள் தான் இந்த உலகில் மேன்மையாக படைக்கப்பட்டவர்கள் போல் பாவ்லா காட்டவேண்டும் அல்லவா? அதற்காகத்தான் வைத்திருக்கிறார்கள் தாலி மெட்டி கற்பு கன்ட்ராவி வாழாவெட்டி.

அதாவது அவர்களுக்கு ஆட்டை பலியிடுவது போதாது. நாமாகவே போய் என்னை பலியிடுங்கள் என்னை பலியிடுங்கள் எனக்கு வாழ்க்கை கொடுங்கள் என்னை வாழ வையுங்கள் என்று கெஞ்சவேண்டும். அதற்குத்தான் இந்த அடக்குமுறைகளும் சம்பிரதாயங்களும் பெண்கள் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது.

ஒரு பெண் என்ன படித்திருக்கிறாள். சமுதாயத்திற்கு அவள் என்ன தொண்டாற்றுகிறாள். அவள் என்ன வேலை செய்கிராள் இதை எல்லாம் விட ஆணுக்கு மிகவும் முக்கியமான ஒன்று அவள் திறந்த மொட்ட திறக்காத மொட்ட என்ற தகவல் மட்டுமே.

உதாரணமாக கார் டிரைவருக்கு தன் எஜமானியின் யோனி பற்றி கவலை. அவனுக்கு தன்னை விட படிப்பிலும் பணத்திலும் திறமையிலும் ஒரு பெண் சாதித்திருப்பது பற்றி வியப்பில்லை. அதை மதிக்கவோ ஆராதிக்கவோ அதன் பொருட்டு தன்னை உயர்த்திக்கொள்ளவோ அவனுக்கு எண்ணமில்லை . அவனுடைய கவலை எல்லாம் தன் எஜமானியின் யோனி எப்படிபட்டது என்பதே. இப்படிப்பட்ட ஆண்களுக்கும் தெருவில் மாடுகள் போட்டு வைக்கும் சாணத்துக்கும் எந்த வேருபாடும் இல்லை.

திருமணம் ஆனால் திறந்த மொட்டு இல்லையென்றால் திறக்காத மொட்டு என்று உங்களுக்கு நீங்களே ஒரு உன்னதமான முடிவுக்கு வந்து மகிழ்ந்துகொள்கிறீர்கள்.

"உங்கள் தாயும் திருமணம் ஆனவள் தான். அப்போது அவளை திறந்த மொட்டு என்று அழைப்பீர்களா? "
இப்படி நான் கேட்கப்போவதில்லை. இது போன்ற கேள்விகளை தமிழின் வடிகட்டிய ஆணாதிக்க இயக்குனர்கள் தான் கேட்க முடியும். அவர்கள் தான் அப்பாவி பெண்களை வைத்து இப்படியெல்லாம் கேட்கச்சொல்வார்கள்
"நீ அக்கா தங்கச்சியோட பொறக்கலையா? நான் உன் அம்ம மாதிரிடா எட்சட்ரா எட்சட்ரா..."
அக்கா தங்கச்சியோட பொறந்தவன் மட்டும் யோக்கியமா எல்லா பெண்களை அக்க தங்கச்சி போல் நினைக்கவேண்டும் என்று நான் அறிவுறுத்தவில்லை மாறாக அக்க தங்கச்சியோடு பொறந்தவன் பிற பெண்களை போல தன் அக்க தங்கச்சி மனைவி தாய் போன்ற தன் பெண் உறவுகளுக்கும் உரிய மரியாதையும் சுதந்திரமும் கொடுக்கட்டுமே. சன் மியூசிக்கில் வரும் 18 வயது பெண்ணை மேடம் என்று அழைக்கும் நீ உன் மனைவியை அழைக்க மட்டும் கூசுவது ஏன். அவளை மட்டும் வாடீ...போடீ என்று உன் ஆண் திமிரை கட்டி அழைத்து மகிழ்வது ஏன்?

எது எப்படியோ ஆண் திமிர் பிடித்தவர்களுக்கு பெண்களை வெறும் யோனியை சுமக்கும் பொம்மைகளாக பார்க்க மட்டுமே அறிவு வளம் பெற்றிருக்கிறது என்பதை அறிகிறபோது கேலி சிரிப்பு தான் வருகிறது.
வாழ்க ஆண்களின் யோனி ஆராய்ச்சி.