தாலி என்னும் தரித்திரத்தை நினைத்தாலே எனக்கு கோபம் வரும். பழங்காலங்களில் அடிமைகளை குறிக்க அவர்களின் கழுத்தில் ஒரு வளையம் போடுவார்கள். அந்த வளையத்தை அவர்கள் எப்போதும் அணிந்து கொண்டிருக்க வேண்டும். அடிமையாய் இருப்பவனுக்கு தான் எப்போதும் அடிமை எஜமானர்களுக்கு அடங்கி போக வேண்டும் என்பதை நினைவூட்டுவதற்கும் எஜமானர்களுக்கு இவன் நமக்கு அடிமை இவனை நசுக்கலாம் என்று உற்சாகமூட்டுவதற்குமாக கொண்டு வரப்பட்ட வழக்கம் தான் மாறி பெண்களை அடிமை பார்வை பார்க்க ஆண்கள் உருவாக்கி வைத்தனர் - தாலி.
அப்படி சங்கிலி பிணைக்கப்பட்ட அடிமை என்ன செய்யவேண்டும் தெரியுமா...எஜமானர்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும் - இது பெண்கள் விஷயத்தில் பெண் பார்க்க வரும் போதே தொடங்கிவிடுகிறது.
அடுத்து அவர்களின் அழுக்கு துணிகளையும் கழிப்பறையையும் சுத்தம் செய்ய வேண்டும். - வீட்டு வேலை பெண்கள் செய்ய வேண்டியது என வற்புறத்தப்பட்டு காலம் காலமாய் பெண்ணை ஒரு சம்பளம் இல்லாத வேலைக்காரியாய் மாற்றிவிட்டார்கள்.
எஜமானர்களை எதிர்த்து நாம் எதுவும் செய்துவிட முடியாது - பெண்கள் ஆண்களை எதிர்த்து பேசக்கூடாது. கணவன் அடித்தால் திருப்பி அடிக்க கூடாது. மண் சோறு சாப்பிட வேண்டும். நோன்பு இருக்க வேண்டும். அந்த அடிமை வளையத்தில் அதாவது தாலியின் கும்குமம் வைத்து கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டுமாம். ஆண் என்ன கடவுளா. அப்படி கடவுளையே பகுத்தறிவு என்னும் ஆயுதம் கொண்டு எதிர்க்கும் காலகட்டத்தில் ஒரு சாதாரண மனிதன் ஒரு ஆண் என்பதால் அவனை கடவுள் என பாவிக்க யார் சொல்லி கொடுத்தது. ஆண்கள். அவர்கள் தான் அடிமை விலங்கு என தாலியை கட்டி இனி மேல் நீ என் அடிமை என கூவி அவர்களை அவர்களாஎ கடவுளாக்கிக்கொண்டார்கள். எத்தனை சிரிப்பு வரவைக்க கூடிய விஷயம் பாருங்கள்.
அழகான பெண்கள் அழைத்தால் ஆண்கள் இப்படி வரவும் தயார்.
அடுத்து எஜமானர்கள் தின மிச்சத்தை சாப்பிட வேண்டும். - கணவன் சாப்பிட்ட எச்சில் தட்டில் மனைவி சாப்பிட வேண்டுமாம். இது எத்தனை வக்கிரம் பாருங்கள். தான் தின்ற எச்சிலை மனைவி சாப்பிட வேண்டும் என விரும்பும் ஆண் ஹிட்லரை விட சாடிஸ்ட் என்று தானே சொல்ல வேண்டும். ஆண் என்றல்ல ஒரு சமுதாயமே அதை விரும்புகிறது. அப்படி தான் பெண் சாப்பிட வேண்டும் என்று பண்பாட்டு போர்வையில் அடிமை தனத்தை திணிக்கிறது. அதற்கெல்லாம் சங்கிலி போட்டாற் போல ஒரு தாலியை கழுத்தில் கட்டிவிட்டால் போதும். யோசித்து பாருங்கள் பெண் என்பவள் உங்களை போல் ஒரு ஜீவராசி. இந்த பூமியில் பிறந்தவள். அவளை உங்கள் சுக போதைக்கு அடிமை போல் வளர்த்து மிகவும் கீழான ஆண் வர்க்கத்தை மேலாக காட்ட வேண்டும் என்பதற்காக பெண்களை அடிமை படுத்தி பார்த்த உங்களை என்ன சொல்வது.
பிறகு எஜமானர்களுக்கு கால் அமுக்கி விட வேண்டும் விசிறி விட வேண்டும். இதுவும் பெண்கள் மேல் திணிக்கப்பட்ட அடிமை பணிகள். இப்போது அப்படி இருக்கிறதா தெரியாது ஆனால் நம் அம்மா அப்பா காலத்தில் நிச்சயம் இருந்திருக்கும். பிறகு எஜமானர்களின் செக்ஸ் தேவைகளை அடிமைகள் பூர்த்தி செய்ய வேண்டும். அது தான் காட்டு யானை போல் வந்து விழுகிறீர்களே ஆண்களே. தாலி ஒன்றை கட்டிவிட்டு அப்படா இனி எல்லாம் ஓசி என்று மனைவியின் விருப்பம் இல்லாமலே அவளை தொட்டு உங்கள் ஆண்மையை நிலைநாட்டுகிறீர்கள். இது எந்த வகையில் வீரம் ஆண்மை என்று எனக்கு தெரியவில்லை. ஒரு பெண்ணை அவளது அனுமதி இல்லாமல் தொட்டு புணர்ந்து இன்பம் கண்டு விட்டு அதை ஏதோ பெரிய ஆண் சிங்கம் செய்யும் சாகச ச்யல் போல் மீசையை முறுக்கி விட்டுக்கொள்வது எந்த ஊர் வீரம் என்று புரியவில்லை. வெட்கப்படுங்கள் ஆண்களே. வெட்கம்.
இப்படி அடிமை சின்னமான தாலியை பெண்கள் கழுத்தில் கட்டி அவர்களை அவமதிப்பதை இந்த சமுதாயம் இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறது. அந்த தாலி என்னும் திரு விலங்கை ஆண்கள் தங்கள் சட்டைக்கு மேல் அணிந்துகொள்ளும் காலம் வரும். வாழ்க்கை ஒரு சக்கரம். வரலாறில் வென்ற நாடுகள் தோற்றும் இருக்கின்றன. தோற்ற நாடுகள் வென்றும் இருக்கின்றன. நம் நாள் வரும் பெண்களே.....கலங்காதீர்கள்.
-----------------
போன பதிவை பாராட்டி நிறைய கடிதங்கள் வந்தன. குறை சொல்லியும் எழுதி இருந்தார்கள். நீங்கள் ஒரு அண்ணனாய் ஒரு தந்தையாய் அந்த பெண்ணை பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் அந்த ஏமாற்றிய கயவனை கொல்ல வேண்டும் என ஆத்திரம் வரும். அதே கோபமும் ஆத்திரமும் தான் எங்களுக்கு வந்தது. நாங்கள் தண்டித்தால் உங்களுக்கு அது கொடூரமாக இருக்கிறது அல்லவா. எத்தனை குடிசைகளில் கணவன் குடித்துவிட்டு வந்து மனைவியின் தலை முடியை கொத்தாய் பிடித்து அடித்திருப்பான். அப்போது எல்லாம் இந்த ஆண் குஞ்சுகள் எங்கே போயிருந்தன என்பது தெரியவில்லை.
சமுதாயத்தில் உங்கள் உரிமையை எப்போதும் விட்டு கொடுக்காதீர்கள். ஆண்கள் உங்களை ஒரு கேலி பொருளாக பார்க்க விடாதீர்கள். ஆண்களுக்கு பெண்கள் மீது ஒரு பயம் வர வேண்டும். நம்மை ஒரு பயபக்தியோடு ஒரு பிரமிப்போடும் அணுக வேண்டும். நம்மிடம் மிகுந்த மரியாதையோடு தான் பேச வேண்டும். எந்த இடத்திலும் ஒரு ஆண் வல்லவன் என நினைத்துவிடாதீர்கள். நாம் தான் இந்த உலகத்தில் இறைவனின் சிறந்த படைப்பு என்பதை எபொபதும் மனதில் கொள்ளுங்கள்.
பொது இடங்களில் ஆண்கள் உங்களுக்கு தொல்லை கொடுத்தால் பணிந்து போகாதீர்கள். எதிர்த்து கேளுங்கள். பணிந்து போகவேண்டியவர்கள் ஆண்களே அன்றி நீங்கள் அல்ல. பெண்கள் எதிர்த்து கேட்டால் நொறுங்கி போகும் அளவுக்கு பலவீனமானவர்கள் தான் ஆண்கள். குடித்துவிட்டு கெட்ட வார்த்தையில் திட்டுவதை தான் வீரம் என்றும் ஆண்மை என்றும் நம்பிக்கொண்டிருக்கும் கோமாளிகள் அவர்கள். விடாதீர்கள். உங்களை நோகடித்தால் புகார் கொடுங்கள். தண்டனை வாங்கிக்கொடுங்கள். சட்டமும் சமுதாயமும் உங்கள் பக்கம்.
---------
பெண் வீட்டின் தலைவியாகவும் ஆண் அடிமையாகவும் வாழ பிரியப்படும் ஒரு தம்பதியினரின் சுவார்ஸ்யமான கடிதமும் பதிலும் அடுத்த பதிவில்.
உங்கள் கருத்துக்களையும் கேள்விகளையும் எனக்கு எழுதுங்கள்.
உங்கள் தோழி
வின்சி
vincyontop@gmail.com
Monday, 3 August 2009
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
வின்சி ..ரூம் போட்டு யோசிச்சு எழுதுறீங்க போல..உங்களை ஒன்னு கேட்கணும் ..உங்க மின்னஞ்சல் முகவரியில் vincyontop ன்னு இருக்கே..எதுக்காக இப்படி ஒரு முகவரி? -எதை குறிக்க இது? அதை குறிக்க தனா?
அருண்
r u in 1950
பெண்களை ஆண்கள் காவல் புரிவதால்
பெண்மை தாழ்ந்ததன்று.
வன்மை இரும்புப்பெட்டி மென்மை தங்கத்தை காப்பாற்றுகிறது.
தங்கம் தாழ்ந்ததென உலகம் கருதுகிறதா?
- வாரியார்
நீங்க ஒரு FETISH என நினைகிறேன்
நீங்க ஒரு என நினைகிறேன்
After looking at a few of the articles on your site, I
honestly appreciate your technique of writing a blog.
I bookmarked it to my bookmark webpage list and will be checking back soon. Please visit my web
site too and let me kno how you feel.
Here iss my blog post: Cars 3 posters
Post a Comment